கபீர்வாத்
கபீர்வாத் (Kabirvad) என்பது நருமதை ஆற்றில் ஒரு சிறிய நதித் தீவில் அமைந்துள்ள ஒரு ஆலமரம்.[1] இது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாரூச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இம்மரமும் இடமும் 15 ஆம் நூற்றாண்டின் மாயக் கவிஞர் கபீருடன் தொடர்புடையது. கபீருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் உள்ளது. ஆலமரம் டாட்டூனில் இருந்து முளைத்ததாக நம்பப்படுகிறது (பல் துலக்குவதற்கு பயன்படுத்தப்படும் குச்சம்). இந்த இடம் மதத் தலமாகவும், பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.[2][3][4]
கபீர்வாத் | |
---|---|
வகை | ஆல் () |
இடம் | கபீர்வாத் ஆற்றுத்தீவு பரூச் மாவட்டம், குசராத்து, இந்தியா |
ஆள்கூறுகள் | 21°45′48″N 73°08′24″E / 21.7633869°N 73.140089°E |
Custodian | வனத்துறை, குஜராத் அரசு |
விரிவாக்கம்
தொகுமகா அலெக்சாண்டரின் படைத்தளபதியான நியார்சஸ் நர்மதா நதிக்கரையில் ஒரு குறிப்பிட்ட மரத்தினைப் பற்றி விவரித்துள்ளார். அது கபீர்வாதாக இருக்க சாத்தியமுள்ளது. மரத்தின் விதானம் மிகவும் விரிவானது, அது 7000 பேருக்கு அடைக்கலம் கொடுக்கும் பரப்பு கொண்டது. இது பின்னர் ஜேம்ஸ் ஃபோர்ப்ஸ் (1749-1819) தனது ஓரியண்டல் மெமோயர்ஸ் (1813-1815) இல் இம்மரமானது கிட்டத்தட்ட 610 மீட்டர் (2000 அடி) சுற்றளவும் 3000-இற்கு மேற்பட்ட கிளைகளைக் கொண்டது எனவும் விவரித்துள்ளார். தற்போது அதன் விதானமானது 17,520 சதுர மீட்டர் (4.33 ஏக்கர்கள்) பரப்பளவுடனும், 641 மீ (2103 அடி) சுற்றளவுடன் காணப்படுகிறது.[5]
போக்குவரத்து
தொகுபரூச்சில் இருந்து ஜானோருக்கு சுக்லாரித் வழியாகச் செல்லும் போது கபீர்மதி என அழைக்கப்படும் ஓரிடத்தில் உள்ளது. இங்கிருந்து படகு சவாரி மூலம் மக்கள் ஆற்றுத் தீவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
புராணக்கதை
தொகுகுஜராத்தின் பரூச் மாவட்டத்தில் மங்களேஷ்வர் கிராமத்திற்கு அருகில் உள்ள சுக்லதீர்த் என்ற கிராமத்தில் ஜீவா மற்றும் தத்வா என்ற இரண்டு பிராமண சகோதரர்கள் இருந்ததாகவும், ஒருமுறை, அவர்கள் ஒரு உண்மையான துறவியைக் கண்டுபிடிக்க தூண்டப்பட்டதாகவும், எனவே, உண்மையான துறவியை அடையாளம் காண, அவர்கள் தங்கள் முற்றத்தில் ஒரு ஆலமரத்தின் உலர்ந்த செடியை நட்டு, எந்தத் துறவியின் கால்-தேன் காய்ந்த தளிர்களை பச்சை நிறமாக மாற்றுகிறதோ, அந்தக் கால்களுக்குச் சொந்தமானவர் தான் உண்மையான புனிதர் என்று முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.[6][7][8] கபீர் சாஹிப்பின் அடி-அமிர்தத்தால் மட்டுமே அந்த காய்ந்த மரக்கன்று பச்சை நிறமாக மாறியது.[9] அதுவே இன்று கபீர்வாத்தில் உருவாகியுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tale of Jeeva and Datta (Tatva) | Kabir". kabirsahib.jagatgururampalji.org. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
- ↑ "Kabirvad". Gujarat Tourism. Archived from the original on 20 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 December 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Network, Divyabhaskar (6 April 2015). "Amazing: नर्मदा नदी के टापू पर 3 किमी तक फैला है यह बरगद का पेड़". dainikbhaskar (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 14 December 2016.
- ↑ "Crocodile fear hits footfall in Bharuch tourist spot". The Indian Express. 22 June 2014. பார்க்கப்பட்ட நாள் 14 December 2016.
- ↑ Bar-Ness, YD (June 2010). "The World's Largest Trees? Cataloguing India's Giant Banyans" (PDF). Outreach Ecology. p. 6. Archived from the original (PDF) on 4 January 2018. பார்க்கப்பட்ட நாள் 3 January 2018.
- ↑ Lorenzen, David N. (2006). Who Invented Hinduism: Essays on Religion in History (in ஆங்கிலம்). Yoda Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-902272-6-1.
- ↑ Not Available (1909). Journal Of The Royal Asiatic Society (1908) Vol.23.
- ↑ Forbes, James (1834). Oriental Memoirs Vol.1.
- ↑ Lorenzen, Professor Centre of Asian and African Studies David N. (1991-01-01). Kabir Legends and Ananta-Das's Kabir Parachai (in ஆங்கிலம்). SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-0461-4.