கமலா சாங்கிருத்யாயன்
கமலா சாங்கிருத்யாயன் (Kamala Sankrityayan) என்பவர் 20 ஆம் நூற்றாண்டின் இந்திய எழுத்தாளரும், ஆசிரியரும், இந்தி மொழி அறிஞரும் ஆவார். இவர் வரலாற்றாசிரியர் ராகுல சாங்கிருத்யாயனின் மனைவியாவார்.[1]
கமலா சாங்கிருத்யாயன் | |
---|---|
பிறப்பு | காளிம்பொங், மேற்கு வங்காளம், இந்தியா | 15 ஆகத்து 1920
இறப்பு | 25 அக்டோபர் 2009 டார்ஜீலிங், மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 89)
தேசியம் | இந்தியா |
பணி | எழுத்தாளர், மொழி அறிஞர் |
சுயசரிதை
தொகுகமலா சாங்கிருத்யாயன், 15 ஆகஸ்ட் 1920இல் மேற்கு வங்காளத்தில் உள்ள காளிம்பொங்கில் பிறந்தார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இந்தி-ஆங்கில அகராதியை உருவாக்கும் போது 1949இல் பண்டிட் ராகுல் சாங்கிருத்யாயனை சந்தித்தார். இருவரும் 1950இல் திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டில் இவரது முதல் சிறுகதையான 'நயா சமாஜ பத்திரிகை' வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், முதல் முறையாக தேராதூனில் இருந்து வெளியிடப்பட்ட 'ஜக்ரத் கோர்கா' என்ற நேபாளி அமைப்பு வெளிச்சத்திற்கு வந்தது.
இவர் வரலாற்றாசிரியர் ராகுல் சாங்க்ரித்யாயனை மணந்தார். இவர்களுக்கு ஜெயந்த், ஜெட்டா என்ற இரு மகன்களும், ஜெயா என்ற மகளும் இருந்தனர்.
தொழில்
தொகுகமலா சாங்கிருத்யாயன் நன்கு அறியப்பட்ட எழுத்தாளராகவும், அறிஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார். இவர் வால்மீகியின் இராமாயணத்தை நேபாளத்தில் மொழிபெயர்த்தார். இவர் இந்திய இலக்கியத்தின் தேசிய நூலகவியலின் உறுப்பினராகவும் இருந்தார் (1901–1953). ஆசியாவில் இராமாயண பாரம்பரியம், மகாமானவ் மகாபண்டிட், பிரபா, நேபாளி சாகித்யா போன்ற புத்தகங்களையும் எழுதினார். இவர் பல மொழிகளை நன்கு அறிந்திருந்தார். 1950களிலிருந்து நேபாள மொழி, இந்தி இலக்கியத் துறையில் தீவிரமாகப் பங்கேற்றார். மேலும், இந்தி மற்றும் நேபாளி இலக்கியத்தில் பல பிராந்திய மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றவர். 1964 இல், இவர் இந்தி குழுவின் ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிச்சர் ததா பிவேச்சனா என்ற கட்டுரைகளை உருவாக்கி தொகுத்ததற்காக 1982இல் பானு புரஸ்கார் விருதும், 1993இல் மகாபண்டிட் ராகுல் சாங்கிருத்யாயன் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. இவர் 13 வெவ்வேறு இந்தி மற்றும் நேபாளி புத்தகங்களையும், 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் வழங்கியுள்ளார். இந்திய இலக்கிய கலைக்களஞ்சியத்தை உருவாக்கியதற்கு சமமான பொறுப்பும் இவருக்கு இருந்தது. டார்ஜிலிங்கின் லோரெட்டோ கல்லூரியின் இந்தித் துறையின் தலைவராகவும் இருந்தார். இவரது 'திப்யா மணி' என்ற புத்தகம் கடைசியாக 2008இல் வெளியிடப்பட்டது.
மரியாதை
தொகு1952இல் இந்தி சாகித்ய சம்மேளனம் இவருக்கு சாகித்ய ரத்னா விருதை வழங்கியது. 1972 ஆம் ஆண்டில், அசாமின் நாட்டுப்புறக் கதைகளுக்காக இந்தி அல்லாத எழுத்தாளராக பணியாற்றியதற்காக இவருக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய விருது வழங்கப்பட்டது. 1982ஆம் ஆண்டில், 'விசார அண்ணி விவேச்சனா' என்ற பணிக்காக மேற்கு மேற்கு வங்க அரசால் பானு பக்த விருது வழங்கப்பட்டது. வாரணாசியின், வித்யா தர்ம பிரச்சாரிணி நேபாளி சமிதி சார்பாக 2008இல் 'மதன் சமராக சம்மான்' விருது வழங்கப்பட்டது. 2008 இல் தேராதூனில் நடந்த ஒரு விழாவில் பானு புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
இறப்பு
தொகுஇந்திய-நேபாள இலக்கியத்தின் முக்கிய விமர்சகரான 88 வயதான முனைவர் கமலா சாங்கிருத்யாயன் சிலிகுரியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தபோது 25 அக்டோபர் 2009 அன்று இறந்தார். டார்ஜிலிங்கில் உள்ள இந்து புத்த மயானத்தில் இவருக்கு இறுதி மரியாதை அளிக்கப்பட்டது. டார்ஜிலிங்கின் 'ராகுல் நிவாஸ்' என்ற இவரது இல்லத்தில், இவரது குடும்பத்தினர், நலம் விரும்பிகள், டார்ஜிலிங் நகரத்தின் குடிமக்கள் ஆகியோரிடையே 26 அக்டோபர் 2009 அன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
எழுதிய நூல்கள்
தொகு- The Ramayana Tradition in Asia
- Mahamanav Mahapandit – 1995
- Prabha – 1994
- Nepali Sahitya – 1986
- Assam Ki Lokkathayen – 1981–1993
- Dibya Mani – 2008
- Bichar Tatha Biwechana