கமலை
கமலை என்பது ஒரு கிணற்றிலிருந்து நீரிறைக்கும் சாதனமாகும். இதைக் கொண்டு ஒரு காலத்தில் வேளாண்மை நடந்துவந்தது.
கமலை செயல்படும் விதம்
தொகுகமலை சாதனத்தில் நீரிறைக்கக் காளைகள் தேவை கிணற்றடியில் முன்னும் பின்னும் போய்வரும் காளைகள். காளைகள் பின்னால் போகும்போது கயிற்றின் முனையில் இணைக்கப்பட்ட சால் என்னும் பானைபோன்ற கொள்கலன் இருக்கும் அதைச் சுற்றி தோலால் தைக்கபட்டிருக்கும் அதன் அடிப்புறத்தில் தோலாலான குழாய் அமைப்பு இருக்கும். அந்தக் குழாயின் ம்மு முனை கிணற்றடியில் உள்ள வாய்களில் இருக்கும். சலை இணைத்த வடக் கயிறானது ஒரு இராட்டிணம் வழியாக வந்து மாட்டின் நுகத்தடியில் கட்டடப்பட்டிருக்கும். கிணற்றுகுள் இளங்கிய சால் நீரில் மூழ்கியதும், காளைகளை விவசாயி முன்னால் ஓட்டுவார். ஒரு குறிப்பிட்ட இடதிற்கு மாடு வந்ததும் விவசாயி அப்படியே கயிறின் மீது ஏறி அமருவார். தண்ணீர் நிரம்பிய சால் அப்படியே மேலே வரும் அப்போது சாலின் கீழுள்ள நீர் வெளியேற்றும் பகுதிவழியே நீர் மடையில் கொட்டும். பின்னர் பழயபடி மாடுகளை பின்னால் ஒட்டவர். இந்த பணிக்கு பழக்கப்பட்ட மாடுகளாலேயே இந்த வேலையைச் செய்ய முடியும் புதியதாக வாங்கி வந்த மாடுகளால் இந்த வேலையைச் செய்ய முடியாது.[1]
இன்று கமலைக் கிணறு என்பது காண முடியாத காட்சியாகிவிட்டது. தற்போது தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவு பகுதிகளிலேயே இவை காணப்படுகின்றன. அண்மைக் காலம்வரை புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே மழவராயன்பட்டி கிராமத்தில் ஏற்றம் மூலமாக நீர்பாய்ச்சி வந்த நிலையில் பருவமழை பொய்த்ததால் கிணற்றில் நீர் இல்லாமல் போய் இந்த பாசண முறை நின்று போய் உள்ளது.[2] கமலை வைத்து நீரிறைக்கும்போது குறிப்பிட்ட அளவு நீர் மட்டும் எடுக்கப்படும்.
கமலையின் மகத்துவம்
தொகுநீரில் மூன்று அடுக்குகள் உள்ளன. முதலாவது மேல்மட்ட நீர் (surface water), இரண்டாவது தந்துகிக் குழாய் நீர் (capillary water), மூன்றாவது நிலத்தடி நீர் (ground water).
பொதுவாக மேல்மட்ட நீரானது குளங்களிலும் ஆறுகளிலும் காணப்படும். நிலத்தடி நீர் என்பது 100 அடிக்கும் கீழே தண்ணீர் தாவளங்களாக (aquifers) காணப்படும். இதற்கிடையில் உள்ள நீர், நுண்துளை நீர் என்று அழைக்கப்படும். இது ஆண்டுதோறும் பெய்யும் மழை, குளங்களில் சேமிக்கப்படும் நீரின் அளவு, காணப்படும் மரங்களின் அடர்த்தி ஆகியவற்றைக்கொண்டு உருவாகும்.
பொதுவாகக் கமலைக் கிணறுகள் யாவும் இந்த நுண்துளை நீரை மட்டுமே பயன்படுத்துபவை. கமலையின் இறைப்பு அளவும், கிணற்றின் நீர் ஊறும் திறனும் பெரும்பாலும் சமமாக இருக்கும். ஒரு சால் நீரை வாய்க்காலில் ஊற்றிவிட்டு, அடுத்த சால் இறைக்கப் போகும்முன் நீர் ஊறிவிடும். இதைத்தான் நீடித்ததன்மை (sustainability) என்று இப்போது பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
மின் எக்கி
தொகுவங்கிகள் மின்எக்கிகளை (electric motor) அமைத்துக்கொள்ளக் கடன் வழங்கின. கடன் பெறத் 'தகுதி' பெற்றோர் கடன் வாங்கி 'மோட்டார்களை' அமைத்துக்கொண்டனர். ஒரு சிற்றூரில் 100-க்கு 80 பேர் கமலை வைத்திருந்தார்கள் என்றால், அதில் 20 பேருக்கு மட்டும் கடன் கிடைத்தது. அதாவது, 80 உழவர்களில் 20 பேர் மின்எக்கிகளுக்கு மாறினர்.
மின்சார எக்கிகள் நீரை மிக வேகமாக உறிஞ்சின. கிணற்றின் ஊறும் வேகம் மின்சார எக்கிகளுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே, கிணறுகளில் நீர் மட்டம் அதி வேகமாகக் கீழிறங்கியது. இதனால் மீதமுள்ளவர்களும் மின்சார எக்கிகளுக்கு மாற வேண்டும் அல்லது சாகுபடியைக் கைவிட வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகினர். இதனால் கமலைகள் காணாமல் போயின.[3]
உசாத்துணை
தொகு- ↑ கமலை மாடு இப்ப காணாமப் போச்சு, தொலைந்துபோன கிராமத்து அடையாளங்கள், இரா மணிகண்டன், குமுதம் பொங்கல் சிறப்பிதழ், பக்கம் 2-3, 13, சனவரி 2003
- ↑ கே.சுரேஷ் (16 பெப்ரவரி 2017). "30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில் இயக்கத்தை நிறுத்திக் கொண்ட ஏற்றம்: விளைநிலம் தரிசானதால் விவசாயி கவலை". செய்தி. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 18 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ தி இந்து தமிழ் நிலமும் வளமும் இணைப்பு 24.1.2015.எந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது.