கம்பர் மேடு

கம்பர் மேடு, தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த தேரழுந்தூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த கம்பர் மேடு கம்பராமாயணம் இயற்றிய கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவிடமாகப் போற்றப்படுகிறது. இத்தொல்ல்யல் களம் தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1][2][3][4] கம்பருக்கு ஒரு விசித்திர பழக்கம் இருந்துள்ளது. அவர் ஒருமுறை உணவு சமைக்கப் பயன்படுத்தும் மண்பாண்டங்களை மறுமுறை பயன்படுத்தாமல் அன்றே உடைத்துவிட, அந்த மண்பாண்டத் துகள்கள் குவிந்து, ஒரு பெரிய மேடாக மாறியது. அதுவே தற்போது 'கம்பர் மேடு' என்று அழைக்கப்படுகிறது என உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இச்சின்னம் 1953-அம் ஆண்டில் புராதன சின்னங்கள் மற்றும் புதையுண்ட தொல்பொருள் சட்டத்தின் (1958 எண்.24) கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. புதர் மேடாகிக் கிடக்கும் கம்பர் வாழ்ந்த `கம்பர் மேடு’ - அரசு நடவடிக்கை எடுக்குமா?
  2. கவனிப்பாரற்ற நிலையில் தேரழந்தூர் கம்பர் மேடு
  3. "கம்பர் வாழ்ந்த இடம் முறையாக பாதுகாக்கப்படுமா?". Archived from the original on 2019-03-17. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
  4. Kambarmedu, believed to be the birth place of Tamil poet Kambar, in state of neglect
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பர்_மேடு&oldid=3706892" இலிருந்து மீள்விக்கப்பட்டது