கம்போடியாவில் விளையாட்டு
கம்போடியாவில் விளையாட்டு (Sport in Cambodia) குறிப்பாகத் தற்காப்புக் கலையைப் போல கால்பந்து பிரபலமாக விளையாடப்படுகிறது. கைப்பந்தாட்டம் போல ஆடப்படும் செபாக் டக்ரா என்ற விளையாட்டும் கம்போடியாவில் மிகப் பிரபலமாக விளையாடப்படுகிறது. பொகாடர், பிராடல் செரெய் (கெமர் குத்துச்சண்டை) மற்றும் கெமர் பாரம்பரிய மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளும் நடைமுறையில் விளையாடப்படுகின்றன.
பண்டைய பொகாடர் விளையாட்டு
தொகுபொகாடர் அல்லது முறையாகச் சொல்வதென்றால் லபாக் கடாவ் (ஒரு மரக்குச்சியை ஏந்தி சிங்கங்களுடன் போராடுவது என்பது இதன் பொருளாகும்) என்பது விலங்குகளைப் போல போரிடுவது என்ற அடிப்படையில் அமைந்த ஒரு கெமரினத் தற்காப்பு கலையாகும். போர் உத்திகள் மற்றும் ஆயுதங்கள் முதலானவற்றைப் பயன்படுத்தும் தரைப்போர் முறையை இத்தற்காப்புக்லை கொண்டிருக்கிறது.
குத்துச்சண்டை போலில்லாமல், பொகாடர் விளையாட்டாகச் சண்டையிடும் கலையாகும். படைவீரர்கள் போர்களத்தில் சண்டையிடப் பயன்படுத்தும் முழுமையான தற்காப்பு கலையாக பொகாடர் கருதப்படுகிறது. தாக்குதல்கள், வீசுதல்கள், இழுத்தல்கள், மடக்கிப் பிடித்தல்கள், நகரவிடாமல் பூட்டுதல்கள் போன்ற தரைப்போரின் அம்சங்கள் அனைத்தும் இவ்விளையாட்டில் உண்டு. உடம்பின் ஒவ்வொரு உறுப்பையும் ஒரு ஆயுதமாக இவ்விளையாட்டில் பயன்படுத்த முடியும்.
சண்டையிடும் போது, பொகாடர் பயிற்சியாளர்கள் இன்னும் பண்டைய கெமெர் சேனைகளின் சீருடைகளை அணிகிறார்கள். இடுப்பில் மடிக்கப்பட்ட ஒரு குரோமா (தாவணி) மற்றும் சங்வார் டே எனப்படும் நீலம் மற்றும் சிவப்பில் பட்டுத்துணி காப்புறைகளை போராளிகளின் தலை மற்றும் கைகளில் கட்டிக் கொண்டு இவ்விளையாட்டை விளையாடுகிறார்கள். இந்த முடிப்புகள் வலிமையைத் தருமென்று கடந்த காலத்தில் நம்பப்பட்டது, ஆனால் தற்பொழுது வெறும் சடங்கிற்காக அவை அணியப்படுகின்றன.
போராளிகள் அணிந்திருக்கும் குரோமா அவர்களின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இவ்விளையாட்டில் பல்வேறு வகையான தரநிலைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு தரநிலையும் குறைந்தது ஐந்து மாதப் பயிற்சியை முடித்த பின்னரே வழங்கப்படுகிறது. வாரத்தின் ஏழு நாட்களும் தினம் இரண்டு மணி நேரம் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. தரநிலைகள் வெவ்வேறு வண்ண குரோமாக்களால் அடையாளப்படுத்தப்படுகின்றன.
வெள்ளை வண்ணம் முதல்நிலைக்கு வழங்கப்படுகிறது. தொடர்ந்து பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் கருப்பு என பத்து நிலைகள் இவ்விளையாட்டில் வழங்கப்படுகின்றன.
தங்களுடைய ஆரம்பப் பயிற்சியை முடித்த பிறகு போராளிகள் குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு கருப்பு குரோமாவை அணிய வேண்டும். தங்கக் குரோமாவை அணிய வேண்டுமெனில் ஒருவர் உண்மையான வல்லுநராகவும் பொகாடரில் ஏதாவது பெரிய சாதனைகள் நிகழ்த்தியிருக்க வேண்டும். உண்மையான வல்லுநராக கருப்பு குரோமா பெற வேண்டுமெனில், ஆயுதமில்லா நிலையில் குறைந்தது 1000 எண்ணிக்கையிலான நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். மொத்தமாக இக்கலையில் 8000 முதல் 10000 வரை எண்ணிக்கையிலான நுணுக்கங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
வெவ்வேறு வகையான 341 வடிவங்களை பொகாடர் தற்காப்பு கலை கொண்டிருக்கிறது. வாத்து, நண்டு, குதிரை, பறவை, டிராகன், கழுகு, கொக்கு, காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி அல்லது கல், குரங்கு, சிங்கம், யானை, அப்சரா (பாரம்பரிய இந்துமத புனித தேவதை) மற்றும் முதலை போன்றவை சிலவாகும். பண்டைய கெமர் படையினர் இடுப்பில் மடிக்கப்பட்ட ஒரு குரோமா (தாவணி) மற்றும் சங்வார் டே எனப்படும் நீலம் மற்றும் சிவப்பில் பட்டுத்துணி காப்புறைகளை போராளிகளின் தலை மற்றும் கைகளில் கட்டிக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டார்கள். வலிமையைத் தருமென்ற நம்பிக்கையில் கட்டப்பட்ட அவை தற்பொழுது சடங்குக்காக மட்டுமே அணியப்படுகின்றன.
பொகாடர் தற்காப்புக் கலை பார்ப்பதற்கு நவீன குத்துச்சண்டை போல காட்சியளிப்பதால் இதை நவீன குத்துச்சண்டை வகை என்று தவறாகக் கருதிவிடுகின்றனர். பொகாடர் பலவடிவங்களும் நுணுக்கங்களும் நிறைந்த ஒரு கலையாகும். அதே நேரம், பிராடல் செரெய் என்பது எளிமைப்படுத்தப்பட்ட கட்டற்ற வடிவ சண்டையிடல் முறையாகும். இதில் சில அடிப்படை நுணுக்கங்களான (வெள்ளை குரோமா பயிற்சி போன்றது) உதைத்தல், குத்துதல், முழங்கை மற்றும் முழங்கால் நுணுக்கங்கள் காணப்படுகின்றன.
கால்பந்தாட்டமும் கம்போடியாவில் விளையாடப்படுகிறது. கம்போடிய காற்பந்து சம்மேளனம் 1933 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு கம்போடியாவில் கால்பந்து போட்டிகளையும் கம்போடிய தேசிய கால்பந்து அணியையும் கட்டுபடுத்தி வழிநடத்துகிறது. இச்சம்மேளனம் 1953 ஆம் ஆண்டு முதல் பன்னாட்டுக் காற்பந்து சங்கங்களின் கூட்டமைப்புடனும், 1957 ஆம் ஆண்டு முதல் ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்புடனும் இணைந்து செயலாற்றுகிறது.
புனோம் பென் தேசிய ஒலிம்பிக் விளையாட்டரங்கம் 48,529 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக் கூடியவகையில் கட்டப்பட்டுள்ளது[1].
ரக்பி காற்பந்தாட்டம்
தொகுரக்பி காற்பந்தாட்டம் சிறிய அளவில் ஆடப்பட்டாலும், கம்போடியாவில் இவ்விளையாட்டும் வளரும் நிலையிலேயே உள்ளது. கம்போடிய ரக்பி காற்பந்து சம்மேளனம் தொடங்கப்பட்டு இவ்விளையாட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.
கம்போடியக் கூடைப்பந்து லீக் அல்லது சிபிஎல் என்பது கம்போடிய அதிகாரப்பூர்வ கூடைப்பந்துப் போட்டியாக நடத்தப்படுகிறது. கம்போடியாவில் 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்போட்டியில் நாடெங்கிலும் உள்ள சிறந்த கூடைப்பந்து வீரர்கள் மற்றும் அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். பீளைன் அரெனா அரங்கில் ஒவ்வொரு ஆண்டும் பட்டத்திற்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
செபாக் தாக்ராவ் என்பது காலால் ஆடப்படும் ஒரு கைப்பந்து விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டு தென்கிழக்கு ஆசியாவில் பிரபலமாக ஆடப்படுகிறது. சி அல்லது சினியான் என்றும் இவ்விளையாட்டு கம்போடியாவில் அழைக்கப்படுகிறது. பின்னர், தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இடம்பெற்றது.
பாரம்பரியப் படகுப் போட்டி
தொகுபாரம்பரிய படகுப் போட்டியும் கம்போடியாவில் ஒரு பிரபலமான விளையாட்டாக உள்ளது. போட்டிகள் பெரும்பாலும் தண்ணீர் திருவிழாவில் நடத்தப்படுகின்றன. போட்டியில் பங்கு பெறும் படகுகள் பெரும்பாலும் மிக நீண்டும் அதிக அளவு துடுப்பு வலிப்பவர்களையும் கொண்டிருக்கும்.
மேற்கோள்கள்
தொகு3. Sports Express பரணிடப்பட்டது 2013-08-03 at the வந்தவழி இயந்திரம்