கம்ப சூத்திரம்

கம்ப சூத்திரம் என்பது கம்ப இராமாயணத்தை ஆழ்ந்து கற்போர் மட்டுமே அறியும் வகையில் அந்நூலுள் அமைந்துள்ள எழில்நலன்களைக் குறிக்கும் சொல். ஓரிடத்தில் விட்டுச் சென்ற உவமையைப் பல நூறு பாடல்களுக்கடுத்து மீண்டும் தொட்டுச் சொல்லும் கம்பனின் திறமையையும் சிறு தொடரொன்றில் ஆழ்பொருள் அமையப் பாடியிருக்கும் நுண்மாண் நுழைபுலத்தையும் அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளனர்.[சான்று தேவை]

பொதுமக்கள் வழக்கிலும் பரவலர் ஊடகங்களிலும் கம்ப சூத்திரம் என்ற சொல் செயற்கரிய செயல் எனும் பொருளில் வழங்கி வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்ப_சூத்திரம்&oldid=3358766" இருந்து மீள்விக்கப்பட்டது