கயன் டி சில்வா

காரியவசம் தந்திரிக் கயான் திலங்கா டி சில்வா (Kariyawasam Thantrige Gayan Thilanka de Silva) பொதுவாக கயன் டி சில்வா (23 பிப்ரவரி 1988 அன்று பிறந்தவர்) என அறியப்படும் இவர் 2012-13 ஆம் ஆண்டுகளில் இலங்கை உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். அவரது ஆரம்ப துடுப்பாட்ட வாழ்க்கையானது அவர் பிறந்த நாடான பஹ்ரைன் சார்பாக விளையாடினார். மேலும் 2004 மற்றும் 2006 ஆம் ஆண்டு கால கட்டங்களில் இவர் பஹ்ரைன் தேசிய அணிக்காக விளையாடினார், இதற்கு முன்பு பஹ்ரைனை பல்வேறு வயது மட்டத் துடுப்பட்ட அணிகளுக்காக பிரதிநிதித்துவப்படுத்தினார்.

மனாமாவின் அட்லியாவில் பிறந்தவ டி சில்வா, பாகிஸ்தானில் 2000 ஆம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பையில் பஹ்ரைனைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அப்போது அவருக்கு வயது 12 ஆகும்.[1] 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஏ. சி. சி கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் 17 வயதிற்கு உடப்பட்டோருக்கன பஹ்ரைன் துடுப்பாட்ட அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2] அந்தத் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி 165 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த பஹ்ரைன் மட்டையாளர்கள் வரிசையில் இவர் முதலிடம் பிடித்தார்.[3] தாய்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 68 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்ததே இவரின் அதிகபட்ச ஓட்டம் ஆகும்.[4] 17 வயதிற்குட்பட்ட துடுப்பாட்டத் தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதனைத் தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்த ஏ.சி.சி டிராபிக்கான பஹ்ரைன் மூத்த அணியில் டி சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 16 ஆகும். மேலும் அந்தத் தொடரில் அவர் இலக்கினைக் கைப்பற்றவில்லை என்றாலும், ஹாங்காங் மற்றும் ஓமானுக்கு எதிராக பஹ்ரை அணி சார்பாக விளையாடிய இளம் வயதுவீரர் எனும் சாதனை படைத்தார். 2005 ஆம் ஆண்டில் நேபாளத்தில் நடைபெற்ற புரூனே துடுப்பாட்ட அணிக்கு எதிராக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 140 பந்துகளில் இவர் 200* ஓட்டங்களை எடுத்தார்.

2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஏசிசி கோபைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் மலேசிய அணி சார்பாக விளையாடியதே இவர் பஹ்ரைன் சார்பாக விளையாடிய இறுதிப் போட்டி ஆகும்.கொழும்பில் உள்ள எலிசபெத் ஹில்ஸ் பள்ளியிலிவர் கூடைப் பந்து மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டு போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.[2][5]

உள்ளூர் போட்டிகள்தொகு

முதல் தரத் துடுப்பாட்டம்தொகு

2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரீமியர் லீக் துடுப்பாட்டத் தொடரில் இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். பெப்ரவரி 22 இல் கருனேகலா துடுப்பாட்ட சன்கத்திற்கு எதிரான போட்டியில் இவர் காலி துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் 24 பந்துகளில் 14 ஓடங்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.பந்துவீச்சில் இரண்டு ஓவர்களை வீசி ஒன்பது ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீசவும் மட்டையாடவும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் போட்டியில் காலி துடுப்பாட்ட அணி 104 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[6]

குறிப்புகள்தொகு

  1. Miscellaneous matches played by Gayan de Silva – CricketArchive. Retrieved 12 May 2015.
  2. 2.0 2.1 (4 June 2004). "Two Lankans in Bahrain team for Malaysia"Daily News online. Retrieved 12 May 2015.
  3. Batting and fielding for Bahrain under-17s, Asian Cricket Council Under-17 Cup 2003/04 – CricketArchive. Retrieved 12 May 2015.
  4. Bahrain Under-17s v Thailand Under-17s, Asian Cricket Council Under-17 Cup 2003/04 (Group C) – CricketArchive. Retrieved 12 May 2015.
  5. (9 July 2005). "Amal Int’l, Elizabeth Moir in cager final"The Island. Retrieved 12 May 2015.
  6. "Full Scorecard of Galle Cricket Club vs Kurunegala Youth Cricket Club, Premier League Tournament, Group B - Score Report | ESPNcricinfo.com" (en).
  • Gayan de Silva
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயன்_டி_சில்வா&oldid=2947547" இருந்து மீள்விக்கப்பட்டது