கயர்பூர் சமஸ்தானம்
கயர் இராச்சியம் (State of Khairpur (சிந்தி மொழி: خيرپور رياست، உருது: ریاست خیرپور)[1] இந்த இராச்சியம் 15,730 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டிருந்தது. 1947-இல் இந்தியப் பிரிவினைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால பாகித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் பகுதியாக உள்ளது.
கயர்பூர் சமஸ்தானம் خيرپور رياست (சிந்தி மொழி) | |||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா, பின்னர் பாக்கித்தான் | |||||
| |||||
கொடி | |||||
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கயர்பூர் சமஸ்தானத்தின் அமைவிடம் | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1775 | |||
• | பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. | 14 அக்டோபர் 1955 | |||
பரப்பு | 15,730 km2 (6,073 sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | சிந்து மாகாணம், பாகிஸ்தான் | ||||
Local Government Department of Sindh |
வரலாறு
தொகுதல்பூர் வம்சத்தின் சோரப் கான் தல்பூர் 1783-ஆம் ஆண்டில் கயர்பூர் இராச்சியத்தை நிறுவி தன்னாட்சி கொண்ட முடியாட்சியுடன் ஆண்டார்.[2]பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற கயர்பூர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பஞ்சாப் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. கயிர்பூர் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 15 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1947-இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் கயர்பூர் இராச்சியம் 14 அக்டோபர் 1955-ஆம் ஆண்டில் பாக்கித்தான் நாட்டுடன் இணைக்கப்பட்டது. தற்போது இந்த இராச்சியத்தின் பகுதிகள் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ளது.
மக்கள் தொகை
தொகு1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கயர்பூர் இராச்சியத்தின் மொத்த மக்கள் தொகை 2,27,183 ஆகும். மக்கள் தொகையில் இசுலாமியர்கள் 83%, இந்துக்கள் 17%, பிறர் 712 ஆக இருந்தனர்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Imperial Gazetteer2 of India, Volume 3, page 336 -- Imperial Gazetteer of India -- Digital South Asia Library". dsal.uchicago.edu. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 5 August 2011.
- ↑ Solomon, R. V.; Bond, J. W. (2006). Indian States: A Biographical, Historical, and Administrative Survey (in ஆங்கிலம்). Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-1965-4.