கயஸ் அகமது
கயஸ் அகமது (Qais Ahmad பஷ்தூ: قیص احمد ; பிறப்பு 15 ஆகஸ்ட் 2000) ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர் . இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.[1]
உள்ளூர் போட்டிகள்
தொகுஇவர் செப்டம்பர் 21, 2017 அன்று 2017 ஷ்பகீசா துடுப்பாட்ட லீக்கில் காபூல் ஈகிள் துடுப்பாட்ட அணிக்காக இவர் இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[2]
1 மார்ச் 2018 அன்று 2018 அஹ்மத் ஷா அப்தாலி 4 நாள் போட்டியில் ஸ்பீன் கர் பிராந்திய துடுப்பாட்ட அணிக்காக இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர்அறிமுகமானார்.[3] அந்த்ப் போட்டியில் பத்து இலக்குகளைக் கைப்பற்றினார். மேலும் இவர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டித் தொடரில் எட்டு போட்டிகளில் விளையாடி 41 இலக்குகளைக் கைப்பறினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதல் இடம் பெற்றார்.[4]
10 ஜூலை 2018 அன்று நடைபெற்ற 2018 காசி அமானுல்லா கான் பிராந்திய ஒருநாள் போட்டியில் ஸ்பீன் கர் பிராந்தியத்திற்காக தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[5]
இருபது20
தொகு2018 ஆம் ஆண்டின் கரீபியன் லீக் துடுப்பாட்டத் தொடரில் விளையாடுவதற்கு இவர் தேர்வானார்.செப்டம்பர் 2018 இல், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியின் முதல் பதிப்பில் பால்க் அணியில் இடம் பெற்றார்.[6] போட்டியின் இறுதிப் போட்டியில், இவர் ஐந்து இலக்குகளை வீழ்த்தினார் மேலும் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அந்தப் போட்டியில் பால்க் லெஜண்ட்ஸ் நான்கு இலக்குகளால் வெற்றி பெற்றது.[7] ஒன்பது போட்டிகளில் 15 இலக்குகளைக் கைப்பற்றினார்.இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரகள் வரிசையில் முதல் இடம் பெற்றார் [8]
2018–19 பங்களாதேஷ் பிரீமியர் லீக்கிற்கான வரைவுப் பட்டியலில் இடம் பெற்றதினைத் தொடர்ந்து, அக்டோபர் 2018 இல், ராஜ்ஷாஹி கிங்ஸ் அணியில் இடம் பெற்றார்.[9] பிப்ரவரி 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிக் பாஷ் தொடரில் இவர் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் துடுப்பாட்ட அணிக்காக இவர் விளையாடினார். தைமல் மில்ஸ் காயம் காரணமாக வெளியேறியதனால் இவர் மாற்று வீரராகத் தேர்வானார்.[10]
ஜூலை 2019 இல், யூரோ டி 20 ஸ்லாம் துடுப்பாட்ட போட்டியின் தொடக்க பதிப்பில் கிளாஸ்கோ ஜயண்ட்ஸ் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார்.[11][12] இருப்பினும் ஆகச்ட் மாதம் போட்டி ரத்து செய்யப்பட்டது.[13]
சர்வதேச வாழ்க்கை
தொகுடிசம்பர் 2017 இல், இவர் 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றார்.[14] இந்தப் போட்டித் தொடரில் 14 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதல் இடம் பெற்றார். போட்டிகளில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தியதனைத் தொடர்ந்து சர்வதேச துடுப்பாட்ட கவுன்சில் (ஐ.சி.சி) அஹ்மத்தை அணியின் வளரும் நட்சத்திரமாக அறிவித்தது.[15] டிசம்பர் 2018 இல், 2018 ஏ.சி.சி வளர்ந்து வரும் ஆசிய அணிகள் கோப்பைக்கான ஆப்கானிஸ்தானின் 23 வயதுக்குட்பட்ட அணியில் இடம் பெற்றார்.[16]
குறிப்புகள்
தொகு- ↑ "Qais Ahmad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
- ↑ "Eliminator, Shpageeza Cricket League at Kabul, Sep 21 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
- ↑ "1st Match, Alokozay Ahmad Shah Abdali 4-day Tournament at Amanullah, Mar 1-4 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 March 2018.
- ↑ "Alokozay Ahmad Shah Abdali 4-day Tournament, 2018, Speen Ghar Region: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 May 2018.
- ↑ "Group B, Ghazi Amanullah Khan Regional One Day Tournament at Khost, Jul 10 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 July 2018.
- ↑ "Afghanistan Premier League 2018 – All you need to know from the player draft". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.
- ↑ "Qais Ahmed, Chris Gayle star as Balkh Legends win inaugural APL". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 22 October 2018.
- ↑ "Afghanistan Premier League, 2018/19 - Balkh Legends: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 October 2018.
- ↑ "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19". Bangladesh Cricket Board. Archived from the original on 28 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Hurricanes sign international spinner". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 1 February 2019.
- ↑ "Eoin Morgan to represent Dublin franchise in inaugural Euro T20 Slam". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.
- ↑ "Euro T20 Slam Player Draft completed". Cricket Europe. Archived from the original on 19 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Inaugural Euro T20 Slam cancelled at two weeks' notice". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 August 2019.
- ↑ "Mujeeb Zadran in Afghanistan squad for Under-19 World Cup". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
- ↑ "U19CWC Report Card: Afghanistan". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 5 February 2018.
- ↑ "Afghanistan Under-23s Squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.