கரக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

(கரக்பூர் சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கரக்பூர் சந்திப்பு இரயில் நிலையம் (Kharagpur Junction railway station) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மேற்கு மிட்னாபூர் மாவட்டம் காரக்பூரில் அமைந்துள்ளது. ஊப்ளி சந்திப்பு தொடருந்து நிலையம், கோரக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம், கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகிய தொடருந்து நிலையங்களை அடுத்து நடைமேடை நீளத்தின் அடிப்படையில் இது நான்காவது நீளமான தொடருந்து நிலையமாகும். ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் ஏ1 நிலை தொடருந்து நிலையமாக காரக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம் வகைப்படுத்தப்படுகிறது.

கரக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
Kharagpur Junction
பிராந்திய இரயில் வகை
கரக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கரக்பூர், மேற்கு வங்காளம்
இந்தியா
ஆள்கூறுகள்22°20′24″N 87°19′30″E / 22.339914°N 87.325016°E / 22.339914; 87.325016
ஏற்றம்29 m (95 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்கிழக்கு தொடருந்து மண்டலம்
தடங்கள்அவுரா-கரக்பூர்
அவுரா-நாக்பூர்-முன்பை
ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம்
கரக்பூர்–பாங்குரா–அத்ரா
அசான்சொல்–டாடா நகர்–கரக்பூர்
கரக்பூர்–பூரி
கொல்கத்தா துணை நகர இரயில்வே
நடைமேடை12 (1,1A,2,2A,3,3A,4,4A,5,6,7,8)
மொத்த நீளம்: 1,072 m (3,517 அடி)
இருப்புப் பாதைகள்24
இணைப்புக்கள்வாடகை வாகன நிறுத்தம், பேருந்து நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைமேல் நிலையானது
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்சக்கர நாற்காலி வசதி உண்டு
கட்டடக்கலை நடைபிரித்தானியா
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுகேஜிபி
மண்டலம்(கள்) தென்கிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)
கோட்டம்(கள்) கரக்பூர்
வரலாறு
திறக்கப்பட்டது1898–1899; 126 ஆண்டுகளுக்கு முன்னர் (1899)
மின்சாரமயம்ஆம்
முந்தைய பெயர்கள்வங்காளம் நாக்பூர் இரயில்வே
பயணிகள்
பயணிகள் தினசரி 5,00,000 பயணிகளுக்கும் மேல்
அமைவிடம்
கரக்பூர் சந்திப்பு is located in மேற்கு வங்காளம்
கரக்பூர் சந்திப்பு
கரக்பூர் சந்திப்பு
Location in West Bengal
கரக்பூர் சந்திப்பு is located in இந்தியா
கரக்பூர் சந்திப்பு
கரக்பூர் சந்திப்பு
Location in India
கரக்பூர் சந்திப்பு இரயில் நிலையம்

வரலாறு

தொகு

காரக்பூர் சந்திப்பு 1898-99 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது. வங்காளம் நாக்பூர் இரயில்வேயின் காரக்பூர்-கட்டாக் இரயில் பாதை 1899 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் திறக்கப்பட்டது. 1900 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் நாள் அன்று கோலாகாட்டில் உரூப்நாராயண் ஆற்றின் மீது பாலம் திறக்கப்பட்டு அவுராவை காரக்பூருடன் இணைத்தது. இதே ஆண்டு காரக்பூர் சார்க்கண்ட் மாநிலத்தின் சினி நகருடன் இணைக்கப்பட்டது. 1898-99 ஆம் ஆண்டில் பாதை தயாராக்கப்பட்டு காரக்பூர்-மிட்னாபூர் கிளை பாதை 1901 ஆம் ஆண்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.[1]

உள்கட்டமைப்பு

தொகு

ஊப்ளி சந்திப்பு, கோரக்பூர் மற்றும் கேரளாவின் கொல்லம் சந்திப்பு ஆகிய தொடருந்து நிலையங்களுக்குப் பிறகு காரக்பூர் தொடருந்து நிலையம் 1,072.5 மீட்டர்கள் (3,519 அடி) நீளம் நடைமேடையைக் கொண்டு உலகின் நான்காவது நீளமான இரயில் நடைமேடையைக் கொண்டுள்ள தொடருந்து நிலையமாக சிறப்பு பெற்றது.[2][3][4] கோரக்பூர் இரயில் நிலையத்தின் மறுவடிவமைப்பு நிறைவடைந்து 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியன்று புதிய நடைமேடை திறக்கப்பட்டது. அதுவரை உலகின் மிக நீளமான நடைமேடை என்ற பெருமையை காரக்பூர் தொடருந்து நிலையம் பல ஆண்டுகளாக வைத்திருந்தது.[5] காரக்பூர் ஆசியாவின் மிகப்பெரிய கணினி சார்ந்த ஒன்றொடு ஒன்று இணைப்பு அமைப்பையும் கொண்டுள்ளது.[6]

காரக்பூர் சந்திப்பின் நடைமேடை எண்கள் 1, 3, மற்றும் 2, 4 ஆகியவை தொடர்ச்சியாக உள்ளன. 24 பெட்டிகள் கொண்ட கோரமண்டல் விரைவு வண்டி நடைபாதை 3 எண்ணில் நின்றால் அதன் வால் நடைபாதை எண் 1 வரை நீண்டிருக்கும். ஆலு காசா என்ற உணவு காரக்பூர் இரயில் நடைமேடையில் விற்கப்படும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Saxena, R. P. "Indian Railway History timeline". Archived from the original on 14 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 21 சனவரி 2012.
  2. "Trivia". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 2012-01-21.
  3. "Indian Railway Facts". iloveindia. பார்க்கப்பட்ட நாள் 2012-01-21.
  4. "Gorakhpur gets world's largest railway platform". The Times of India. 7 October 2013. பார்க்கப்பட்ட நாள் 7 October 2013.
  5. Dinda, Archisman (9 October 2013). "Uttar Pradesh gets world's longest railway platform". GulfNews. http://gulfnews.com/news/world/india/uttar-pradesh-gets-world-s-longest-railway-platform-1.1241468. 
  6. "Asia's largest interlocking system at Kharagpur station". Times of India. 15 Nov 2017. https://timesofindia.indiatimes.com/city/kolkata/asias-largest-interlocking-system-at-kharagpur-station/articleshow/61651645.cms.