கரசேவை (Kar seva) என்பது, சீக்கிய சமயம் வலியுறுத்தும் முக்கிய அறங்களில் ஒன்றான தன்னலமற்ற சமுதாயத் தொண்டாகும்.

அனைவரில் உறையும் இறைவனை அடையும் வழிகளில், கரசேவை[1][2]மூலம் சமயத் தொண்டு மற்றும் சமுதாயத் தொண்டு செய்வது என்பது சீக்கிய சமய மரபாகும்.

கைகளைக் கொண்டு பிறருக்கு தொண்டு செய்வது, வழிபாட்டிற்கான இறைவனின் ஆலயம் கட்டுதல் போன்ற செயல்கள் சீக்கிய சமய வரலாற்றில் கரசேவை என்பர். கரசேவை செய்பவர்களை கரசேவகர்கள் என்றும் அழைப்பர்.

இருப்பினும், அண்மைக்காலத்தில், விசுவ இந்து பரிசத் அமைப்பினர் ராம ஜென்ம பூமியில் இராமருக்கு கோயில் எழுப்பும் செயலுக்கு கரசேவை என்று பெயரிட்டுள்ளனர்.

பஞ்சாபி மொழியில் சேவை என்பதற்கு இறை வழிபாடு, வணக்கம் தெரிவித்தல் மற்றும் அன்பு மூலம் மரியாதை தெரிவித்தல் எனப் பொருளாகும். சீக்கிய குருக்களின் புனித கிரந்தங்கள் சேவையும் (தொண்டு), இறை வழிபாடும் இணைந்ததே சேவை எனக்கூறுகிறது. பலனை எதிர்பாராது, மனத்தாழ்வுடன், அன்புடன் செய்யும் தொண்டினையே சேவை எனக்கருதப்படுகிறது.[3] பொதுவாக கர சேவை என்பதை தன்னார்வ உழைப்பு என மொழிபெயர்க்கப்படுகிறது.

பொற்கோயிலில் கரசேவை தொகு

முகலாயப் பேரரசர் ஜகாங்கீர் ஆட்சிக் காலத்தில் அமிர்தசரஸ் நகரத்தில் உள்ள பொற்கோயில் தன்னலமற்ற சீக்கிய சமூக கரசேவகர்களால் எழுப்பட்டதாகும்.[1] இன்றளவும் அனைத்து சீக்கிய குருத்துவார்களில், தன்னலமற்ற தொண்டு புரியும் கரசேவகர்களால் உணவு சமைப்பது, உணவு பரிமாறுவது மற்றும் தூய்மைப் பணிகள் நடத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Singha, H. S. (2000). The Encyclopedia of Sikhism. Hemkunt Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170103010. 
  2. Image journeys: audio-visual media and cultural change in India. Sage Publications. 1999. பக். 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7619-9325-4. 
  3. Virdee, Gurmit Singh. "Labour of love: Kar seva at Darbar Sahib's Amrit Sarover". Sikh Formations: Religion, Culture, Theory 1 (1). doi:10.1080/17448720500231409. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரசேவை&oldid=2485197" இருந்து மீள்விக்கப்பட்டது