கரண் பூசண் சிங்

கரண் பூசண் சிங் (Karan Bhushan Singh) ஓர் இந்திய அரசியல்வாதி, பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரும் கைசர்கஞ்ச் மக்களவை உறுப்பினரும் ஆவார்.[1] இவர் 6 முறை மக்களவை உறுப்பினராக இருந்தவரும், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூசண் சரண் சிங்கின் மகன் ஆவார். இவர் உத்தரப் பிரதேச மல்யுத்தச் சங்கத்தின் தலைவராகவும்,[2] கோண்டாவின் நவாப்கஞ்சில் உள்ள கூட்டுறவு மேம்பாட்டு வங்கியின் தலைவராகவும் உள்ளார்.[3][4]

கரண் பூசண் சிங்
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்பிரிஞ் பூசண் சரண் சிங்
தொகுதிகைசர்கஞ்ச்
இந்திய மல்யுத்தக் கூட்டமை (உபி) தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 பிப்ரவரி 2024
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 திசம்பர் 1990 (1990-12-13) (அகவை 33)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்நீகா சிங்
உறவுகள்பிரதீக் பூசண் சிங் (சகோதரர்)
பிள்ளைகள்2
பெற்றோர்பிரிஞ் பூசண் சரண் சிங் (தந்தை)
கேத்கி தேவி சிங் (தாய்)

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

கரண் பூசண் சிங் திசம்பர் 13, 1990 அன்று பிரிஜ் பூசண் சரண் சிங் மற்றும் கேத்கி தேவி சிங் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது குடும்பத்தில் இளைய மகன் ஆவார். இவரது சகோதரர் பிரதீக் பூசண் சிங் (பிறப்பு 9 மே 1988) இந்திய அரசியல்வாதியும், உத்தரப் பிரதேசச் சட்டமன்றத்தின் கோண்டா சட்டமன்றத் தொகுதியில் 2ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும் ஆவார்.[5][6]

டாக்டர் ராம் மனோகர் லோகியா அவத் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் படிப்பினையும் ஆத்திரேலியாவில் வணிக மேலாண்மை பட்டயப் படிப்பினையும் முடித்துள்ளார். இவர் முன்னாள் தேசிய இரட்டை பொறி சுடும் வீரர் ஆவார்.

இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[5]

அரசியல் வாழ்க்கை

தொகு

கரண் பூசண் சிங் 18ஆவது மக்களவைத் தேர்தலில் கைசர் கஞ்ச் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் பகத் ராம் மிசுராவை 148,843 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 571,263 வாக்குகளைப் பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Election Commission of India". results.eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  2. Bajpai, Namita (2024-05-04). "Young and old proxy players in legacy battles". The New Indian Express. https://www.newindianexpress.com/nation/2024/May/05/young-and-old-proxy-players-in-legacy-battles. 
  3. "Brij Bhushan's son elected UP wrestling association president". The Times of India. 2024-02-14. https://timesofindia.indiatimes.com/city/lucknow/karan-bhushan-singh-elected-up-wrestling-association-president/articleshow/107676927.cms. 
  4. "Brij Bhushan Singh's son Karan wins from UP's Kaiserganj on BJP ticket". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-12.
  5. 5.0 5.1 "Who is Karan Bhushan Singh? Former shooter is BJP's Kaiserganj pick". India Today (in ஆங்கிலம்). 2024-05-02. பார்க்கப்பட்ட நாள் 2024-06-07.
  6. "विदेश से पढ़ाई, शूटिंग के नेशनल खिलाड़ी... कौन हैं बृजभूषण के बेटे करण भूषण सिंह जिन्हें BJP ने कैसरगंज से दिया टिकट". आज तक (in இந்தி). 2024-05-02. பார்க்கப்பட்ட நாள் 2024-06-07.
  7. Anand, Nisha (2024-06-04). "Lok Sabha polls result: Brij Bhushan Singh's son Karan wins UP's Kaiserganj". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 2024-06-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரண்_பூசண்_சிங்&oldid=4091249" இலிருந்து மீள்விக்கப்பட்டது