கரந்தை

மலர்
(கரந்தை மலர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சங்க இலக்கியங்களில் கூறப்படும் கரந்தை மலர் எது என்பதை அடையாளம் காண்பதில் அறிஞர்கள் மாறுபடுகின்றனர்.

கரந்தை
அவர்கள் காட்டுவன

தொல்காப்பியம் கரந்தை என்பதை 7 புறத்திணைகளில் ஒன்றான வெட்சித்திணையின் துறைகளில் ஒன்றாகக் காட்டுகிறது.[1]

  • வெட்சி சூடி ஆனிரை கவர்வதும், கரந்தை சூடி ஆனிரை மீட்பதும் பண்டைத் தமிழரின் போர்முறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கணநூல் கூறுகிறது.[2]
குறிப்பு
தொல்காப்பியம் கரந்தையைத் துறை எனக் காட்டுகிறது.
புறப்பொருள் வெண்பாமாலை 12 திணைகளில் ஒன்று எனக் காட்டுகிறது.

சங்கப்பாடல் தரும் குறிப்பு

தொகு

பால் கறக்கும் பசுவின் முலைபோல் கரந்தை பூக்கும் என்கிறார் ஆவூர் மூலங்கிழார் [3] இந்தச் சான்று கரந்தை என்பது திருநீற்றுப் பச்சை என்பாரின் கருத்தை உறுதி செய்கிறது

மேலும் பார்க்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. ஆரமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும்
    சீர்சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்
    தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்
    மனைக்கு உரி மரபினது கரந்தை - தொல்காப்பியம் பொருளதிகாரம் 63

  2. மலைந்து எழுந்தோர் மறம் சாயத்
    தலைக்கொண்ட நிரை பெயர்த்தன்று - புறப்பொருள் வெண்பாமாலை நூற்பா 22

  3. நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை - புறநானூறு 261


"https://ta.wikipedia.org/w/index.php?title=கரந்தை&oldid=3404197" இலிருந்து மீள்விக்கப்பட்டது