கராச்சி கோளரங்கம்
பாக்கித்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் உள்ளது
கராச்சி கோளரங்கம் (PIA Planetarium, Karachi) பாக்கித்தான் நாட்டின் கராச்சி நகரில் அமைந்துள்ள ஒரு கோளரங்கமாகும்.[1] கோளரங்கத்தில் வான-குவிமாடம் ஒன்றும் கோளரங்கப் பூங்காவில் போயிங் 720 ஏபி-ஏ.எக்சு.எல். என்ற வர்த்தக விமானம் ஒன்றும் உள்ளன. கோளரங்கம் அறிவியல் மாணவர்களுக்கு கல்வியை வழங்குகிறது. விண்வெளி ஆர்வம் கொண்ட, குறிப்பாக குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்காக ஏராளமான விண்மீன்கள் தொடர்பான கல்வி வள சேவைகள் இங்கு வழங்கப்படுகின்றன. உருது மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. 250 பேர் அமர்ந்து பார்வையிடும் வசதியை கோளரங்கம் பெற்றுள்ளது. 1985 ஆம் ஆண்டு முதலில் கராச்சியிலும் பின்னர் லாகூரிலும் நிறுவப்பட்டது. பாக்கித்தான் பன்னாட்டு விமான நிறுவனத்தின் கீழ் கராச்சி கோளரங்கம் செயல்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://wikimapia.org/401777/PIA-Planetarium location of planetarium in Karachi