கரிசல் நிலம்
கரிசல் நிலம் அல்லது கரிசல் வட்டாரம் என்பது மதுரைக்குத் தெற்கிலுள்ள திருமங்கலம் முதல் திருநெல்வேலிக்கு வடக்கிலுள்ள கங்கை கொண்டான் வரையிலும் உள்ள பகுதிகளைக் குறிப்பதாகும்.[1] இது தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நிலமாகும். [2] இங்கே கருப்பு நிறத்துடன் நீரின் ஈரப்பதத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் கரிசல் மண் பகுதிகளாகும். கரிசல் நிலத்தைப் புன்செய் நிலம் என்றும் அழைப்பர்.
இலக்கியம்
தொகுஇப்பகுதியை மையமாகக் கொண்ட படைப்புகளை கரிசல் இலக்கியம் என்கிறோம். கி. ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, சோ. தர்மன், மேலாண்மை பொன்னுசாமி, பொன்னீலன் முதலியோர் கதைகளில் கரிசல் வட்டாரத் தன்மையும் வட்டார வழக்குகளையும் காணலாம்.
உணவு முறை
தொகுஇக்கரிசல் நிலத்தில் அதிகமாகக் கம்பு, குதிரைவாலி போன்ற தானியங்களே பயிரிடப்படுகின்றன. ஆதலால் கரிசல் நில மக்களின் முதன்மையான உணவாகக் கம்மங்கூழ், கம்மஞ்சோறு போன்ற உணவே இருக்கின்றன. சான்றாக, “கம்மஞ்சோற்றில் தனி நல்லெண்ணெய் விட்டு தொட்டுச் சாப்பிடுவார்கள். அதோடு கொஞ்சம் கருப்பட்டியையும் நுணுக்கிப் போட்டுக் குழைத்து அதைத் தொட்டுச் சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்” (கி.ராஜநாராயணன் கதைகள், கரிசல் காட்டில் ஒரு சம்சாரி ப. 503 ) என்ற வரிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றன. “ஒரு தடவை குத்திப் போடும் கம்மங்கஞ்சியை மூன்று நாட்களுக்கு வைத்துக் கொள்வார்கள். கானப்பருப்புத் துவையலை அரைத்து வைத்துக் கொண்டு கம்மஞ்சோற்றைப் பட்டதோ படலையோ என்று தொட்டுச் சாப்பிடுவார்கள். இரண்டாவது தடவைக்குத் தண்ணீர் விட்டுக் கரைத்துச் சாப்பிடுவார்கள்” (கி.ராஜநாராயணன் கதைகள், கரிசல் காட்டில் ஒரு சம்சாரி ப. 502 ) என்ற வரிகள் உணர்த்துகின்றன.
இவற்றையும் பார்க்கலாம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "கரிசல் வட்டாரத்தில் ஜாதிய நிலைகள்". சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ். https://www.shanlaxjournals.in/pdf/TS/V2N2/TAM_V2_N2_021.pdf. பார்த்த நாள்: 17 November 2023.
- ↑ https://www.vikatan.com/agriculture/virudhunagar-farmer-cultivates-cauliflower-in-black-soil