கரிநாள் (சோதிடம்)

கரிநாள் என்பது நல்ல நிகழ்வுகளைச் செய்ய ஏற்ற நாள் இல்லை என்பது சோதிட நம்பிக்கை.[1] கரிநாள் என்றால் நஞ்சு என்று பொருள்படும். எனவே இந்த நாட்களை ஒதுக்கிவிடும்படி பஞ்சாங்கங்களும் சோதிடர்களும் பரிந்துரைக்கிறார்கள்.இந்த நாளைப் பஞ்சாங்காதி எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாளை தனிய நாட்கள் என்றும் கூறுகிறார்கள்

தமிழ்ப் பஞ்சாங்கம்

தொகு

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கரிநாள் வரும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் இந்த இந்த தேதிகள் கரிநாட்கள் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இந்தத் தமிழ்த் தேதிகள் மாறாதனவாகும். எந்த ஒரு தமிழ் ஆண்டுக்கும் இது பொருந்தும். எடுத்துக்காட்டாக, தை மாதம் 1, 2, 3, 11, 17 ஆகிய தேதிகள் கரிநாட்களாகும். இவை மாறவே மாறா.

பட்டியல்

தொகு

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் கரிநாட்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

எண் தமிழ் மாதம் தேதி (கள்)
1 சித்திரை 6,15
2 வைகாசி 7, 16, 17
3 ஆனி 1,6
4 ஆடி 2, 10, 20
5 ஆவணி 2, 9, 28
6 புரட்டாசி 16, 29
7 ஐப்பசி 6, 20
8 கார்த்திகை 1, 4, 10, 17
9 மார்கழி 6, 9, 11
10 தை 1, 2, 3, 11, 17
11 மாசி 15, 16, 17
12 பங்குனி 6, 15, 19
  1. தினமலர் பக்திமலர் 30-07-2015 பக்கம் 8
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிநாள்_(சோதிடம்)&oldid=2745264" இலிருந்து மீள்விக்கப்பட்டது