கரிம்புழா ராமசுவாமி கோயில்
கரிம்புழா ராமசுவாமி கோயில் இந்தியாவின் கேரளா, பாலக்காடு மாவட்டத்தில் பாரதப்புழா ஆற்றின் முக்கிய துணை நதியான கரிம்புழா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் தட்சிண அயோத்தி என்றும் அழைக்கப்படுகிறது.
புராணம்
தொகுராமர் கரிம்புழா நதியில் தனது வாழ்க்கையைத் துறந்ததாக நம்பப்படுகிறது. ராமரின் தனது கடைசி தருணங்களில் மட்டுமே அனுமன் உடன் இருந்தார் என்பதை அனுமன் இங்கு இருப்பதைக் கொண்டு நியாயப்படுத்த முடிகிறது. பின்னர் கோயிலுக்குள் அனுமன் சிலை வைக்கப்பட்டது.
கருவறை
தொகுகோயிலின் கருவறை வட்ட வடிவில் உள்ளது. ஆண்டுதோறும் எட்டு நாள் விழா மலையாள மாதமான கும்பத்தில் (பிப்ரவரி மார்ச்) கொண்டாடப்படுகிறது.[1]
சிறப்பு
தொகுகேரளாவில் உள்ள அரிதான மகாசேத்திரங்களில் இதுவும் ஒன்று என்ற பெருமையுடையதாகும்.