கரிம ஒளிகாலும் இருமுனையம்

கரிம ஒளிகாலும் இருமுனையம் (OLED, organic light-emitting diode) என்பது ஒரு ஒளிகாலும் இருமுனையம் (LED), இதன் உமிழும் மின்னொளிர்வுப் பட்டை ஒரு கரிமச் சேர்வையைக் கொண்டு உருவாக்கப்பட்ட படலம் ஆகும். இச்சேர்வை மின்னூட்டம் பெறும் போது ஒளியை உமிழ்கிறது. கரிமக் குறைக்கடத்தியைக் கொண்ட இந்த மின்னொளிர்வுப் பட்டை இரு மின்முனைகளுக்கிடையில் அமைந்துள்ளது. பொதுவாக, இந்த மின்முனைகளில் ஒன்று ஒளிபுகு தன்மை கொண்டதாக இருக்கும்.[1][2][3]

55" எல்ஜி OLED தொலைக்காட்சித் திரை 2012 நுகர்வு இலத்திரனியல் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
OLED ஒளிச் சட்டம்

கரிம ஒளிகாலும் இருமுனையங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளின் திரைகள், கணினித் திரைகள், நகர்பேசிகள், தனிநபர் எண்மத்துணைகள் போன்றவற்றில் எண்ணிமக் காட்சிகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Organic EL - R&D". Semiconductor Energy Laboratory. பார்க்கப்பட்ட நாள் 8 July 2019.
  2. "What is organic EL?". Idemitsu Kosan. பார்க்கப்பட்ட நாள் 8 July 2019.
  3. Kamtekar, K. T.; Monkman, A. P.; Bryce, M. R. (2010). "Recent Advances in White Organic Light-Emitting Materials and Devices (WOLEDs)". Advanced Materials 22 (5): 572–582. doi:10.1002/adma.200902148. பப்மெட்:20217752. Bibcode: 2010AdM....22..572K.