கருக்கணிகள்
கருக்கணிகள் என்பவை சிற்ப வடிவங்களில் அலங்காரத்திற்காக அமைக்கப்படுகின்ற வடிவமைப்பு ஆகும். ஆடைகளில், அணிகலன்களில், விலங்குகளின் உறுப்புகளை அலங்கரிக்கவும், இந்த கருக்கணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனை கோடிப்பாளை என்றும் அழைப்பர்.
வகைகள்
தொகுஇந்த கருக்கணிகள் ஒன்பது வகையாக உள்ளன.
- சுடர்க் கருக்கு
- குதிரைவால் கருக்கு
- அன்னவால் கருக்கு அல்லது அன்னவாசல் கருக்கு
- கோடிப்பாளைக் கருக்கு
- மையப் பாளைக் கருக்கு
- கொடிக் கருக்கு
- ஓடுக் கருக்கு
- வட்டக் கருக்கு
- அடைப்புக் கருக்கு
கோயில்களில்
தொகுநெடுங்களநாதர் கோயிலின் முதல் வகைத் தூண்களின் சதுரங்கள் சிலவற்றில் கருக்குகளுடன் கூடிய சிற்பங்கள் உள்ளன.[1] ஒரு சதுரத்தில் எதிர்ப்பார்வையிலுள்ள இரண்டு தாவுயாளிகள் கருக்கணிகள் உமிழ்கின்ற வண்ணம் உள்ளன.[1] வேறொரு சதுரத்தில் பெண்ணொருவரைக் கருக்கணிக் காரிகையாகக் காட்சிப்படுத்துகிறது.[1]
இவற்றையும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1657&Title=Nedungalanathar%20-%202 நெடுங்களநாதர் கோயில் -2 கட்டுரை - இரா.கலைக்கோவன், மு.நளினி. வரலாறு ட ஆட் காம்