கருங்குழி பேரூராட்சி
கருங்குழி பேரூராட்சி இது, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மதுராந்தகம் ஒன்றியத்தில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
பேரூராட்சி
தொகுஇப்பேரூராட்சி 15 வார்டுகள் கொண்டது. இப்பேரூராட்சிக்கு உட்பட்டு 3 கிராமங்கள்உள்ளன. அவை மேலவலம்பேட்டை, மலைப்பாளையம் மற்றும் கருங்குழி ஆகும். இப்பேரூராட்சிக்கு உட்பட்டு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி, இரு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. மொத்த மக்கள் தொகை 12,485 ஆகும்.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15 வார்டுகளையும், 3,075 h குடியிருப்புகளையும் கொண்ட இப்பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 12,485 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 6,245 மற்றும் 6,240 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 1300 ஆகும். சராசரி எழுத்தறிவு 88.27% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 4,577 மற்றும் 135 ஆகவுள்ளனர்.[1]> இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 92.96%, இசுலாமியர்கள் 5.44%, கிறித்துவர்கள் மற்றும் பிறர் 0.47% ஆக உள்ளனர். [2]
குடிநீர் வசதி
தொகுஇவ்வூருக்கு அருகில் பாலாறு ஓடுகிறது. மதுராந்தகம் ஏரியும் அருகில் உள்ளதால் விவசாயம் குறைவற நடைபெறுகிறது. ஏரிப்பாசனம் நடைபெறுகிறது. குடிநீர் வசதி நிறைவாக உள்ளது.
போக்குவரத்து வசதி
தொகுதிருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இவ்வூர் உள்ளதால் 'போக்குவரத்து வசதி நன்றாக உள்ளது.
சிறப்புகள்
தொகுகருங்குழி பேரூராட்சி, தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சியாக முதல் பரிசை 15 ஆகத்து 2022 அன்று பெற்றது.[3]