கருத்தியல்
கருத்தியல் (ⓘ) (Ideology) என்பது தனி ஒருவரோ, குழுவோ, சமூகமோ பெற்றிருக்கும் வரன்முறை நம்பிக்கைகள், நனவுள்ள, நனவிலி மன எண்ணக்கருக்கள் ஆகியவற்றின் நுண்ணிலைத் தொகுப்பாகும்.
கருத்தியல் என்பது உலகப் பார்வை, கற்பனை (சமூகவியல்), இருப்பியல் (மெய்யியல்) ஆகியவற்றை விடக் குறுகிய கருத்துப்படிமம் ஆகும்.[1]
மார்க்சிய அல்லது உய்யநிலைக் கோட்பாடுகளின்படி, சமூகத்தின் ஆளும் வருக்கம் அல்லது உயரதிகாரக் குழுவால் அரசியற் கருத்தியல் முன்மொழியப்படுகிறது. பொதுவாழ்க்கையும் தனியார் வாழ்க்கையும் பிரித்துணரப்படும் சமூகங்களில் ஒவ்வொரு அரசியல்போக்கும் பொருளியல் போக்கும் கருத்தியலைக் கொண்டுள்ளது. இது தெளிவான/வெளிப்படையான சிந்தனை வடிவமாக அமைய தேவையில்லை.
அல்தூசரியக் கண்ணோட்டப்படி, கருத்தியல் என்பதுநிலவும் மெய்ந்நிலை நிலைமைகளினைச் சார்ந்த கற்பனை உணர்வாகும்.
கருத்தியல் என்பது, நம்பிக்கைகள், இலக்குகள், எண்ணக்கருக்கள் ஆகியவற்றின் ஒரு தொகுதி. பொதுவாக அரசியலில் இது பயன்படுத்தப்படுகிறது. கருத்தியல் என்னும் சொல்லுக்குப் பதிலாக கருத்துநிலை, சித்தாந்தம் போன்ற சொற்களும் வழக்கில் உள்ளன. சமூக ஊடாட்டம் வளர வளர மனிதர்கள் பொதுவான எண்ணக் கருத்துக்களையும், உலகம் பற்றியனவும், தமது சமூக வாழ்க்கை பற்றியனவும், தெய்வம், சொத்து, தர்மம், நீதி ஆகியவை பற்றியவையுமான நோக்குகளை வளர்த்துக் கொள்கிறார்கள். இவ்வாறாக இவை சமூகம், அரசியல், சட்டம், மதம், கலை, மெய்யியல் நோக்கு ஆகியவை தொடர்பான கருத்துநிலைப்பட்ட எண்ணங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். இவையே கருத்துநிலை என்று பெரும்பாலும் குறிப்பிடப்படுகின்றது." என ஜேம்ஸ் கிளக்மான் என்பவரை மேற்கோள் காட்டி சிவத்தம்பி எழுதியுள்ளார்[2].
கருத்தியலின் முக்கியமான நோக்கம் நெறி சார்ந்த சிந்தனைகள் ஊடாக மாற்றங்களை உண்டாக்குவதாகும். கருத்தியல்கள் பொது விடயங்களில் பயன்படுத்தப்படும் நுண்ணிலைச் சிந்தனை (abstract thought) முறைமைகள் எனலாம். இதனால் கருத்தியல் என்னும் கருத்துரு அரசியலில் சிறப்பிடம் பெறுகிறது. வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலும் சொல்லப்படாவிட்டாலும் எல்லா அரசியல் போக்குகளும் உள்ளார்ந்த நிலையில் ஒரு கருத்தியல் நிலையைக் கொண்டிருக்கின்றன.
சொற்பொருளியலும் வரலாறும்
தொகுகருத்தியல் எனும் சொல் முதலில் பிரெஞ்சுப் புரட்சியில் உருவாகிப் பின்னர் பலவகைப் பொருள்மாற்றங்களை அடைந்துள்ளது.
பிரெஞ்சுப் புரட்சியின்போது சிறையில் இருந்தபோது, இச்சொல்லும் அதனைச் சார்ந்த அனைத்து எண்ணக் கருக்களும் 1796 இல் அந்தோய்ன் தெசுதத் தெ திரேசியால் உருவாக்கப்பட்டது[3]. இச்சொல், எண்ணக்கரு அல்லது கருத்து எனும் ஜான் இலாக்கேவின் சொல்லுக்கு இணையான பண்டைய கிரேக்கச் சொற்களாகிய ἰδέα என்பதையும் (-logy) ( -λογία) எனும் சொல்லையும் இணைத்து உருவாக்கப்பட்டது.
மேக்சிமில்லியன் உரோபெசுபியேரை பதவியிறக்கிய அரசியல் கலகம் திரேசி தொடர்ந்து இப்பணியை மேற்கொள்ள வழிவகுத்தது.[3][4]
உணர்ச்சிவயப்பட்ட கும்பலின் உந்தல்கள் தனக்குப் பேரழிவை விளைவித்ததால் புரட்சியின் அச்சுறுத்தக் கட்டத்துக்கு எதிர்வினையாற்ற, கும்பல் உணர்ச்சியைக் கட்டுபடுத்தக்கூடிய பகுத்தறிவார்ந்த எண்ணக்கருக்களின் அமைப்பை உருவாக்கப் பணிபுரிந்தார். எனவே, இவர் எண்ணக்கருக்களின் அறிவியலுக்கான சொல்லை உருவாக்க முனைந்தார். இது பின்வரும் இருபொருண்மைகளை ஆய்வுசெய்து ஒழுக்கநெறி, அரசியல் அறிவியல் புலங்களுக்கு உறுதியான அடித்தளத்தை உருவாக்குமென நம்பினார்: 1) பொருள் உலகுடனான மக்களின் ஊடாட்டம் அல்லது பட்டறிவுசார்ந்த உணர்திறங்கள், 2) இந்த உணர்திறங்கள் இவர்களது மனதில் ஏற்படுத்தும் எண்ணக்கருக்கள். இவர் தாராளவாத சார்ந்த கருத்தியலை கருதினார். இது தனியரின் விடுதலைக்கும் சொத்துக்கும் விடுதலையான சந்தை முறைக்கும் தற்காப்பு தருவதோடு, அரசதிகாரத்துக்கான அரசியலமைப்பு சட்ட வரம்புக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்த்தார். இந்த அனைத்துக் கூறுபாடுகளையும் கருத்தியல் மட்டுமே தெளிவாகச் சுட்டும் என வாதிடுகிறார். இவர் கருத்தியல் எண்ணக்கருக்களின் அறிவியலாக உள்ளதோடு, அவற்றை வெளிப்படுத்தி விளக்கும் உரையாடலாகவும் விளங்குவதாக வாதிட்டார்[4]
திரேசிக்குப் பிறகான ஒரு நூற்றாண்டில் கருத்தியல் மாறிமாறி நேர்முக, எதிர்மறை கருத்து ஊடகமாக அமையலானது.
கருத்தியலின் மிகச் சரியான பொருளைக் கிப்போலைட் தய்னேவின் தற்கால பிரான்சின் தோற்றம் எனும் நூலின் முதல் தொகுதியில் கானலாம். இவர் கருத்தியலை, சாக்ரட்டிசு முறைவழியாக மெய்யியலைப் பயிற்றுவிப்பது போல, பொது வாசகர் பெற்றுள்ள அறிவுக்கு அப்பால் தாண்டாமலும் அறிவியலுக்குத் தேவையானதுபோன்ற எடுத்துகாட்டுகளைக் கூறாமலும் விளக்குகிறார். தய்னே இக்கருத்துப்படிமத்தை திரேசியிடம் மட்டுமே பெற்றதாகக் கூறவில்லை; இவர் இக்கருத்துக்கான முன்னோடிகளாக திரேசியையும் அவரைச் சார்ந்த காண்டிலாக்கையும் இனங்காண்கிறார். (திரேசி பிரெஞ்சுப் புரட்சியினால் சிறையில் இருந்தபோது இலாக்கே, காண்டிலாக் இருவரது நூல்களையும் படித்தார்.))
கருத்தியல், தனது இழிவுபடுத்தும் கொட்டலைக் கைவிட்டு, பொதுச் சொல்லாக பல்வேறு அரசியல் கருத்துரைகளிலும் சமூகக் குழுக்களின் பார்வைகளிலும் மாற்றங் கண்டது.[5] கார்ல் மார்க்சு இச்சொல்லை வகுப்புப் போராட்டத்தில் பயன்படுத்த,[6][7] மற்றவர்கள் இதைச் சமூகக் கட்டமைப்புச் செயல்பாட்டின் பகுதியாகவும் சமூக ஒருங்கிணைப்பாகவும் நம்பினர்.[8]
பகுப்பாய்வு
தொகுமார்க்சியப் பார்வை
தொகுஉலூயிசு அல்தூசரின் அரசு கருத்தியல் எந்திரங்கள்
தொகுகை தேபோர்டுவின் பணிகளில் கருத்தியலும் சரக்கும்
தொகுசில்வியோ வியட்டா: கருத்தியலும் பகுத்தறிவும்
தொகுஎரிக் ஓஃபெர்: இணைக்கும் முகமைகள்
தொகுஉரொனால்டு இங்கிளெகார்ட்
தொகுஅரசியற் கருத்தியல்கள்
தொகுஅரசின் கருத்தியல்
தொகுதாராள வாதம்
நடைமுறைப்படுத்தல்
தொகுஅறிதலியற் கருத்தியல்கள்
தொகுநிலவும் நம்பிக்கைகளுக்கே அறைகூவல்விடும் அறிவியற் கோட்பாடுகள் உருவாகியிருந்தாலும், சில ஓங்கலான சிந்தனைச் சட்டகமோ, மன அமைவோ வாய்ந்தவரை, சில அறைகூவல்களையும் கோட்பாடுகளையும் செய்முறைகளையும் தவிர்ப்பது எளிமையாகவே முடிகிறது.
அறிவியல் ஏற்றுக்கொண்டுள்ள சிறப்புக் கருத்தியல், சூழலியல் சார்ந்த ஒன்றாகும்; இது புவியில் வாழும் உயிரியல் திணைகளுக்கு இடையில் அமையும் உறவுகளை ஆய்கிறது. புலன்காட்சிசார் உளவியலாளராகிய ஜேம்சு ஜே. கிப்சன், சூழலியல் உறவுகள் சார்ந்த மாந்தப் புலன்காட்சியே மாந்தனின் தன்னுணர்வு தோன்றுவதற்கும் அறிதல் நிகழ்வு தோன்றுவதற்கும் அடிப்படையாகும் என நம்புகிறார். மொழியியலாளர் ஜார்ஜ் இலேகாப் கணிதவியல்சார் அறிதல் முறையியலை வெளியிட்டுள்ளார். இதன்படி, அடிப்படை எண்ணியல் சார்ந்த கணிதவினைகள் பற்றிய எண்ணக்கருக்களே கூட மாந்தனின் சூழலியல்வழி படிமலர்ந்த புலன்காட்சியால் தான் உருவாகின எனக் கூறுகிறார்.
ஆழ்சூழலியலும் புதுச்சூழலியல் இயக்கமும் ஓரளவு பசுமைவாதிகளும் சூழல் அறிவியலைத் தங்களது நேர்மறையான கருத்தியலாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
சூழல் அறிவியலின் கோட்பாடுளை அறிவியல் முறைமைகளால் நிறுவமுடிந்தாலும், சூழற் பொருளியலானது அறிவியல் கோட்பாட்டை அரசியற் பொருளியலாக மாற்றுவதால் சிலர் அதை எதிர்த்துக் குறைகூறுகின்றனர். இக்காலப் பசுமைப் பொருளியல் இரு அணுகுமுறைகளையும் இணைத்து அறிவியலாகவும் கருத்தியலாகவும் அமைகிறது.
இது பொருளியல் கோட்பாடாக மட்டுமின்றி, கருத்தியலாகவும் வளர்கிறது; சில குறிப்பிடத் தகுந்த பொருளியல்சார்ந்த கருத்தியல்களாக, புது தாராளவாதம், பணவாதம், வணிகநிலைவாதம். கலப்புப் பொருளியல், சமூக டார்வினியம், பொதுவுடைமை, கட்டற்ற பொருளியல், கட்டற்ற தொழிவணிகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். பாதுகாப்பான தொழில்வணிகம், நேர்மையான தொழில்வணிகம் பற்றிய நடப்புக் கோட்பாடுகளையும் கருத்தியல்களாகக் கருதலாம்.
உளவியல் ஆராய்ச்சி
தொகுஉளவியல் ஆய்வு[9] கருத்தியல், அரசியலுறுதிப்பாடுகள் எப்போதும் சிந்தனையையும் தற்சார்பு துணிபையும் உணர்த்தும் பார்வைக்கு மாறாக, நனவிலி உந்துதல் நிகழ்வுகளைப் பெரிதும் உணர்த்துவதாக கூறுகிறது. யோசுட்டு இலெட்ஜர்வுடும் ஆர்டீனும் 2009 இல் கருத்தியல்கள் விளக்கத்தின் முன்தொகுப்புகளாகச் செயல்பட்டு வேகமாக பரவலாம் என முன்மொழிந்தனர். இவை உலகைப் புரிந்துகோள்ளவும் சூழலில் நிலவும் அச்சுறுத்தலைத் தவிர்க்கவும் மதிப்பு வாய்ந்த தனியர் நடுவில் அமையும் உறவுகளைச் செழுமைப்படுத்தவும் உதவுகின்றன எனவும் உரைத்தனர்.[9] அமைப்பு சார்ந்த உலகப் பார்வைகளை ஏற்க இத்தகைய உந்துதல்கள் வழிவகுக்கலாம் என முடிவாகக் கூறுகின்றனர். உளவியலாளர்கள், ஆளுமைப் பண்புகளும் தனியரின் வேறுபட்ட மறிகளும் தேவைகளும் கருத்தியல் நம்பிக்கையுடன் ஓரிழையில் பின்னிப் பிணைந்துள்ளதாகக் பொதுவாக கண்டறிந்துள்ளனர்.[சான்று தேவை]
கருத்தியலும் குறிசார் கோட்பாடும்
தொகுகுறியியலாளரும் மொழியியலாளருமாகிய பாப் ஓட்கின் கண்னோட்டப்படி, கருத்தியல் " சமூக முகமைகளும் (குழுக்களும்) நிகழ்வுகளும் சார்ந்த சில சிக்கலான பொருண்மைக் கணங்கள் வாய்ந்த ஒற்றை நோக்கத்தை இனங்காண்கிறது". வேறு எந்தச் சொல்லும் இவ்வளவு பொருண்மை வய்ந்த்தாக அமைவதில்லை. மைக்கேல் பூக்கோவின் அறிதல் அலகும் குறுகிய நுண்பொருள் வாய்ந்த்தே; சமூகப் பொருளை உள்லடக்குவதும் இல்லை. அவரது உரையாடல் வேகவேகமாகப் பரவியதே இது சில கருத்தியல் களங்களை மேலீடான சொல்லாடல் விளக்கியதாலேயே எனலாம். உலகப் பார்வை என்பதும் பரப்புரைச் சுமை வாய்ந்த மீவியற்பியல் (மெய்யியல்) சொல்லேயாகும். கருத்தியல் தன் அக முரண்பாடுகளால், இன்னமும் சமூகம், அரசியல் வாழ்க்கை சார்ந்த குறியியலில் பெரும்பாத்திரம் வகிக்கிறது."[10] மைக்கெல் பிரீடன் போன்ற ஆசிரியர்கள் பொருண்மையியல் கண்ணோட்டத்தில் கருத்தியலைப் பகுப்பாய்வு செய்துள்ளனர்.
மேற்கோள் உரைகள்
தொகு- "கருத்தியலை நம்ப நமக்கு ஏதும் தேவையில்லை. ஆனால் கட்டாயமாக நமக்குத் தேவைப்படுவது நம் நற்பண்புகளை வளர்த்துக்கொள்வதே ஆகும். பொதுப்பொறுப்புடைமை உணர்வு நிகழ்கால வாழ்வின் அனைத்துக் கூறுபாடுகளையும் மாற்றிவிடும்."— தலாய் லாமாவின் நூல்.[11]
- "தேசியம் என்பது நமது வாழெல்லையை உருவாக்கும் விலங்கு உணர்வேயாகும், இட்லர் தலைமையின்கீழ் தனிச் செருமானிய இனம் எனும் இனக்குழு உணர்வு தொடக்கநிலை மாந்தனின் அல்லது பிந்தைய பாபூன் குரங்கினத்தின் உணர்வைவிட எவ்வகையிலும் வேறுபட்டதோ பண்பட்டதோ அல்ல."—இராபர்ட் ஆர்திரே.[12]
- 'ஒரு கருத்தியலின் நற்பணி அது எவ்வளவு வேகமாக கலாவதியாகிறது என்பதிலேயே உள்ளது.' [13]
- 'பொய்யாக முகமூடி அதிகாரத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துக்காகவே கருத்தியல் பயன்படுகிறது.' [14]
- சல்லி ஆசுலாங்கர்
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Steger, Manfred B.; Paul James (academic) (2013). "Levels of Subjective Globalization: Ideologies, Imaginaries, Ontologies". Perspectives on Global Development and Technology 12 (1–2.). http://www.academia.edu/4311113/Levels_of_Subjective_Globalization_Ideologies_Imaginaries_Ontologies.
- ↑ சிவத்தம்பி, கார்த்திகேசு; யாழ்ப்பாணம் சமூகம், பண்பாடு, கருத்துநிலை; குமரன் புத்தக இல்லம், கொழும்பு; 2000. பக். 57
- ↑ 3.0 3.1 Hart, David M. (2002) Destutt De Tracy: Annotated Bibliography
- ↑ 4.0 4.1 Kennedy, Emmet (Jul–Sep 1979). ""Ideology" from Destutt De Tracy to Marx". Journal of the History of Ideas 40 (3): 353–368. doi:10.2307/2709242.
- ↑ Eagleton, Terry (1991) Ideology. An introduction, Verso, pg. 2
- ↑ Tucker, Robert C (1978). The Marx-Engels Reader, W. W. Norton & Company, pg. 3.
- ↑ Marx, MER, pg. 154
- ↑ Susan Silbey, "Ideology" at Cambridge Dictionary of Sociology.
- ↑ 9.0 9.1 Jost, John T., Ledgerwood, Alison, & Hardin, Curtis D. (2008). "Shared reality, system justification, and the relational basis of ideological beliefs." Social and Personality Psychology Compass, 2, 171–186
- ↑ Bob Hodge, "Ideology" பரணிடப்பட்டது 2008-09-05 at the வந்தவழி இயந்திரம், at Semiotics Encyclopedia Online.
- ↑ The Dalai Lama's Book of Wisdom, edited by Matthew Bunson, Ebury Press, 1997, p. 180.
- ↑ Robert Ardrey, African Genesis, Fontana, 1969, p. 188.
- ↑ Richard taruskin, The dangers of Music and other essays, p86
- ↑ https://doi.org/10.1093/arisup/akx001
மேற்கோள்கள்
தொகு- Althusser, Louis (1971) 'Ideology and Ideological State Apparatuses' Lenin and Philosophy and Other Essays Monthly Review Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58367-039-4
- Belloni, Claudio, Per la critica dell’ideologia. Filosofia e storia in Marx, Mimesis, Milano-Udine 2013.
- Duncker, Christian (Hg.) Ideologiekritik Aktuell – Ideologies Today. Bd. 1. London 2008,[1]. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84790-015-9
- Christian Duncker: Kritische Reflexionen Des Ideologiebegriffes, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-903343-88-7
- Eagleton, Terry (1991) Ideology. An introduction, Verso, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86091-319-8
- Ellul, Jacques. Propaganda: The Formation of Men's Attitudes. Trans. Konrad Kellen & Jean Lerner. New York: Knopf, 1965. New York: Random House/ Vintage 1973
- Freeden, Michael. 1996. Ideologies and Political Theory: A Conceptual Approach. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-829414-6
- Feuer, Lewis S. (2010) Ideology and Ideologists. Piscataway, New Jersey: Transaction Publishers.
- Gries, Peter Hays. The Politics of American Foreign Policy: How Ideology Divides Liberals and Conservatives over Foreign Affairs (Stanford University Press, 2014)
- Haas, Mark L. (2005) The Ideological Origins of Great Power Politics, 1789–1989. Cornell University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-80147-407-8
- Hawkes, David (2003) Ideology (2nd ed.), Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-29012-0
- James, Paul; Steger, Manfred (2010). Globalization and Culture, Vol. 4: Ideologies of Globalism. London: Sage Publications.
- Lukács, Georg (1919–23) History and Class Consciousness [2]
- Malesevic, Sinisa and Iain Mackenzie (ed). Ideology after Poststructuralism. London: Pluto Press.
- Mannheim, Karl (1936) Ideology and Utopia Routledge
- Marx, Karl ([1845–46] 1932) The German Ideology [3]* Minogue, Kenneth (1985) Alien Powers: The Pure Theory of Ideology, Palgrave Macmillan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-01860-6
- Minar, David M. (1961) "Ideology and Political Behavior", Midwest Journal of Political Science. Midwest Political Science Association.
- Mullins, Willard A. (1972) "On the Concept of Ideology in Political Science." The American Political Science Review. American Political Science Association.
- Owen, John (2011) "The Clash of Ideas in World Politics: Transnational Networks, States, and Regime Change, 1510-2010", Princeton University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-14239-4
- Pinker, Steven. (2002) The Blank Slate: The Modern Denial of Human Nature New York: Penguin Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-03151-8
- Sorce Keller, Marcello. "Why is Music so Ideological, Why Do Totalitarian States Take It So Seriously: A Personal View from History, and the Social Sciences", Journal of Musicological Research, XXVI(2007), no. 2-3, pp. 91–122.
- Steger, Manfred B.; Paul James (academic) (2013). "‘Levels of Subjective Globalization: Ideologies, Imaginaries, Ontologies’". Perspectives on Global Development and Technology 12 (1–2.). http://www.academia.edu/4311113/Levels_of_Subjective_Globalization_Ideologies_Imaginaries_Ontologies.
- Verschueren, Jef. (2012) Ideology in Language Use: Pragmatic Guidelines for Empirical Research Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-69590-0
- Zizek, Slavoj (1989) The Sublime Object of Ideology Verso. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86091-971-4