கருநெல்லிநாதர் கோவில்
கருநெல்லிநாதர் கோவில். தமிழ்நாட்டிலுள்ள சிவகாசியின் புறநகர்ப் பகுதியில் உள்ள திருத்தங்கல்லில் அமைந்துள்ள சிவபெருமான் கோவிலாகும். சிவபெருமான் கருநெல்லிநாதராக லிங்க வடிவில் வழிபடப்படுகிறார். அவருடைய துணைவியார் பார்வதி சொக்கி அம்மனாக இங்கு சித்தரிக்கப்படுகிறார்.
கருநெல்லிநாதர் கோயில் | |
---|---|
பெயர் | |
வேறு பெயர்(கள்): | கருநெல்லிநாதர் கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | விருதுநகர் |
அமைவு: | திருத்தங்கல் |
ஆள்கூறுகள்: | 9°28′51″N 77°48′39″E / 9.48083°N 77.81083°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
100 அடி (30 மீ) உயரமுள்ள ஒரு மலை மீது இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது மற்றும் கோயிலில் ஒரு சிறிய கோபுர நுழைவாயில் உள்ளது. கோயில் ஒரு பாறை வெட்டு கோயிலாக உள்ளது. இங்கு கருநெல்லிநாதர் மற்றும் சொக்கி அம்மன் சிலைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. விஷ்ணு கோயிலான நின்ற நாராயண பெருமாள் கோயில் மற்றொரு பக்கத்தில் அமைந்துள்ளது. கி.பி.1233 ம் ஆண்டு பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் குருகுலத்திரயனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
கோயிலில் தினமும் காலை 6 மணி முதல் காலை 8.30 மணி வரை நான்கு முறை பூஜைகள் நடைபெறும். இந்த கோயிலானது தமிழ்நாட்டின் இந்து சமய மற்றும் அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
தல புராணம்
தொகுதிருவரங்கம் ரங்கநாதசுவாமி ஆலயத்திலிருந்து விசுணுவின் சாயல் வடிவம் கொண்ட ரங்கநாதர், ஆண்டாளைத் திருமணம் செய்து கொள்ளும் வண்ணம் திருவில்லிபுத்தூர் திவ்ய தேசத்திற்குப் பயணம் மேற்கொண்டார். அந்த இடத்தை அடையும் முன், ஒரு இடத்தில் இருட்டாகி விட, அந்த இடத்திலேயே இரவு கழிக்க முடிவு செய்தார். அவர், அந்த இடத்திலேயே தங்கிவிட்டதால், அவ்விடம் திருத்தங்கல் என்றும் அம்மலை தாளகிரி என்று அழைக்கப்பட்டது[1]. மற்றொரு புராணத்தின்படி, மகாபாரதத்தில் இருந்து பாண்டவர்கள் நாடு கடத்தப்பட்டு, வசித்து வந்தனர். அவர்கள் தினசரி பூசை செய்ய தண்ணீர் பெற முடியவில்லை. சூரியன் உதித்ததும், இளவரசர்களில் ஒருவரான அர்ச்சுனன், இந்த இடத்திற்கு தண்ணீரை அனுப்புவதற்காக கங்கையைப் பிரார்த்தனை செய்தார். பின்னர் தன் அம்பினால் எய்து பூமியைப் பிளந்து, ஒரு ஆற்றைக் கொண்டுவந்தார். இவ்வாறு அர்ச்சுணன் ஆறு உருவானதாக நம்பப்படுகிறது[2]. இந்த கோயில் அமைக்கப்பட்ட இடத்தில் இரண்டு நெல்லி மரங்கள் இருந்ததால் இருநெல்லிநாதர் எனப் பெயர் பெற்றது, பின்னர் அது கருநெல்லிநாதர் ஆக மருவியதாகக் கருதப்படுகிறது.[3]
வரலாறு
தொகுபாண்டியர்களால் கருநெல்லிநாதர் கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கோயிலுக்கு வழங்கப்பட்ட பரிசுகளைப் பற்றிய தகவல்களைக் குறிக்கும் கோயில் கல்வெட்டுகள் உள்ளன. கிபி. 1032-ல் இருந்த கல்வெட்டுகளின் மூலம் மலைப்பகுதியைத் தனது வீடாகத் தெரிவு செய்த பரமசுவாமி கோயில்களையே குறிக்கிறது. வள்ளப் பெரிய ஏரி என்ற பெயரில் ஒரு ஏரி ஆலயத்தின் பக்கத்தில் இருந்தது. இந்த ஏரியானது கிபி 1233-ல் பாண்டிய மன்னனின் காலத்தில் சுந்தர பாண்டியனின் அமைச்சர், குருகுலத்திரயனால் விரிவுபடுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. உள்ளி பொம்மன் களங்காத்த கண்டநாயக்கர் வீரமரணம் அடைந்ததனால் திருத்தங்கலைச் சுற்றியுள்ள இடங்கள் அவரது குடும்பத்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. கோயிலில் போர் வீரன் உருவம் நடந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுகிறது[1].
கோயில்
தொகு100 அடி (30 மீ) உயர ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது. ஒரு சிறிய கோபுர நுழைவாயில் உள்ளது. பல கோயில்கள் உள்ளன. இவற்றில் கருநெல்லிநாதர் மற்றும் சொக்கி அம்மன் கோயில் முக்கியமானதாகும். விசுணு கோயிலான நின்ற நாராயண பெருமாள் கோயில் மற்றொரு பக்கத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு குடைவரை கோயிலாகும். முதன்மைக் கடவுளாக கருநெல்லிநாதர் உள்ளார். விநாயகர், சூரியன், சந்திரன், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்குத் தனி சன்னதிகளும் உள்ளன. நடராசர் மற்றும் சிவகாமிக்கு ஒரு பெரிய அளவிலான கல் உருவம் கோயிலின் நடன மண்டபத்தில் அமைந்துள்ளது..[4]
கோயில் நுழைவாயிலுக்கு அருகில் காணப்படும் பழனி முருகன் ஆலயமும் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. ஆறுமுகத் தம்பிரான் முருகனின் தீவிர பக்தரானார். அவர் பழனிக்கு ஒவ்வொரு வருடமும் காவடியைச் சுமந்து சென்று, அதே நாளில் திருத்தங்கலுக்குத் திரும்பி விடுவார். பல வருடங்களாக பழனிக்கு செல்லும் தம்பிரான், நாளடைவில் மிகவும் சிரமப்பட்டார். அவர் ஒருமுறை சில படிகள் மேலேறிய பின், ஏற முடியாமல் மீண்டும் திரும்ப நேரிட்டது. ஒரு நாள் உணவு சமைக்கும் போது, கடவுள் முருகன் அவருக்கு தங்க நாணயங்கள் பொழிந்தாகவும், அவர் தனக்கு கிடைத்த தங்க நாணயங்களை வைத்து பழனி முருகனுக்கு திருத்தங்கல்லில் கோயில் கட்டினார். அவர் இவ்வுலகை விட்டு மறைந்த இடத்தில் அமைக்கப்பட்ட மடத்தில் அவரது படைப்பு நூல்கள் இன்றும் பராமரிக்கப்படுகிறது[1].
வழிபாடு மற்றும் சமய நடைமுறைகள்
தொகுதிருவிழாக்களில் மட்டும் அல்லாது தினமும் நான்கு வேளைகளிலும் பூசைகள் (சடங்குகள்) செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் மற்ற சிவன் கோயில்களைப் போல, சைவ சமயத்தைச் சார்ந்த பிராமணர்களால் பூசைகள் நடத்தப்படுகிறது. கோவில் சடங்குகள் ஒரு நாளைக்கு நான்கு முறை செய்யப்படுகின்றன; காலை 8:00 மணியளவில் காலை நேர பூசை, 12: 00 மணிக்கு உச்சிக் கால பூசை, மாலை நேர பூசை 5:00 மணிக்கும் மற்றும் அர்த்த சாம பூசை 8:30 மணிக்கும் நடைபெறுகிறது. ஒவ்வொரு சடங்குகளும் நான்கு படிகளாகும்:
அபிசேகம் (புனித குளியல்), அலங்காரம், நைவைத்தியம் (உணவு பிரசாதம்) மற்றும் தீப ஆராதனை (விளக்குகள் அசைத்தல்) ஆகியன மூலம் தினமும் அண்ணாமலை மற்றும் உண்ணாமலை அம்மன் இருவருக்கும் வழிபாடு அளிக்கப்படுகிறது. வழிபடானது நாதசுவரம் மற்றும் தவில்,ஆகியவற்றால் இசையமைக்கப்பட்டு, வேதங்களில் உள்ள மந்திரங்கள் (புனித நூல்கள்) பிராமணர்களால் முழங்க தினமும் வழிபாடு செய்வது காணப்படுகிறது.
வாராந்திர சடங்குகள் சோமவரம் மற்றும் சக்வாவரம் போன்றவையும், பிரதோசம் மற்றும் மாதாந்திர திருவிழாக்கள் போன்ற அத்தியாவசிய திருவிழாக்களும், அமாவாசை, கார்த்திகை, பவுர்ணமி மற்றும் சதுர்த்தி போன்ற நாட்களிலும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.[2] தைப்பூசம் என்பது சனவரி மாதத்தில் இக்கோவிலில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். அன்று ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 M., Rajagopalan (1993). 15 Vaishnava Temples of Tamil Nadu. Chennai, India: Govindaswamy Printers. pp. 129–142.
- ↑ 2.0 2.1 "Sri Karunellinathaswamy (Murugan) temple". Dinamalar. 2011. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
- ↑ T.S. Sridhar, ed. (2004). Excavations of Archaeological sites in Tamil Nadu(1969-95) (PDF) (Report). Department of Archaeology, Government of Tamil Nadu, Chennai. p. 7. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-14.
- ↑ Knapp, Stephen (2008). SEEING SPIRITUAL INDIA: A Guide to Temples. iUniverse. p. 364. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780595614523.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help)