கருந்தலை கருப்பு வெள்ளைக் கீச்சான்
கருந்தலை கருப்பு வெள்ளைக் கீச்சான் (அறிவியல் பெயர்: Hemipus picatus picatus) என்பது பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சானின் துணையினம் ஆகும்.
விளக்கம்
தொகுகருந்தலை கருப்பு வெள்ளைக் கீச்சான் சிட்டுக்குருவி அளவில் சுமார் 14 செ.மீ. நீகம் இருக்கும். இதன் அலகு கறுப்பாகவும், விழிப்படலம் ஆரஞ்சு நிறத்திலும், கால்கள் கரும்பழுப்பாகவும் இருக்கும். தோற்றத்தில் ஈப்பிடிப்பானை ஒத்து இருக்கும். ஆண் பறவையின் தலையும் முதுகும் பளபளக்கும் கறுப்பாக இருக்கும். பின் கழுத்தில் ஒரு வெள்ளை பட்டைக் கோடு காணப்படும். பிட்டம் வெள்ளையாகவும், இறக்கைகள் கறுப்பும் வெள்ளையுமாகவும் இருக்கும். பெண் பறவைகளுக்கு கறுப்புப் பகுதகள் நிறம் மங்கி புகைக் கறுப்பாக காட்சியளிக்கும்.[1]
பரவலும் வாழிடமும்
தொகுகருந்தலை கருப்பு வெள்ளைக் கீச்சான்கள் கேரளம் நீங்கலான தென்னிந்தியா முழுவதும் பொதுவாக இலையுதிர் காடுகளிலும், மூங்கில் காடுகளிலும், காடுகளை அடுத்து உள்ள தோப்புகளிலும் காணப்படுகின்றன.[1]
நடத்தை
தொகுஇப்பறவைகள் இணையாகவோ சிறு கூட்டமாகவோ ஒன்றை ஒன்று தொடர்ந்து மரங்களில் இலைகளிடையே புழு, பூச்சிகளைத் தேடி அலையக்கூடியன. பொதுவாக மற்ற இரைதேடும் பறைவைகளின் கூட்டத்தோடு கலந்தே இரை தேடும். இவற்றின் பழக்க வழக்கங்கள் காட்டுக் கீச்சான், மின்சிட்டுக் குருவி ஆகியவற்றை ஒத்து இருக்கும். இது பூச்சிகளையே முதன்மை உணவாக கொள்கிறது. வ்வீரீரிரி, வ்வீரீரிரி, வ்வீரீரிரி எனச் சிறு குரல் கொடுக்கக் கூடியது.
மார்ச் முதல் மே வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. வேர் பாசி, சிறு துளிர்கள் போன்றவற்றைக் கொண்டு குறுக்காகச் செல்லும் காய்ந்த அல்லது இலைகளற்ற மரக்கிளையில் கோப்பை வடிவில் சிலந்தி நூல்களைக் கொண்டு கட்டும். கீழிருந்து பார்ப்பவர்களுக்கு கூடுபோல் தெரியாமல் மரத்தில் புடைத்திருக்கும் ஒரு முருடு போலத்தால் தோன்றும். இரண்டு அல்லது மூன்று பசுமை தோய்ந்த வெண்மை நிற முட்டைகளை இருகின்றன. ஆணும் பெண்ணும் அடைகாக்கும் பொறுப்பை பகிர்ந்து கொள்கின்றன.[1]