கருப்பாநதி அணை
தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் சொக்கம்பட்டி அருகே கருப்பாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை கருப்பாநதி அணை (Karuppanadhi Dam) ஆகும். இந்த அணையின் மூலம் கடையநல்லூர் வட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறுகின்றன.
கருப்பாநதி அணை Karuppanadhi Dam | |
---|---|
நாடு | இந்தியா |
அமைவிடம் | கடையநல்லூர், தென்காசி மாவட்டம், தமிழ்நாடு |
புவியியல் ஆள்கூற்று | 9°08′15.5″N 77°18′12.7″E / 9.137639°N 77.303528°E |
நோக்கம் | Irrigation |
நிலை | பயன்பாட்டில் |
கட்டத் தொடங்கியது | 1971 |
திறந்தது | 1977 |
உரிமையாளர்(கள்) | தமிழ்நாடு அரசு |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 22 m (72 அடி) |
நீளம் | 890 m (2,920 அடி) |
வழிகால்கள் | 2 |
வழிகால் வகை | OG |
வழிகால் அளவு | 357 m3 (12,607 cu ft) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 5,240,000 m3 (185,048,854 cu ft)[1] |
வரலாறு
தொகுஇந்த அணையின் கட்டுமானம் 1971இல் தொடங்கப்பட்டு, ஆறு ஆண்டுகளாகக் கட்டப்பட்டு 1977ஆம் ஆண்டில் நிறைவுற்று பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.
பரிமாணங்கள் மற்றும் திறன்
தொகு- குறைந்த அடித்தளத்திற்கு மேலே உயரம் - 34 மீ
- அணையின் நீளம் - 899 மீ
- அணையின் தொகுதி உள்ளடக்கம் - 10 mcube
- நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு - 10 mcube
- நீர்த்தேக்கத்தின் பயனுள்ள திறன் - 10 mcube
- மதிப்பிடப்பட்ட செலவு 27.35 மில்லியன் ரூபாய்
- திட்ட ஒருங்கிணைப்பு சாத்தியம் - 1161 ஹெக்டேர்
- பயிரிடக்கூடிய கட்டளை பகுதி - 1161 ஹெக்டேர் [2] [3]
பராமரிப்பு
தொகுகருப்பநதி அணை தமிழ்நாடு பொதுப்பணித் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.[4]
போக்குவரத்து
தொகுசாலை வழியாக: இந்த அணை கடையநல்லூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 82 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
தொடருந்து மூலம்: அருகிலுள்ள தொடருந்து நிலையம் கடையநல்லூரில் அமைந்துள்ளது. இது மதுரை மற்றும் சென்னையுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
விமானம் மூலம்: அணையின் அருகே அமைந்துள்ள வானூர்தி நிலையம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது. இது அணையிலிருந்து 120 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கும் பிற பகுதிகளுக்கும் சர்வதேச சேவை கிடைக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.wrd.tn.gov.in/Reservoir_details.pdf
- ↑ http://tirunelveli.nic.in/features_dams.html
- ↑ https://books.google.co.in/books?id=wyCoMKZmRBoC&lpg=PA373&ots=_HKzQqWzSs&dq=Karuppanadhi&pg=PA373#v=onepage&q=Karuppanadhi&f=false
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-01-26. பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.