கருப்பாயி அம்மன்
நாட்டார் தெய்வம்
கருப்பாயி அம்மன் என்பவர் நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார்.
வரலாறு
தொகுபுதுக்கோட்டைக்கு அருகேயுள்ள குடுமியான் மலையெனும் கிராமத்தில் இரு வேறு சாதியைச் சேர்ந்த பாப்பாதி, கருப்பாயி என்ற தோழிகள் வாழ்ந்து வந்தார்கள். மழையின்றி போனதால், கிராமத்தினை விட்டுச் செல்ல கருப்பாயின் சாதியினர் முடிவெடுத்தார்கள். அவர்கள் இரவில் ஓரிடத்தில் தங்கும்பொழுது கருப்பாயி, பாப்பாத்தியின் நினைவாகவே இருந்தாள். எனவே பாப்பாத்தியைக் காண யாருக்கும் தெரியாமல் மீண்டும் குடுமியான் மலைக்கே பயணித்தார்.
கருப்பாயின் பிரிவை தாங்க இயலாத பாப்பாத்தியும் அவளைத் தேடி பயணித்தார். இருவரும் நடுவழியில் சந்தித்துக் கொண்டர். இரு சாதியினரும் தங்களை ஒன்றாக வாழ அனுமதிக்க மாட்டார்கள் என எண்ணி, ஒன்றாக தற்கொலை செய்துகொண்டார்கள்.
கோயில்கள்
தொகு- மேலச்சிறுபோது கருப்பாயி அம்மன் மற்றும் கருப்பையா கோயில் [1]
இவற்றையும் காண்க
தொகுஆதாரங்களும் மேற்கோள்களும்
தொகு- ↑ http://www.dinamani.com/edition_madurai/article626349.ece?service=print மேலச்சிறுபோது கருப்பாயி கோயிலில் ஜூலை 10 குடமுழுக்கு சூலை 6, 2011 தினகரன்