கருப்புக் கொடி
கருப்புக் கொடி (The black flag) மற்றும் பொதுவான கருப்பு நிறமும் அரசின்மையடன் 1880களிலிருந்து தொடர்புப் படுத்தப்பட்டு வருகிறது. அரச எதிர்ப்பாளர்களின் பெயர்களிலும் சின்னங்களிலும் "கருப்பு" என்ற சொல் இடம் பெறுகின்றது. அவரவர் மொழிகளில் "கருப்புக் கொடி" என்றுப் பெயரிடப்பட்ட பல இதழ்கள் உலகின் பல பகுதிகளில் வெளியாகின்றன. அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் எதிர்க்கும் வண்ணம் அரசுத் தலைவர்களுக்கு கருப்புக் கொடி காட்டுவதும் ஒரு போராட்ட வகையாக உருவெடுத்துள்ளது.
பல்வேறு நாடுகளின் அல்லது அமைப்புகளின் வண்ணமிகு கொடிகளுக்கு எதிராக சீரான கருமை வண்ணத்துடன் இக்கொடிகள் அமைந்து எந்த அரசு அல்லது அமைப்பின் ஆளுகைக்கும் உட்படாதவர்கள் எனக் குறிப்பிடுகிறது. மேலும் அமைதியையும் அடிபணிதலையும் குறிக்கும் வெண்மை நிற "வெள்ளைக் கொடி"க்கு நேரெதிராக கருப்புக்கொடி அடங்காமையையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறது.
வரலாறு
தொகுபோராட்ட அடையாளமாக
தொகுமுதன்முதலாக 1831ஆம் ஆண்டு பிரான்சின் லியோனைச் சேர்ந்த பட்டுத் தொழிலாளிகள் கனூட் புரட்சியின்போது தங்கள் எதிர்ப்பின் அடையாளமாக கருப்புக் கொடிகளைக் காட்டினர். 1840களில் பஞ்சக் கலவரங்களின்போதும் நகர்ப்புற ஏழைகளின் கோபத்தை வெளிப்படுத்த கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டன.
1880கள் முதல் கருப்புக்கொடி அரசின்மையுடன் தொடர்புப்படுத்தபடுகிறது. 1882ஆம் ஆண்டு வரை பதிப்பிக்கப்பட்ட "லெ டிராபு நாய்ர்" (கருப்புக் கொடி) என்ற இதழே முதன்முதலில் அரசின்மையைக் குறிக்க கறுப்பினைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. சூலை 1881ஆம் ஆண்டு இலண்டனில் நிறுவப்பட்ட அமைப்பொன்று பிளாக் இன்டர்நேசனல் என அழைத்துக்கொண்டது. மார்ச் 9, 1883இல் பாரிசில் லூயி மிசேல் வேலையில்லாதோர் போராட்டத்தின்போது கருப்புக் கொடிகளை பறுக்க விட்டார். அப்போது திறந்தவெளி கூட்டமொன்றின்போது காவல்துறையினர் உள்நுழைந்து கலைக்க 500 போராட்டக்காரர்களுடன் மிசேல் கருப்புக்கொடிகளுடன் "ரொட்டி,வேலை அல்லது ஈயம்" என்ற முழக்கத்துடன் செயின்ட்-ஜெர்மைன் பொலிவர்ட் நோக்கிச் சென்றனர். அங்கிருந்த மூன்று அடுமனைகளை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதற்காக மிசேல் ஆறு ஆண்டுகள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் பொதுமக்களின் ஆதரவால் அவருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.[1] அன்றுமுதல் மிசேலின் சொற்களில் "கருப்புக் கொடி போராட்டங்களின் கொடியாகவும் பசித்திருப்போரின் கொடியாகவும்" அமைந்தது[2]
பிற கருப்புக் கொடிகள்
தொகு- தமது மதத்தை அடையாளப்படுத்த முகம்மது நபி "கருப்புப் பதாகை" (راية السوداء rāyat al-sawdā' , அல்லது راية العقاب rāyat al-`uqāb) எனப் பொருள்படும் கருப்புக்கொடியை பயன்படுத்தினார்.[3] அப்பாசித் கலீபகத்தின் கொடியாகவும் விளங்கியது.மேலும் கடவுளின் தூதராக ஏமாற்றவிருக்கும் தஜ்ஜலை எதிர்த்துப் போராடும் படைகளின் கொடியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஐரோப்பாவில் 16வது நூற்றாண்டில் "பெர்ன்கிரீஜ்" போது போராடும் விவசாயிகளால் கருப்புக்கொடி பயன்படுத்தப்பட்டது.
- அமெரிக்க உள்நாட்டுப் போர்|அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது சில அமெரிக்கக் கூட்டுப்படைகள் தாங்கள் மன்னிப்பு வழங்கமாட்டோம் மற்றும் மன்னிப்புக் கோரி அடிபணிய மாட்டோம் (No quarter) என்பதைக் குறிக்குமாறு கருப்புக் கொடிகளை பறக்க விட்டனர்.
- ஆப்கானித்தான் 1880–1901 காலகட்டத்தில் முழுமையான கருப்புக்கொடியை தனது நாட்டுக்கொடியாகக் கொண்டிருந்தது.
- இரண்டாம் உலகப் போரின் போது நாசி செர்மனி அடிபணிந்தபோது செருமானிய யூ-படகுகள் நேச நாடுகளின் துறைமுகங்களில் கருப்புக்கொடி பறக்க விட்டவாறு அடிபணிய ஆணையிடப்பட்டன. [1] பரணிடப்பட்டது 2011-05-20 at the வந்தவழி இயந்திரம்
கருப்புக் கொடி போராட்டம்
தொகுகருப்புக் கொடி போராட்டம் அல்லது கருப்புக் கொடி காட்டி போராட்டம் என்பது ஒரு அறவழிப் போராட்டமாகும். கருப்புவண்ண துணியை அணிந்தோ, கொடியாகவோ காட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். சில நேரங்களில் வீடுகளில் கருப்புக் கொடியை ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். அரசு, ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், ஆன்மீகத் தலைவர்கள் மட்டுமின்றி தனிநபர்களின் கொள்கைள், பேச்சுக்கள், கருத்துக்களுக்கு எதிராக இப்போராட்டம் நடத்தப்படுகிறது.
அறவழிப்போராட்டமாகினும் அறப்போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும் இப்போராட்டங்கள் நிகழ்வதுண்டு.[4]
தமிழகத்தில் நடந்த குறிப்பிடத்தக்க கருப்புக்கொடி போராட்டங்கள்
தொகு- தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கருப்புக் கொடி போராட்டங்களை நடத்தியுள்ளது.
- இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கருப்புக் கொடி போராட்டமும் முக்கிய இடம் பிடித்தன.
`
மேற்கோள்கள்
தொகு- ↑ George Woodcock, Anarchism, pp. 251-2
- ↑ The Red Virgin: Memoirs of Louise Michel, p. 168
- ↑ Islamic Flags at Flags of the World
- ↑ http://ottran.com/archives/10594