கரும்பாய்மம்
வானியல் மற்றும் அண்டவியலில், கரும்பாய்மம் (dark fluid) சார்ந்த கோட்பாடுகள் கரும்பொருள் (வானியல்), இரண்டையும்கருப்பு ஆற்றல் ஒரே சட்டகத்தில் விளக்க முயலும் கோட்பாடுகளாகும்.[1][2] கரும்பொருளும் கருப்பு ஆற்றலும் தனித்தனி இயற்பியல் நிகழ்வுகள் அல்ல என்றும் அவை தனித்தனி தோற்றங்களைக் கொண்டிருக்கவில்லை என்றும் , ஆனால் அவை வலுவாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்றும் ஒரே பாய்மத்தின் இரண்டு கூறுகளாகக் கருதலாம் என்றும் கோட்பாடு முன்மொழிகிறது. பால்வெளி மட்டத்தில் கரும்பாய்மம் கரும்பொருளைப் போல செயல்படுகிறது. மேலும் பேரளவுகளில் அதன் நடத்தை கருப்பாற்றலைப் போன்று விளங்குகிறது..
2018 ஆம் ஆண்டில் வானியற்பியலாளர் ஜாமி பார்னசு எதிர்மறை பொருண்மை கொண்ட ஒரு கரும்பாய்மம், கரும்பொருள், கருப்பாற்றல் இரண்டையும் விளக்க தேவையான பண்புகளைக் கொண்டிருக்கும் என்று முன்மொழிந்தார்.[3][4]
கண்ணோட்டம்
தொகுகரும்பாய்மம் ஒரு குறிப்பிட்ட வகையான பாய்மமாக கருதப்படுகிறது. இதன் ஈர்க்கும், விலக்கும் நடத்தைகள் கள ஆற்றல் அடர்த்தியைப் பொறுத்தது. இந்தக் கோட்பாட்டில், கரும்பாய்மம் பேரியான் அடர்த்தி செறிவாக இருக்கும் இடப் பகுதிகளில் கரும்பொருளைப் போல செயல்படுகிறது. ஏடல் என்னவென்றால் , கரும்பாய்மம் பொருளின் முன்னிலையில் இருக்கும்போது அது மெதுவாக குறைந்து அதைச் சுற்றி உறையும். பின்னர் அதைச் சுற்றி உறைவதற்கு அதிக கரும்பொருளை ஈர்க்கிறது , இதனால், அதற்கு அருகிலுள்ள ஈர்ப்பு விசை மிகுகிறது. இதன் விளைவு எப்போதும் இருக்கும். ஆனால் பால்வெளி போன்ற மிகப் பாரிய பொருண்மை முன்னிலையில் மட்டுமே இது கவனிக்கப்படுகிறது. இந்த விளக்கம் கரும்பொருளின் கோட்பாடுகளுக்கு ஒத்ததாகும் மேலும், கரும்பாய்மச் சமன்பாடுகளின் ஒரு சிறப்பு வழக்கு, கரும்பொருளை மீள்பெருக்கம் செய்வதாகவே அமைகிறது.
மறுபுறம் , பால்வெளிகளுக்கு இடையிலான வெற்றிடங்களைப் போல ஒப்பீட்டளவில் சிறிய பொருள் உள்ள இடங்களில் , இந்தக் கருதுகோள் கரும்பாய்மமாக ஓய்வெடுப்பதோடு எதிர்மறை அழுத்தத்தையும் பெறுதல் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கரும்பாய்மம் கருப்பு ஆற்றலைப் போன்ற விளைவுடன் ஒரு விலக்கும் விசையாக மாறுகிறது.
கரும்பாய்மம் விளைவில் கரும்பொருள், கருப்பாற்றலுக்கு அப்பாலும் செல்கிறது , ஏனெனில், இது பல்வேறு பொருள் அடர்த்தி நிகழ்வுகளின் கீழ் தொடர்ச்சியான ஈர்த்தல் விலக்கல் பண்புகளை கொண்டுள்ளது. உண்மையில் பல்வேறு பிற ஈர்ப்பு கோட்பாடுகளின் சிறப்பு நிகழ்வுகள் கரும்பொருளால் மீண்டும் உருவாக்கப்படுகின்றன, எ. கா. உப்புதல், கருப்பு ஆற்றல்(அளவன்புலம்), கே - சாறு, f(R) எனும் ஈர்ப்பு,) பொதுமைப்படுத்தப்பட்ட ஐன்சுட்டைன் ஈதர், f(K) எனும் ஐன்சுட்டைன் ஈதர் மாண்டு, டெவெசு, BSTV,போன்றவற்றைக் கருதலாம்.. கரும்பாய்மக் கோட்பாடு ஒரு குறிப்பிட்ட f (K+R) எனும் ஈர்ப்பு-ஈதர் படிமம் போன்ற புதிய படிமங்களையும் ஏற்கிறது. இது செம்பெயர்ச்சியையும் அடர்த்தியையும் சார்ந்த மாண்டு(MOND) பொருளுக்கு சுவையான திருத்தங்கள் செய்வதைக் குறிக்கிறது.
எளிய கற்பிதங்கள்
தொகுகரும்பாய்மம் இங்கு ஒரு நிலையான பாய்ம இயக்கவியல் படிமத்தைப் போல பகுப்பாய்வு செய்யப்படவில்லை , ஏனெனில் பாய்ம இயக்கவியலில் முழுமையான சமன்பாடுகள் தீர்க்க இன்னும் மிகவும்மாரியதாகவே உள்ளன. பொதுவான சாப்லிஜின் வளிமப் படிமம் போன்ற முறைப்படுத்தப்பட்ட பாய்ம இயக்க அணுகுமுறையே கரும்பாய்மத்தை படிமமாக்குவதற்கான ஒரு சிறந்த முறையாகும். ஆனால் தற்போது கணக்கீடுகள் சாத்தியமாக இருப்பதற்கு பல நோக்கீட்டுத் தரவு புள்ளிகள் தேவைப்படுகின்றன , மேலும் அண்டவியலாளர்களுக்கு போதுமான தரவு புள்ளிகள் கிடைக்கவில்லை. கருப்பாற்றல் கரும்பொருளுக்குமான பிற மாற்று அணுகுமுறைகளில் செய்யப்படுவதைப் போலவே , அளவிடக்கூடிய புலப் படிமங்கள்வழி கருதுகோளைப் படிமமாக்கி ஒரு எளிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.[2][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Arbey, Alexandre (2005). Is it possible to consider Dark Energy and Dark Matter as a same and unique Dark Fluid?. Bibcode: 2005astro.ph..6732A. https://archive.org/details/arxiv-astro-ph0506732.
- ↑ 2.0 2.1 Arbey, Alexandre (2006). "Dark Fluid: a complex scalar field to unify dark energy and dark matter". Physical Review D 74 (4): 043516. doi:10.1103/PhysRevD.74.043516. Bibcode: 2006PhRvD..74d3516A.Arbey, Alexandre (2006). "Dark Fluid: a complex scalar field to unify dark energy and dark matter". Physical Review D. 74 (4): 043516. arXiv:astro-ph/0601274. Bibcode:2006PhRvD..74d3516A. doi:10.1103/PhysRevD.74.043516. S2CID 119383364.
- ↑ Farnes, J. S. (2018). "A Unifying Theory of Dark Energy and Dark Matter: Negative Masses and Matter Creation within a Modified ΛCDM Framework". Astronomy and Astrophysics 620: A92. doi:10.1051/0004-6361/201832898. Bibcode: 2018A&A...620A..92F.
- ↑ Farnes, Jamie (December 17, 2018). "Bizarre 'Dark Fluid' with Negative Mass Could Dominate the Universe". Space.com.
- ↑ Arbey, A.; Mahmoudi, F. (2007). "One-loop quantum corrections to cosmological scalar field potentials". Physical Review D 75 (6): 063513. doi:10.1103/PhysRevD.75.063513. Bibcode: 2007PhRvD..75f3513A.
வெளி இணைப்புகள்
தொகு- Arbey, A. (2008). "Cosmological constraints on unifying Dark Fluid models". The Open Astronomy Journal 1 (1): 27–38. doi:10.2174/1874381100801010027. Bibcode: 2008OAJ.....1...27A.
- Guo, Zong-Kuan; Zhang, Yuan-Zhong (2007). "Cosmology with a Variable Chaplygin Gas". Physics Letters B 645 (4): 326–329. doi:10.1016/j.physletb.2006.12.063. Bibcode: 2007PhLB..645..326G.
- Halle, Anaelle; Zhao, HongSheng; Li, Baojiu (2008). "Perturbations in a non-uniform dark energy fluid: equations reveal effects of modified gravity and dark matter". The Astrophysical Journal Supplement Series 177: 1–13. doi:10.1086/587744.
- O’Dowd, Matt (January 9, 2019). "Are Dark Matter And Dark Energy The Same?". PBS Space Time – via YouTube.