பாய்ம விசையியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாய்மங்களின் இயக்கம் பற்றியும் அவற்றின் மீது செயல்படும் விசைகளைப் பற்றியும் அறிவது பாய்ம விசையியல் அல்லது பாய்ம இயந்திரவியல் (Fluid mechanics) எனப்படும். இத்துறை இருவகைப்படும்:
- பாய்ம நிலையியல் (Fluid statics ) -- நிலையாக உள்ள பாய்மத்தைப் பற்றி அறிவது.
- பாய்ம இயக்கவிசையியல் ( Fluid dynamics ) -- இயக்கத்தில் உள்ள பாய்மத்தைப் பற்றி அறிவது.
இது தொடர்ம விசையியலின் அங்கமாகும். பாய்ம விசையியல், குறிப்பாக பாய்ம இயக்கவிசையியல், பல தீர்வுகாணப்படாத அல்லது பகுதியாக தீர்வு காணப்பட்ட சிக்கல்களுடன் ஆராய்ச்சிக்குரியத் துறையாக விளங்குகிறது. இத்தீர்வுகள் மிகவும் சிக்கலான கணித முறைகளை கையாள்கின்றன. சிலநேரங்களில் இவற்றை கணினிகளைப் பயன்படுத்தி எண்சார் பகுப்பியல் முறையில் தீர்வு காண வேண்டியுள்ளது. தற்காலத்தில் கணிப்பியப் பாய்ம இயக்கவியல் (CFD), என்ற புதியத்துறை பாய்ம விசையியில் சிக்கல்களை தீர்க்கவே உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்ம விசையியலின் கூறுகள்தொகு
தொடர்ம விசையியல் தொடர்ந்துள்ள பொருட்களின் இயற்பியல் கல்வி |
திண்மநிலை விசையியல் ஓய்வுநிலை வரையறுக்கப்பட்ட தொடர்ந்துள்ள பொருட்களின் இயற்பியல் கல்வி |
மீட்சிப்பண்பு அளிக்கப்பட்ட தகவை நீக்கியபிறகு தங்கள் ஓய்வு வடிவத்திற்கு மீளும் பொருட்களை விவரிக்கிறது. | |
நெகிழ்வு தன்மை தேவையான அளவில் தகைவு அளிக்கப்பட்ட பின்னர் நிரந்தரமாக வடிவு மாறும் பொருட்களை விவரிக்கிறது. |
உருமாற்றவியல் திண்ம மற்றும் பாய்ம இருநிலைப் பண்புகளை காட்டும் பொருட்களின் கல்வி. | ||
பாய்ம விசையியல் விசையால் உருமாறுகின்ற தொடர்ந்துள்ள பொருட்களைக் குறித்த இயற்பியல் கல்வி |
நியூட்டானியப் பாய்வற்ற பாய்மங்கள் அளிக்கப்பட்ட நறுக்குத் தகைவிற்கேற்ற உருமாற்ற வீதங்களை கொண்டிராதவை | ||
நியூட்டானியப் பாய்மங்கள் அளிக்கப்பட்ட நறுக்குத் தகைவிற்கேற்ற உருமாற்ற வீதங்களை கொண்டுள்ளவை. |