உருமாற்றவியல்
உருமாற்றவியல் (Rheology) என்பது பொருட்களின் பாய்வோட்டத்தை குறித்த துறையாகும். இது குறிப்பாக பாய்மநிலையிலுள்ளவற்றைக் குறித்ததாயினும் மென்மையான திண்மங்களிலும் (அல்லது சில குறிப்பிட்ட நிலைகளில் அளிக்கப்படும் விசைக்கு எதிர்வினையாக மீள்பண்புக்கு மாற்றாக நெகிழ்வு தன்மையை வெளிப்படுத்தும் திண்மங்களில்) பயன்படுத்தப்படுகிறது.[1] சிக்கலான குறுங்கட்டமைப்பைக் கொண்டுள்ள சேறுகள், கசடுகள், மிதவைகள், பல்லுறுப்பிகள் மற்றும் கண்ணாடி இடைநிலைகள் (e.g., சிலிகேட்கள்),போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. பல உணவு மற்றும் உடல் நீர்மங்கள் (e.g., குருதி) போன்றவற்றிற்கும் இத்துறை ஆய்வுகள் பலன் தருகின்றன.
தொடர் விசையியலுடனான தொடர்பு
தொகுதொடர்ம விசையியல் தொடர்ந்துள்ள பொருட்களின் இயற்பியல் கல்வி |
திண்மநிலை விசையியல் ஓய்வுநிலை வரையறுக்கப்பட்ட தொடர்ந்துள்ள பொருட்களின் இயற்பியல் கல்வி |
மீட்சிப்பண்பு அளிக்கப்பட்ட தகவை நீக்கியபிறகு தங்கள் ஓய்வு வடிவத்திற்கு மீளும் பொருட்களை விவரிக்கிறது. | |
நெகிழ்வு தன்மை தேவையான அளவில் தகைவு அளிக்கப்பட்ட பின்னர் நிரந்தரமாக வடிவு மாறும் பொருட்களை விவரிக்கிறது. |
உருமாற்றவியல் திண்ம மற்றும் பாய்ம இருநிலைப் பண்புகளை காட்டும் பொருட்களின் கல்வி. | ||
பாய்ம விசையியல் விசையால் உருமாறுகின்ற தொடர்ந்துள்ள பொருட்களைக் குறித்த இயற்பியல் கல்வி |
நியூட்டானியப் பாய்வற்ற பாய்மங்கள் அளிக்கப்பட்ட நறுக்குத் தகைவிற்கேற்ற உருமாற்ற வீதங்களை கொண்டிராதவை | ||
நியூட்டானியப் பாய்மங்கள் அளிக்கப்பட்ட நறுக்குத் தகைவிற்கேற்ற உருமாற்ற வீதங்களை கொண்டுள்ளவை. |
மேற்சான்றுகள்
தொகு- ↑ W. R. Schowalter (1978) Mechanics of Non-Newtonian Fluids Pergamon பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-021778-8