சேறு
சேறு (Mud) அல்லது உழை என்பது நீரும் மண், உழைமண், வண்டல், களிமண் இவற்றின் சேர்மானமும் கலந்த நீர்ம அல்லது பகுதி நீர்மக் கலவையாகும். இது வழக்கமாக மழைக்குப் பிறகோ நீர்நிலைகளுக்கு அண்மையிலோ உருவாகிறது. பண்டைய மல்படிவுகள் புவியியல் காள அளவில் இறுகி படிவுப் பாறைகள் உருவாகின்றன. மாப்பாறையும் மட்பாறையும் நல்ல எடுத்துகாட்டுகளாகும். இவை உலுட்டைட்டுகள் எனப்படுகின்றன. அற்றுக் கழிமுகங்களில் புவியியல் கால அளவில் மட்படிவு அடுக்குகள் படப்பைப் படிவு அல்லது கடற்படுகைப் படிவு எனப்படுகிறது.
கட்டிடமும் கட்டுமானமும்
தொகுஒட்டுபொருட்கள்
தொகுகட்டுமானத் தொழில்துறையில், சேறு என்பது பகுதி நீர்மப் பொருளாகும். இதை பூசவோ அடைக்கவோ ஒட்டவோ பயன்படுத்தலாம். இந்தச் சேறு அல்லது சாந்து அதன் உட்கூறுகளைப் பொறுத்து சாந்து, பூச்சு, சுண்ன, பைஞ்சுதைச் சாந்து, கற்காரை, செங்கல் சுண்னச் சாந்து என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
கட்டுபொருட்கள்
தொகுகற்கள், சல்லி, வைக்கோல், சுண்ணாம்பு, தார் ஆகியவற்றைத் தனியாகவோ சிலவற்றைக் கலந்தோ உருவாக்கும் நிலத்தடி மண்ணும் நீரும் கலந்த கலவைக்கு இணைபெயர்களாக, சேறு, கரிம மண், சல்லிமண், களிமண், பச்சைச் செங்கல் ஆகிய பெயர்களும் இன்னும் பலவும் அது செய்யப்படும் நுட்பத்துக்கு ஏற்ப வழங்குகின்றன. சேறு பலவகைகளில் சுவர் கட்டவும் தரை வேயவும் கூரை அமைக்கவும் பயன்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக உலகெங்கும் களிமண் கற்களைப் பயன்படுத்தி வீடுகட்டி மட்பூச்சால் பூசி மெழுகினர். சேற்றில் மூங்கில் பிரம்பு கூட வைக்கோல் போல உள்ளீ,டாகப் பயன்படுத்துவதுண்டு.
மட்செங்கல்
தொகுசேற்றைக் கொண்டு மட்செங்கல்லை அச்சுகளில் நிரப்பித் திறந்தவெளிக் காற்றில் உலர்த்திப் பெறலாம். இது பச்சைச் செங்கல் எனவும் சுட்ட செங்கல்லில் இருந்து பிரித்துகாட்ட வழங்கும்.[2] வைக்கோல் இக்கற்களில் பிணைபொருளாகப் பயன்படுகிறது. வைக்கோல் கல் முழுவதும் விசையினைப் பரவலாக்கி உடையாமல் பார்த்துக்கொள்ளும்.[3]இந்தக் கட்டிடங்களை நிலத்தடி நீரில் இருந்து காக்க, இவற்றை செங்கல் பாவிய தரையிலோ பாறைகள் மீதோ கற்பாவிய படுகையிலோ கட்டுவர். மழைக்காலங்களில் காற்று வீசும்போது கட்டிட்த்தை ஓதம் படாமல் காக்க இட்+ஹன் கூரைகள் ஆழமான தொங்கலோடு கட்டப்படும். மிகவும் உலர்வான காலநிலைகளில் நல்ல வடிகால் அமைப்புள்ள சமதளக் கூரைகலையும் நன்கு பிசைந்துப் பதப்படுத்திய மட்சேற்றைப் பூசிக் கட்டலாம். நன்கு பிசைந்த மண் ஈரம்பட்டால் விரிந்து நீர்புகுதலைத் தடுக்கிறது[4] பச்சை மட்கல் பியூபிளோ எனும்அமெரிக்கத் தாயக மக்களால் வீடுகட்டவும் பிற கட்டவைகளுக்கும் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சில நாடுகளில் மட்கல்லால் கட்டிய வீடுகள் உள்ள நகரங்கள் உள்ளன.
சுட்ட செங்கல்
தொகுசேறு களிமண் அல்லது மணல் கலந்த களிமண் என்பதால் இதை வெங்களிப் பொருட்களைச் செய்யப் பயன்படுத்தலாம். இதை அச்சில் ஊற்றி உலரச் செய்து உலர்கல்லைச் சூளைகளிலிட்டு சுட்டுச் செங்கல் செய்யலாம். சுட்ட செங்கல் நீடி++த்து உழைக்கும். ஆனால், இதற்குக் கூடுதல் ஆற்றல் தேவையாகிறது.
நிலைப்படுத்திய சேறு
தொகுஒட்டுபொருள் சேர்த்த சேறு நிலைப்படுத்திய சேறாகும். ஒட்டுபொருளாக பைஞ்சு+தையோ, தாரோ அமையலாம். எடுத்துகாட்டக மட்காரை, மட்பைஞ்சுதை, நிலக்காரை ஆகியவற்றைக் கூறலாம்.
பானைவனைவியல்
தொகுபானைகள் களிமண்ணைச் சக்கர அச்சில் நிலைக்குத்தாக உருட்டி வைத்து வேண்டிய வடிவத்துக்கு வனையப்ப்+அடுகின்றன. பிறகு அவற்றைச் சூளைகலில் வைத்து ய்யர் வேப்பநிலைகளில் சூட்டு எடுக்கப்படுகின்றன. இதனால் ஈரம் முற்றிலும் காய்ந்து வற்ருவதோடு களிமண் சூட்டல் இறுகி கெட்டிப்படுகிறது. வலிமையும் கூடுகிறது. வடிவமும் நேர்த்தியுறுகிறது. இந்தக் களிம+ண் பனைகளைச் சுடுவதற்கு முன்னும் பின்பும் அழகூட்டும் வடிவமைப்புகளைச் செய்யலாம்; மெருகூட்டலாம். இவாறு வடிவம் ஊட்ட களிமண்ணை நன்றாகப் பதப்படுத்தி உள்ளே உள்ள காற்ரை முழுவ்துமாக அகற்ரவேண்டும். இந்தச் செயல்முறை காற்றுநீக்க்ம் +எனப்படும். இதை வெற்றிட எந்திர்ங்களாலும் ஆப்பிட்டு மாந்த உழைப்பாலும் நிறைவேற்றலாம். ஆப்பிடுதல் என்பது ஈரப்பதம் சீரகவும் உத்வுகிறது. களிமண் குழிந்து காற்றுநீக்கி ஆப்பிட்டதும் பல நுட்பங்களால் வடிவமூட்டலாம். வடிவமூட்டியதும் பனைகளை உலர்த்திச் சூளைகளில் இட்டுச் சுடலாம்.
வாழிடம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Centre, UNESCO World Heritage. "Bam and its Cultural Landscape". whc.unesco.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-30.
- ↑ admin_666 (29 July 2013). "Mud brick". yourhome.gov.au.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Smith, Michael G. The Cobber’s Companion: How to Build Your Own Earthen Home. Cottage Grove: Cob Cottage, 1998. Print.
- ↑ "Preservation Brief 5: Preservation of Historic Adobe Buildings". nps.gov.
மேலும் படிக்க
தொகு- P.J. Depetris; P.E. Potter; J.B. Maynard (2005). Mud and mudstones introduction and overview (1 ed.). Berlin [u.a.]: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-27082-5.
- Wood, C.E. (2006). Mud a military history (1st ed.). Washington, D.C.: Potomac Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781612343310.
- C.L.V. Monty; D.W.J. Bosence; P.H. Bridger; B.R. Pratt, eds. (1995). Carbonate Mud-Mounds Their Origin and Evolution. Chichester: John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4443-0412-7.
- Okonkwo, Festus (2009). Introductory Mud Engineering Handbook. Booksurge Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781439227275.
- Rael, Ronald (2009). Earth architecture (1st ed.). New York, N.Y.: Princeton Architectural Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56898-767-6.