கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார்

சங்ககாலத்துப் புலவர்களில் ஒருவர்

கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார் சங்ககாலத்துப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு பாடல் எண் 219.

பாடல்தொகு

'உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள
புலவுதி மாதோ நீயே
பலரால் அத்தை நின் குறி இருந்தோரே'

பாடல் தரும் செய்திதொகு

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தான்.

(அவனது மகன்கள் மூன்று பேரில் நலங்கிள்ளியும் அவன் தம்பி மாவளத்தானும் ஒரு பக்கமும், நெடுங்கிள்ளி மற்றொரு பக்கமுமாக நின்று ஆட்சிக்காகத் தான் உயிரோடு இருக்கும்போதே போராடியதைக் கோப்பெருஞ்சோழனால் பொறுக்க முடியவில்லை. அதனால் வடக்கிருந்து தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள விரும்பினான்)

அவனது நன்முடிவைப் பின்பற்றி நாட்டுமக்களில் பலர் அவருடன் தாமும் வடக்கிருந்து உயிர் துறக்கத் தீர்மானித்து அவன் பக்கத்தில் அமர்ந்து வடக்கிருக்கலாயினர்.

இதனை நேரில் பார்த்த புலவர் கருவூர்ப் பெருஞ்சதுக்ககத்துப் பூதநாதனார் உடன் வடக்கிருப்போரைத் தடுக்கும் பொருட்டாவது நீ மாறுபட்டு நின்று நீ வடக்கிருப்பதைக் கைவிடலாகாதா? என்று கேட்டுக்கொள்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.