கரு மருது
தாவர இனம்
கரு மருது | |
---|---|
மருத மரம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | Magnoliopsida
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | T. elliptica
|
இருசொற் பெயரீடு | |
Terminalia elliptica Willd. |
கரு மருது என்பது ஒரு மர வகையாகும். இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம் காணப்படுகிறது. இம்மரம் 30 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலைகளைப் பட்டுப்பூச்சி உணவாக உண்கிறது.[1]
சங்க காலத்தில் மருதம்
தொகுசிறப்பு கருதி மருத மரத்தைத் ‘திருமருது’ எனப் போற்றினர்.[2]
மருத மரம் ஆற்றோரங்களிலும் [3] வயலோரங்களிலும் [4] செழித்து வளரும்.
மருத மரத்தில் வெண்மருது [5] கருமருது, பில்லமருது எனப் பல வகைகள் உண்டு. பில்லமருது [6] வீட்டுக்கு நிலை, சன்னல் சட்டங்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.
- மரத்தின் உட்புறம் சிவப்பு.[7]
- உதிர்ந்த பூவும் சிவப்பு.[8]
- மருத மரம் செழுமையான நிழலைத் தரும்.[9][10][11]
- உழவர்க்கு நிழல்
- நெல்லை விடியலில் போரடித்த உழவர் நண்பகலில் மருதமர நிழலில் எருதுகளுடன் இளைப்பாறுவார்களாம்.[12]
- நாகதெய்வக் கோயில்
- மருத மரத்தடியில் நாகதெய்வ வழிபாடு நிகழ்ந்தது.[13]
- மதுரை
- மதுரை என்னும் ஊர்ப்பெயர் மருதத்துறை > மதுரை எனக் கொள்ளும் அளவுக்கு வையை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி.[14][15][16]
- காவிரியாற்று ஆர்க்காடு
- அரசன் சேந்தனின் தந்தை அழிசி. அவனது ஊர் ஆர்க்காட்டின் காவிரித் துறையில் மருத மரங்கள் மிகுதி.[17]
- மருத வேலி
- புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத்தின் கடற்கரைப் பகுதிக்கு ‘நெய்லங்கானல்’ என்னும் பெயர் உண்டு. அங்கிருந்த தாமரைப் பொய்கைக்கு கைதைமரம் வேலியாக அமைந்திருந்ததாம். இது மதுரையிலிருந்த தாமரைக் குளத்துக்கு மருதமரம் வேலியாக அமைந்திருந்தது போல அமைந்திருந்த்தாம்.[18]
- மருத மாலை
- திருபரங்குன்றத்தைத் தொழ வந்த சூரர மகளிர் தலையில் சண்பகப் பூவையும், மார்பில் மருத மர மலர்களை இலைகளோடு சேர்த்துக் கட்டிய மாலையையும் அணிந்திருந்தார்களாம்.[19]
வெளி இணைப்புகள்
தொகுபி.எல்.சாமி முதலான அறிஞர்கள் காட்டும் மருத மரம் - படம்.
இவற்றையும் காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ Germplasm Resources Information Network: Terminalia elliptica பரணிடப்பட்டது 2012-06-09 at the வந்தவழி இயந்திரம்
- ↑ அகநானூறு 36
- ↑ ஐங்குறுநூறு 33
- ↑ கழனி மருது - ஐங்குறுநூறு 70
- ↑ நெடுவெண் மருது - அகநானூறு 226,
- ↑ (இடையிடையே செந்நிறக் கோடுகளை உடைய பில்லநிற மருது)
- ↑ முடக்காஞ்சி, செம்மருது - பொருநராற்றுப்படை 189
- ↑ செவ்வி மருதின் செம்மல் - குறுந்தொகை 50
- ↑ சேண்சினை இருள்புனை மருதின் இன்னிழல் - நற்றிணை 330
- ↑ மருது இமிழ்ந்து (தழைத்து) ஓங்கிய நளியிரும் பரப்பு - பதிற்றுப்பத்து 23-18
- ↑ ஒலி தெங்கின் இமிழ் மருதின் - பதிற்றுப்பத்து 13-7
- ↑ அகநானூறு 37
- ↑ பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் பலிபெறு வியன்களம் - பெரும்பாணாற்றுப்படை 232
- ↑ திருமருத முன்றுறை - பரிபாடல் 7-83
- ↑ வையைத் திருமருத முன்றுறை - பரிபாடல் 22-45
- ↑ வையை மருதோங்கு முன்றுறை – சிலப்பதிகாரம் 14-72
- ↑ குறுந்தொகை 258
- ↑ மருதவேலி - சிலப்பதிகாரம் 6-140
- ↑ கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள் இணர் அட்டிக் கிளைக் கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் - திருமுருகாற்றுப்படை 28