கரூர் அரசு மருத்துவக் கல்லூரி

தமிழ்நாட்டில், கரூரில் அமைந்துள்ள மருத்துக் கல்லூரி

கரூர் மருத்துவக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கரூரில் அமைந்துள்ள ஒரு மருத்துவக் கல்லூரி ஆகும். இது சென்னையில் அமைந்துள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறது.

வரலாறு தொகு

2014 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதா சட்டப்பேரவையில் கரூர், காந்தி கிராமத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதன் அடிப்படையில் 17.45 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டடு 2018 ஆம் ஆண்டு கல்லூரி கட்டும் பணி துவக்கப்பட்டது. 150 மாணவர்கள் பயிலக்கூடிய வகையிலும், 820 படுக்கைகள் கொண்ட மருத்தவமனையும் கூடியதாக கல்லூரி உருவாக்கப்பட்டது. இதையடுத்து கரூர் மருத்துவக் கல்லூரியானது 2019ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.[1]

இக்கல்லூரி வளாகத்தில் இயல்கூடம், நிர்வாகக் கட்டிடம், மாணவ, மாணவியர் விடுதி, கல்லூரி முதல்வர் குடியிருப்பு, மருத்துவ ஆசிரியர் குடியிருப்பு, செவிலியர் தங்கும் விடுதி, உறைவிட மற்றும் உதவி உறைவிட மருத்துவ அலுவலர், மருத்துவ மண்காணிப்பாளர் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் குடியிருப்புகள் போன்றவை கட்டப்பட்டுள்ளன.[2]

இம்மருத்துவ கல்லூரியானது தமிழகத்தின் 23வது மருத்துவ கல்லூரி ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "கரூர் அரசு மருத்துவக் கல்லூரி திறந்துவைப்பு". செய்தி. புதிய தலைமுறை. 2019 சூல் 31. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2019. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "150 இடங்களுடன் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கரூர் அரசு மருத்துவ கல்லூரி திறப்பு முதலாமாண்டு வகுப்புகளை தொடங்கி வைத்தார் முதல்வர்". இந்து தமிழ். ஆகத்து 1 2019.