கரூர் மாவட்ட மைய நூலகம்

கரூர் மாவட்ட மைய நூலகம் (District Central Library) தமிழ்நாட்டில் உள்ள கரூர் நகரில் அமைந்துள்ளது. கரூர் நகர பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வசதிக்காக இங்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.[1]

கரூர் மாவட்ட மைய நூலகம்

தோற்றம்

தொகு

திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் கிளை நூலகமாக 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருபத்தியேழாம் நாள் தொடங்கப்பட்டது. கரூர் மாவட்ட மைய நூலகமாக 26.09.1997 முதல் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை - பொது நூலக இயக்ககத்தின் கீழ் இயங்கும் 32 மாவட்ட மைய நூலகங்களில் இதுவும் ஒன்றாகும்.

 
நூலகம் செல்வோம் நாம்-மாணவர்கள்
 
சிறைவாசிகளுக்கான நற்சிந்தனை விழா
 
மாதிரி நேர்முகத் தேர்வு

செயல்படும் பிரிவுகள்

தொகு

புத்தகங்கள்

தொகு
  • மொத்த நூல்கள் எண்ணிக்கை – 114562
  • போட்டித்தேர்வு பாட நூல்கள் எண்ணிக்கை – 31500
  • தினசரி நூல்கள் மொத்த பயன்பாடு சராசரி – 496
  • ஆண்டு நூல்கள் மொத்த பயன்பாடு சராசரி - 178581

சுவாரசியமான மற்றும் முக்கிய நிகழ்வுகள்

தொகு

குழந்தைகள், மாணவர்கள், பொதுமக்கள் என எல்லா தரப்பையும் நூலகம் வந்து புத்தகங்கள் வாசிக்க வைக்க, கரூர் மாவட்ட மைய நூலக நிர்வாகம், பல நடைமுறைகளை செயல்படுத்தி எண்ணற்றவர்களை நூலகத்திற்குள் வரவழைத்துக் கொண்டிருக்கிறது.

நூலகக் கட்டடம்

தொகு

கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் மூன்று தளங்களுடன் செயல்பட்டுக் கொண்டுள்ளது. மின் தூக்கி[4], சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தூய்மையான கழிவறை, இணையதள வசதி போன்றவை செய்யப்பட்ட்டுள்ளன.

நூலக வாசகர் வட்டம்

தொகு

வாசகர்களால் நடத்தப்படும் நூலக வாசகர் வட்டம், மாவட்ட மைய நூலகத்துடன் இணைந்து பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொள்கிறது. சிந்தனை முற்றம் என்கின்ற நிகழ்வு ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமைகளில் வாசகர் வட்டத்தால் நடத்தப்படுகின்ற நிகழ்வாகும். வாசகர் வட்டம் தனக்கென்று தனியே இணைய தளத்தையும் கொண்டுள்ளது. அனைத்து நிகழ்வுகளும் அவ்வப்பொழுது பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நூலகம் ஒரு பறவைப் பார்வை

தொகு
  • நூலகத்தின் பெயர் – மாவட்ட மைய நூலகம்
  • நூலகரின் பெயர் - செ.செ.சிவக்குமார்
  • நூலக முகவரி – 2,பிரம்மதீர்த்தம் சாலை, கரூர் – 639001.
  • கிளை நூலகமாக ஆரம்பித்த நாள் – 27.04.1955
  • மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்வு பெற்ற நாள் – 26.09.1997
  • மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை – 20925
  • மொத்த புரவலர்கள் எண்ணிக்கை – 122 (புரவலர்கள் – 60, பெரும் புரவலர்கள் – 52, கொடையாளர்கள் – 10)
  • மொத்த நூல்கள் எண்ணிக்கை – 114562
  • போட்டித்தேர்வு பாட நூல்கள் எண்ணிக்கை – 31500
  • தினசரி வாசகர்களின் வருகை சராசரி – 486
  • ஆண்டு வாசகர் வருகை சராசரி – 92875
  • தினசரி நூல்கள் மொத்த பயன்பாடு சராசரி – 496
  • ஆண்டு நூல்கள் மொத்த பயன்பாடு சராசரி - 178581

மேற்கோள்கள்

தொகு
  1. "துரை.வேம்பையன். "லிப்ட் வசதி..குழந்தைகள்,கண் தெரியாதவர்களுக்கு தனிப்பிரிவுகள்..அசத்தும் கரூர் அரசு மாவட்ட மைய நூலகம்!". https://www.vikatan.com/.". ஆனந்த விகடன். https://www.vikatan.com/news/tamilnadu/karur-collector-give-2-air-conditioner-machine-for-library. பார்த்த நாள்: 25 September 2022. 
  2. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/lsquoSindhanai-Muttramrsquo-literary-forum-launched/article16559291.ece
  3. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/jail-inmates-in-karur-unleash-a-riot-of-colour/article5370056.ece
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-09-29. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரூர்_மாவட்ட_மைய_நூலகம்&oldid=3855980" இலிருந்து மீள்விக்கப்பட்டது