முற்றம்
வீடு அல்லது கட்டிடத்தின் மையத்தில் அமைந்துள்ள திறந்த வானவெளி
முற்றம் (Courtyard) என்பது தென் இந்தியாவின் பாரம்பரிய வீடுகளின் மையத்தில் உள்ள ஒரு சதுர வடிவ திறந்த அமைப்பு ஆகும். இது வீட்டின் தலை வாசலுக்கு நேர் எதிரே இருக்கும். முற்றத்தின் முகப்பு, வீட்டின் எல்லா அறைகளையும் இணைப்பதாகவும் இருக்கும். இந்த முற்றம் விட்டில் இயற்கை வெளிச்சம் புகவும் காற்றோட்டமாக இருக்கவும் உதவும் வகையில் அமைந்திருக்கும்.[1] சிலர் இந்த முற்றத்தில் துளசி மாடத்தை வைத்திருப்பர். முற்றம் தானியங்களை உலர்த்தவும் துணிகளை காயப்போடவும் உதவும். இந்த முற்றங்கள செட்டிநாடு வீடு, குத்தூ வீடு, நாலுகெட்டு வீடு, நாற்சதுரமனை, நாற்சார் வீடு, மந்துவா வீடுகள் போன்ற தென் இந்திய வீடுகளில் அமைக்கப்பட்டன.
மேற்கோள்கள் தொகு
- ↑ "முற்றம் எப்படி இருந்தால் அழகு?". கட்டுரை (தினகரன்). http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=1485&Cat=501. பார்த்த நாள்: 20 பெப்ரவரி 2017.