மந்துவா வீடுகள்

ஆந்திரப் பிரதேசதில் உள்ள பாரம்பரிய வீடுகள்

மந்துவா வீடுகள் (Manduva Logili) என்பவை இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாரம்பரிய வீட்டுவகையாகும்.[1] இவை பல அறைகளுடன் பெரியதாக பெரிய கூட்டுக் குடும்பத்துக்கு ஏற்றதாக, 1950 மற்றும் 1960 காலகட்டத்திற்கு முன் கட்டப்பட்ட வீடுகள் ஆகும். இவ்வகை வீடுகள் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி , மேற்கு கோதாவரி , குண்டூர் , நெல்லூர் , விசயநகர மாவட்டம் கடப்பா மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் கிராமப்புறங்களில் இன்றும் காணப்படுகின்றன.

கட்டுமானம்

தொகு

பல அறைகள் கொண்ட மிகப் பெரிய வீடுகளாக மந்துவா வீடுகள் இருந்துள்ளன. முன்புறம் வசதியான வராண்டா தேக்கு மரத் தூண்களுடன் கம்பீரத் தோற்றம் கொண்டவை. வீடுகளின் சுவர்கள் சாந்துமண் கொண்டோ அல்லது சுட்ட செங்கற்கள் கொண்டோ கட்டப்பட்டுள்ளன. வீட்டின் கூரைகள் அமைக்க ரோஸ்வுட், தேக்கு மரம் ஆகியவற்றை உத்திரங்களாக பயன்படுத்தி . அதன்மேல் சிவப்பு ஓடுகள் வேயப்பட்டுள்ளன. வராண்டாவைத் தாண்டியதும் வீட்டின் உள்ளே நடுவில் விசாலமான வரவேற்பறை (முற்றம்) அதை ஒட்டி நான்கு திசைகளிலும் பலவகையான பல விசாலமான அறைகள் இருக்கும். வீட்டின் கூரையைப் பல இராட்சத மரத் தூண்கள் தாங்கி நிற்கும். மையத்தில் உள்ள வரவேற்பறையில் காற்று, ஒளி ஆகியவை வர வசதியாக கூரை வேயப்படாமல் இருக்கும். மழைக்காலத்தில் முற்றத்தில் நீர் விழும் இடத்தில் தொட்டி அமைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து நீர் வெளியேற வடிகால் வசதி செய்யப்பட்டிருக்கும். சில மந்துவா வீடுகளில் திறந்த முற்றம் இருக்காது. அதற்கு பதில் மையத்தில் வழியும் நீரை வெளியேற்ற குழாய் அமைக்கப்பட்டிருக்கும்.

பராமரிப்பு

தொகு

மந்துவா வீடுகள் அடிக்கடி கறையான்களால் பாதிக்கப்படுகின்றன இதனால் இந்த வீடுகளைப் பராமரிக்க நிறைய செலவு செய்ய வேண்டியதாகிறது. மேலும் காடுகள் தொடர்பான சட்டங்களில் உள்ள இறுக்கத்தினால், மந்துவா வீடுகளின் சிறப்பு அம்சமான பிரம்மாண்டமான மரத்தூண்கள் கிடைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக உள்ளது.[2]

தற்போதைய நிலை

தொகு

இன்றைய காலகட்டத்தில் நகரமயமாதல் கூட்டுக் குடும்ப சிதைவு ஆகியவற்றால் மாந்துவா வீடுகள் உருவாக்கப்படுவது குறைந்து வருகின்றன. ஆனால் இம்மாதிரியான வீடுகளின் மாதிரியாக கொண்ட வீடுகள் உருவாக்கப்படுகின்றன.

குறிப்புகள்

தொகு
  1. http://www.google.co.in/imgres?imgurl=http://static.panoramio.com/photos/original/32468588.jpg&imgrefurl=http://www.panoramio.com/photo/32468588&usg=__fukUImJD6MElwKhZO35PgMSgRtw=&h=3000&w=4000&sz=4170&hl=en&start=1&zoom=1&tbnid=3_Plo6YAI2q-OM:&tbnh=113&tbnw=150&ei=QXAJTqDVL8birAfClvjFDw&prev=/search%3Fq%3Dmanduva%2Blogili%26um%3D1%26hl%3Den%26sa%3DN%26biw%3D936%26bih%3D522%26tbm%3Disch&um=1&itbs=1
  2. "மரபு இல்லங்கள்: பழமையின் கம்பீரம் - மந்துவா வீடுகள்". தி இந்து (தமிழ்). 30 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்துவா_வீடுகள்&oldid=3530579" இலிருந்து மீள்விக்கப்பட்டது