கரேன் பிளிக்சன் அருங்காட்சியகம்

கரேன் பிளிக்சன் அருங்காட்சியகம் (Karen Blixen Museum-Kenya) கென்யா நைரோபிக்கு வெளியே 10 கிலோ மீட்டர் தொலைவில் "நாங் மலைகளின் அடிவாரத்தில்" அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும்.[1] இது இடச்சு எழுத்தாளர் கரேன் பிளிக்சனின் முன்னாள் ஆப்பிரிக்க இல்லமாகும். இது 1937ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவிற்கு வெளியே (அவுட் ஆப் ஆப்பிரிக்கா) எனும் புத்தகத்திற்காகப் பிரபலமானது. இது தோட்டத்தில் வாழ்க்கையை விவரிக்கிறது.

கரேன் பிளிக்சன் அருங்காட்சியகம்
கரேன் பிளிக்சன் அருங்காட்சியகம் , கரேன்
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிமாளிகை
நாடுகென்யா
நிறைவுற்றது1912
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)அகே சோர்ஜெர்ஜன்
வலைதளம்
https://www.museums.or.ke/karen-blixen/

வரலாறு

தொகு

இது அப்போதைய பிரித்தானியக் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஆடம்பர மாளிகை வீடு ஆகும். கரேன் பிளிக்சன் அருங்காட்சியகம் 1912ஆம் ஆண்டில் சுவீடன் பொறியாளர் அகே சோர்ஜெர்னால் கட்டப்பட்டது.[2] வீடு மற்றும் வீட்டுடன் இணைக்கப்பட்ட இதன் சொத்துக்கள் 1917ஆம் ஆண்டில் கரேன் பிளிக்சன் மற்றும் அவரது கணவர் பரோன் ப்ரோர் வான் பிளிக்ஸன்-பினெக் ஆகியோரால் ஒரு காபி தோட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கத்துடன் வாங்கப்பட்டன. 1921இல் பிளிக்சன்ஸ் பிரிந்த பிறகு, கரேன் பிளிக்சன் 1931ல் டென்மார்க்கிற்குத் திரும்பும் வரை இந்த வீட்டில் தொடர்ந்து வசித்து வந்தார். இவரது வாழ்க்கை மிகவும் பிரபலமான புத்தகமான அவுட் ஆப் ஆப்பிரிக்காவிலும், இவரது புத்தகமான சேடோசு ஆன் தி கிராஸிலும் விவரிக்கப்பட்டுள்ளது.

பிளிக்சன் இறந்த பிறகு, இந்த வீடு 1964இல் இடச்சு அரசாங்கத்தால் புதிய கென்ய அரசாங்கத்திற்குச் சுதந்திர பரிசாக நன்கொடையாக வழங்கப்பட்டது. மேலும் 1985ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் பிரபலத்தைத் தொடர்ந்து, கென்யாவின் தேசிய அருங்காட்சியகங்களில் ஒன்றாக 1986இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. இருப்பினும், இந்த தளம் அவுட் ஆப் ஆப்பிரிக்கா படமாக்கப்பட்ட இடம் அல்ல.[2] ஏனெனில் இந்தப் படங்கள் 1914 மற்றும் 1917க்கு இடையில் இவர் வாழ்ந்த அருகிலுள்ள பிளிக்சனின் முதல் பண்ணை இல்லமான எபகதியில் எடுக்கப்பட்டன.[2] இந்த அருங்காட்சியகம் நைரோபி புறநகர்ப் பகுதியான "கரேன்" என்ற பெயரில் அமைந்துள்ளது. இது பிளிக்சன் டென்மார்க்கிற்குத் திரும்பிய பிறகு காபி பண்ணையின் நிலத்தை மீண்டும் இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது.

பிளிக்சன் அருங்காட்சியகம் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட ஒவ்வொரு நாளும் 09:30 மற்றும் 18:00 இடையே திறக்கப்படுகிறது.[2] தொடர்ச்சியான வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களில் பங்கேற்பதற்கான வாய்ப்பு பார்வையாளர்களுக்கு உள்ளது. இதில் அசல் அலங்காரம் மற்றும் 1985 திரைப்படத்தின் முத்திரைகள் ஆகிய இரண்டிலும் வடிவமைக்கப்பட்ட அறைகள் உள்ளன.[3] காபி பண்ணை உபகரணங்களைக் கொண்ட தளங்களைக் காணலாம்.இங்கு ஒரு பரிசுப் பொருட்கள் கடையும் உள்ளது. அருங்காட்சியகத்தின் மைதானங்கள் திருமணங்கள், பெருநிறுவன நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகளுக்கு வாடகைக்குக் கிடைக்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Dinsen, Isak. Out of Africa, 1937
  2. 2.0 2.1 2.2 2.3 National Museums of Kenya: Karen Blixen "National Museums of Kenya - Karen Blixen". Archived from the original on 10 November 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-12-25., accessed 22 February 2011.
  3. Magical Kenya: Karen Blixen Museum, Nairobi , accessed 22 February 2011,

வெளி இணைப்புகள்

தொகு