கரோலின் கிராபோர்டு
கரோலின் சுசான் கிராபோர்டு (Carolin Susan Crawford) ஒரு பிரித்தானிய அறிவியல் பரப்புரையாளரும் வானியற்பியல் ஆய்வாளரும் விரிவுரையாளரும் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்திலும் இம்மானிவேல் கல்லூரியிலும் பணிபுரியும் பொதுமக்கள் வானியலாளரும் ஆவார்.[2]
கரோலின் கிராபோர்டு Carolin Crawford | |
---|---|
வாழிடம் | கேம்பிரிட்ஜ் |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கிரெழ்சாம் கல்லூரி |
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | நெடுந்தொலைவு தண்பாய்வு கண்டுபிடிப்பு [1] (1988) |
ஆய்வு நெறியாளர் | ஆந்திரூ பேபியன் |
கல்வி
தொகுஇவர் கேம்பிரிட்ஜ் நியூகாம் கல்லூரியில் 1985 இல் கணிதவியலில் கலையிளவல் பட்டம் பெற்றார். இவர் 1988 இல் தன் முனைவர் பட்டத்தை நியூகாம் கல்லூரியிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கேம்பிரிட்ஜ் வானியல் கழகத்திலும் பெற்றார்.
கல்விசார் வாழ்க்கைப்பணி
தொகுஇவர் பல முதுமுனைவர் ஆய்வுநல்கைகளையும் ஆராய்ச்சிக்கான ஆஅய்வுந்ல்கைகளையும் ஆக்சுபோர்டு பால்லியோல் கல்லுரியிலும் வானியல் நிறுவனத்திலும் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி முற்றத்திலும் கேம்பிரிட்ஜ் நியூகாம் கல்லூரியிலும் பெற்று ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டார். இவர் 1996 இல் இருந்து 2007 வரை அரசு கழகத்தின் ஆராய்ச்சி ஆய்வுறுப்பினர் தகைமையைப் பெற்றார்.[3]
இவர் 2004 இல் கேம்பிரிட்ஜ் இம்மானுவேல் கல்லூரி விரிவுரையாளராகவும் அய்வுறுப்பினராகவும் சேர்ந்தார். அங்கு இப்போது இவர் இயற்பியல்சார் புலங்களின் இளவல்பட்டச் சேர்க்கைக்கான பயிற்றுநராகவும் உள்ளார். இப்பதவியில் 2005 இல் கூடுதலாக ஏற்ற வானியல் நிறுவனத்தின் மக்கள் பரப்புரை அலுவலர் பதவியுடன் இணைந்தே பணிபுரிந்துவருகிறார்.[3]
இவர் 2011 முதல் 2015 வரை கிரெழ்சாம் கல்லூரியில் வானியலுக்கான கிரெழ்சாம் பேராசிரியராக இருந்தார். இப்பதவியில் இருந்து இவர் இலண்டன் நகரில் வானியல், வானியற்பியலுக்கான மக்கள் பரப்புரைகளை நிகழ்த்துகிறார்.[4]
ஆய்வியல் ஆர்வங்கள்
தொகுகிராபோர்டின் முதன்மையான ஆராய்ச்சி ஆர்வங்கள் X-கதிர் வானியலை ஒளியியல், அகச்சிவப்புக் கதிரண்மை நோக்கீடுகளுடன் இணைவாக்கி பெரும்பொருண்மைப் பால்வெளிகளின் இயற்பியல் நிகழ்வுகளை பால்வெளிக் கொத்துகளின் அகட்டில் (நடுக்கருவில்) ஆய்வதாகும். குறிப்பாக, இவர் சூடான கொத்தக ஊடகம், வெதுப்பான மின்னணுவாக்கப் படலங்கள், தண்மூலக்கூற்று முகில்கள், விண்மீன் உருகாக்கம், பால்வெளிகளின் மைய மீப்பொருண்மைக் கருந்துளையில் இருந்து வெளியே பாயும் கதிர்மின்மக் குழம்பு ஆகியவற்றிடையே நிகழும் சிக்கலான ஊடாட்டங்களை அறிவதற்கான நோக்கீடுகளை மேற்கொள்கிறார்." [5]
பரப்புரைகளும் விருதுகளும்
தொகுஇவர் வானியலின் பல பிரிவுகளில் பிரித்தானியா முழுவதும் வெளியிலும் பொதுமக்களுக்கான விரிவுரைகளும் பேச்சுகளும் பணிப்பட்டறைகளும் விவாதங்களும் நிகழ்த்துகிறார். இவர் தொடர்ந்து ஆண்டுதோறும் 4000 பெருக்கு அறிவியல் சார்ந்த பரப்புரைகளை ஆற்றுகிறார்.
இவர் தொடர்ந்து ஒலிபரப்பு ஊடகங்களிலும் கலந்துகொள்கிறார். எடுத்துகட்டாக, பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனத்தின் வானொலி அலைவரிசை-4 இல் நம் காலத்தில், வாழும் கோள் ஆகிய நிகழ்ச்சிகளில் அடிக்கை தோன்றுகிறார்.
இவர் 2009 இல் அறிவியலிலும் பொறியியலிலும் தொழில்நுட்பத்திலும் மகளிர் எனும் பிரித்தானியத் தகவல் மையத்தால் அறிவியல் தொடர்பாடலில் தன்னிகரற்ற திறமைகளுக்காக மகளிர் தன்னிகரற்ற சாதனை விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார். இது இவரது “அறிவியல் தொடர்பாடல் வழியாக சமூகத்துக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக“ வழங்கப்பட்டது.”[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ கணித மரபியல் திட்டத்தில் கரோலின் கிராபோர்டு
- ↑ "Fellow of the Colleges: Emmanuel College". Cambridge University Reporter No 3: Fellows of the Colleges. Cambridge University. 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 24 August 2011.
- ↑ 3.0 3.1 "Curriculum Vitae: Carolin Crawford" (PDF). Gresham College. Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-07-30.
- ↑ "Gresham College Press Release 13/06/2011 | Gresham College". Gresham College. 2011-06-13. Archived from the original on 2014-07-25. பார்க்கப்பட்ட நாள் 2014-07-18.
- ↑ Frances, 2nd Year. "Emmanuel College | Contact | Fellows". Emma.cam.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2014-07-18.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Women of Outstanding Achievement". WISE Campaign. Archived from the original on 2015-09-08. பார்க்கப்பட்ட நாள் 2015-07-30.
- ↑ "Women of Outstanding Achievement 2009 booklet". WISE Campaign. 2 November 2009. Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2015-07-30.