கரோலின் கேனான்

அமெரிக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

கரோலின் கேனான் (Caroline Cannon) அமெரிக்காவைச் சேர்ந்த இனுபியாக் இனக்குழுவின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமாவார். அக்குவாகாக்கு என்ற பெயராலும் இப்பெண் அழைக்கப்படுகிறார், இனுபியாக் இனக்குழுவினர் அலாசுகா மாநிலத்தின் பாயிண்ட்டு ஓப் நகரில் வசிக்கின்றனர். [1] பெட்ரோலியத் தொழிலினால் மாசுபடும் ஆர்க்டிக் பெருங்கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்காக போராடியதற்காக 2012 ஆம் ஆண்டு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது இவருக்கு வழங்கப்பட்டது. [2][3][4][5]

கரோலின் கேனான்
Caroline Cannon
அக்குவாகாக்கு
தாய்மொழியில் பெயர்அக்குவாகாக்கு
தேசியம்அமெரிக்கர்
பணிஇனுபியாக் இனத் தலைவி
அறியப்படுவதுசுற்றுச்சூழல் ஆர்வலர்
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2012)

அலாசுகாவின் வடக்கு கடற்கரையிலிருக்கும் ஆர்க்டிக் நீர் துருவ கரடிகள், திமிங்கலங்கள், மீன் மற்றும் மில்லியன் கணக்கான இடம்பெயரும் பறவைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பல்லுயிர் தன்மையைக் கொண்டுள்ளது. இந்த பிராந்தியத்தின் இனுபியாக் இன மக்கள் கிட்டத்தட்ட 700 பேர் ஆர்க்டிக் கடல் வாழ்வை தங்கள் பாரம்பரிய வாழ்வாதாரமாக நம்பி பிழைப்புக்காக அங்கு தங்கியுள்ளனர்.

ஆர்க்டிக் நீரில் எண்ணெய் மற்றும் எரிவாயு கலந்தால் பிராந்தியத்தின் பல்லுயிர் பெருக்கத்திற்கும், அவர்களின் உயிர்வாழ்விற்காக அந்த வளங்களை நம்பியுள்ள பூர்வீக சமூகங்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. கரோலின் கேனான் ஆர்க்டிக் கடல் மாசுபடுவதற்கு எதிராக வலுவான மற்றும் நிலையான குரல் கொடுத்துவருகிறார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Goldman Prize Winner Caroline Cannon". loe.org. 20 April 2012. பார்க்கப்பட்ட நாள் 28 April 2019.
  2. "Alaskan Wins Environmental Prize for Opposing Offshore Drilling". voanews.com. 23 April 2012. பார்க்கப்பட்ட நாள் 28 April 2019.
  3. "Caroline Cannon". Goldman Environmental Prize. பார்க்கப்பட்ட நாள் 31 May 2012.
  4. "Inupiat Woman Wins Goldman Prize for Leading Fight Against Arctic Drilling". treehugger.com. 20 April 2012. பார்க்கப்பட்ட நாள் 28 April 2019.
  5. "Point Hope leader awarded prestigious prize". thearcticsounder.com. 20 April 2012. பார்க்கப்பட்ட நாள் 28 April 2019.
  6. "Caroline Cannon". Goldman Environmental Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.

மேலும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோலின்_கேனான்&oldid=3153573" இலிருந்து மீள்விக்கப்பட்டது