கரௌலி
கரௌலி (Karauli) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கில் அமைந்த கரௌலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். பிரித்தானிய இந்தியாவின் அட்சியில் இந்நகரம் கரௌலி சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது. இந்நகரத்தை மன்னர் விஜய பாலன் நிறுவினார்.
கரௌலி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 26°30′N 77°01′E / 26.5°N 77.02°E | |
நாடி | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | கரௌலி மாவட்டம் |
தோற்றுவித்தவர் | மன்னர் விஜய பாலன் |
அரசு | |
• நிர்வாகம் | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 33 km2 (13 sq mi) |
ஏற்றம் | 275 m (902 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 82,960 |
• அடர்த்தி | 2,500/km2 (6,500/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 322241 |
வாகனப் பதிவு | RJ 34 |
இணையதளம் | karauli |
கரௌலி நகரம் ஆக்ராவிலிருந்து 114 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜெய்ப்பூரிலிருந்து 158 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 33 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 35 வார்டுகளும் கொண்ட கரௌலி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 82,960 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 43,908 மற்றும் 39,052 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 13114 ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 68.8% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 11,695 மற்றும் 2,651 ஆகவுள்ளனர்.[2] இதன் ம[3]க்கள் தொகையில் இந்துக்கள் 76.90%, இசுலாமியர்கள் 22.54%, சமணர்கள் 0.32%, கிறித்துவர்கள் 0.09% மற்றும் பிறர் 0.24% ஆக உள்ளனர்.
கரௌலி கலவரம்
தொகுகரௌலி நகரத்தில் புத்தாண்டு மற்றும் இராம நவமியை முன்னிட்டு இந்துக்கள் 2 ஏப்ரல் 2022 அன்று முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதி வழியாக ஊர்வலம் சென்ற போது, முஸ்லீம்கள் ஊர்வலத்தினர் மீது கல்வீசித் தாக்குதல் தொடுத்ததால் கலவரம் நிலவியது. கலவரத்தில் இருபிரிவினரின் 80 பேர்களின் சொத்துக்கள் தாக்கப்பட்டது. கலவரம் தொடர்பாக 44 பேர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டதுடன், 23 பேர்களை கைது செய்து, 10 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.[4]