கர்டி (Curti ) (கொங்கணி: कुर्ती) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும்.

கர்டி
Curti
நகரம்
கர்டி நகரில் ஒரு நறுமணத் தோட்டம்
கர்டி நகரில் ஒரு நறுமணத் தோட்டம்
நாடு இந்தியா
மாநிலம்கோவா
மாவட்டம்வடக்கு கோவா
ஏற்றம்
30 m (100 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்13,070
மொழிகள்
 • அலுவல்பூர்வம்கொங்கணி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

புவியியல் அமைப்பு

தொகு

15.47° வடக்கு மற்றும் 74.02° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் கர்டி நகரம் பரவியுள்ளது[1]. மேலும் இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 30 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கர்டி நகரின் மொத்த மக்கள் தொகை 13,070 ஆகும். [2] இம்மக்கள் தொகையில் 53% பேர் ஆண்கள் மற்றும் 47% பேர் பெண்கள் ஆவர். கர்டி நகரின் கல்வியறிவு சதவீதம் 71% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 75% எண்ணிக்கையும் பெண்கள் 67% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 13% பேர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Falling Rain Genomics, Inc - Curti
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்டி,கோவா&oldid=3575064" இலிருந்து மீள்விக்கப்பட்டது