கர்னாவதி பல்கலைக்கழகம்
கர்னாவதி பல்கலைக்கழகம் (Karnavati University) இந்தியாவின் குசராத்து மாநிலம் காந்திநகருக்கு அருகிலுள்ள உவர்சாத்து என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு தனியார் பல்கலைக்கழகம் [1] ஆகும். 2017 ஆம் ஆண்டின் குசராத்து தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் [2] மூலம் கர்னாவதி மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளையால் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. சுவர்னிம் சிடார்ட்டப் மற்றும் புதுமைப் பல்கலைக்கழகம், பிபி சவானி பல்கலைக்கழகம் மற்றும் இந்திரசில் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களையும் இந்த அறக்கட்டளை நிறுவியுள்ளது.
வகை | தனியார் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 2017 |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு, பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு |
இணையதளம் | www |
கல்வி
தொகுபல்கலைக்கழகம் அதன் ஆறு தொகுதி கல்லூரிகளின் மூலம் மேலாண்மை, வடிவமைப்பு, சட்டம், தாராளவாத கலைகள், வர்த்தகம், ஊடக ஆய்வுகள் மற்றும் பல் மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை வழங்கும் படிப்புகளை அளிக்கிறது:[3]
- கர்னாவதி பல்மருத்துவப் பள்ளி.
- ஒருங்கிணைந்த உலக வடிவமைப்பு நிறுவனம்
- ஒருங்கிணைந்த உலக சட்டப் பள்ளி.
- ஒருங்கிணைந்த உலக வணிகப் பள்ளி.
- ஒருங்கிணைந்த உலக கணக்கீட்டு நுண்ணறிவுப் பள்ளி.
- ஒருங்கிணைந்த தாராளவாத கலைகள் மற்றும் மக்கள் தொடர்பியல் பள்ளி.
இணைப்புகள்
தொகுகர்னாவதி பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1] இப்பல்கலைக்கழகம் பொதுநலவாயப் பல்கலைக்கழகங்கள் சங்கத்தில் உறுப்பினராகவும் உள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "State -wise List of Private Universities as on 29.06.2017" (PDF). ugc.ac.in. University Grants Commission. 29 June 2017. பார்க்கப்பட்ட நாள் 1 September 2017."State -wise List of Private Universities as on 29.06.2017" (PDF). ugc.ac.in. University Grants Commission. 29 June 2017. Retrieved 1 September 2017.
- ↑ "The Gujarat Private Universities (Amendment) Act, 2017" (PDF). Gujarat Gazette. Government of Gujarat. 28 March 2017. Archived from the original (PDF) on 26 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 1 September 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Constituent Colleges of KU". Karnavati University. பார்க்கப்பட்ட நாள் 29 March 2021.
- ↑ "ACU members". acu.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 5 June 2020.