கர்னூல் கடப்பா கால்வாய்

கர்னூல் கடப்பா கால்வாய் (Kurnool Cuddappah Canal) என்பது க. க. கால்வாய் என்று பிரபலமாக அறியப்படுகிறது. இது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மற்றும் கடப்பா மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு நீர்ப்பாசனக் கால்வாய் ஆகும்.[1][2][3]

கர்னூல் அருகே க. க. கால்வாய்

வரலாறு

தொகு

க. க. கால்வாய் 1863 மற்றும் 1870க்கு இடையில் நீர்ப்பாசனம் மற்றும் போக்குவரத்து கால்வாயாக வெட்டப்பட்டது. இந்தக் கால்வாய் பெண்ணாறு மற்றும் துங்கபத்திரை ஆறுகளை ஒன்றோடொன்று இணைக்கிறது. இது கர்னூலுக்கு அருகே துங்கபத்திரை ஆற்றில் அமைந்துள்ள சுங்கேசுலா அணையிலிருந்து தொடங்குகிறது.[4]

1933ஆம் ஆண்டில் நீர்வழிப் போக்குவரத்து கைவிடப்பட்டது. தற்பொழுது இக்கால்வாய் முக்கிய நீர்ப்பாசன ஆதாரமாகத் தொடர்கிறது. க. க. கால்வாய் நவீனமயமாக்கலின் கீழ், கால்வாயின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, முழுக் கால்வாயையும் நவீனமயமாக்குதல் மற்றும் கட்டமைப்புகளைப் பழுது பார்த்தல்/புனரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. க. க. கால்வாயின் முழுப் பாசனத்தையும் நிலைநிறுத்துவதற்கும், 60,000 ஏக்கர் பாசன இடைவெளியை உருவாக்குவதற்கும் இந்தத் திட்டம் கட்டுமானத்தில் உள்ளது. இந்தக் கால்வாய் தற்போது கிருஷ்ணா ஆற்றிலிருந்து 40 ஆயிரம் மில்லியன் கன அடி நீர்ப் பயன்பாட்டுடன் கிட்டத்தட்ட 1700000 ஏக்கர்களுக்கு நீர்ப்பாசனம் செய்கிறது.

தண்ணீர் கிடைப்பது உறுதி

தொகு

தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சிறீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து வலது பிரதானக் கால்வாய் வழியாக மாற்று நீர் வழங்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் அமைக்கப்பட்ட முசுமார்ரி நீரேற்றம் அல்லது காண்ட்ரி-நீவா நீரேற்று கால்வாயிலிருந்து க. க. கால்வாய்க்கு நீர் செலுத்தப்படுகிறது. கால்வாயில் நீர் மட்டம் (798 அடி வரை) போத்திரெட்டிபாடு தலை கட்டுப்பாட்டாளரின் குறைந்தபட்ச இழுவை மட்டத்திற்குக் கீழே இருக்கும்போது நீரேற்று கால்வாயிலிருந்து நீரேற்றப்படுகிறது. இது தெலுங்கு கங்கை, சிறீசைலம் வலது கரை கால்வாய் மற்றும் கலேரு நாகரி திட்டங்களுக்கும் நீர் வழங்குகிறது.[5] இத்திட்டத்திற்கு 10 கன அடி நீர் ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டிருந்தாலும், க. க. கால்வாய்க்கான பெரும்பாலான நீர் பனச்சர்லா குறுக்கு சீராக்கியத்தில் வெளியேறும் கால்வாய் வழியாக எடுக்கப்பட்டு, சோமாசிலாவுக்கு கொண்டு செல்லப்பட்டு நெல்லூர் மாவட்டத்தின் பயன்பாட்டிற்காக ராயலசீமாவிற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை இழக்கிறது. மிக குறைந்த நீர் க. க. கால்வாய் ஆயக்கட்டு அல்லது தெலுங்கு கங்கை பிரதானக் கால்வாய் ஆயக்கட்டை அடைகிறது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Archive News". தி இந்து. 2006-07-23. Archived from the original on 2008-04-12. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  2. "Andhra Pradesh / Kurnool News : KC Canal reopened". தி இந்து. 2005-07-20. Archived from the original on 2006-09-12. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  3. "Andhra Pradesh / Cuddapah News : Ryots picket KC Canal engineer's office". தி இந்து. 2004-07-23. Archived from the original on 2004-08-12. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  4. "The Indian Express - Google News Archive Search".
  5. "Andhra Pradesh CM inaugurates Muchumarri lift irrigation scheme". பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்னூல்_கடப்பா_கால்வாய்&oldid=4098789" இலிருந்து மீள்விக்கப்பட்டது