விமான கருப்புப் பெட்டி

(கறுப்புப் பெட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விமான கருப்புப் பெட்டி (Flight recorder) விமானத்தினுள் தகவல் சேமிக்கப் பயன்படும் ஒரு தொழில்நுட்பக் கருவியாகும். விமானம் விபத்திற்குள்ளாகும் போது அது தொடர்பான காரணங்களை அறிவதற்கு/ஆராய்வதற்கு இக்கருவி பெரிதும் உதவும். இதனை கருப்புப் பெட்டி என்று அழைத்தாலும், இது செம்மஞ்சள் நிறத்தில் காணப்படும். விமானத்தின் சேதம் குறைவான பின்பகுதியில் இவை பொருத்தப்பட்டிருக்கும். கருப்புப் பெட்டியில் இரு பகுதிகள் உண்டு: ஒன்று விமானியறை குரல் பதிவி. இது கடைசி 2 மணி நேரத்திற்கு விமானிகளுக்கும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை பதிவு செய்து வைத்திருக்கும். இன்னொரு பகுதியான விமான தரவு பதிவி விமானத்தின் வேகம், பொறிகளின் செயல்பாடு, விமானத்தின் பிற கருவிகளின் செயல்பாடு, விமானத்துக்குள் உள்ள காற்றழுத்தம் என கிட்டத்தட்ட 400 வகையான காரணிகளை பதிவு செய்யும்.

விமான கருப்புப் பெட்டி - விமானியறை குரல் பதிவி மற்றும் விமான தரவு பதிவி
Deutsches அருங்காட்சியகத்தில் விமானியறை குரல் பதிவி
விமானியறை குரல் பதிவியின் இருபுறம்
அமேசான் காடுகளில் பிரேசில் ஆய்ஞர்களால் கண்டுபிடிக்கப்பட்ட விபத்துக்குள்ளான ஒரு விமானத்தின் விமானியறை குரல் பதிவி

டைட்டானியம் என்ற தனிமத்தால் செய்யப்பட்ட இவை புவி ஈர்ப்பு விசையை விட 3400 மடங்கு விசையையும் 1000 0 C ஐவிடவும் அதிக வெப்பநிலையையும் தாங்கக் கூடியது. விமானம் விபத்துக்குள்ளானால் கருப்புப் பெட்டியிலிருந்து தொடர்ந்து சமிக்கைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சைகைகள் வரும். இது சுமார் 13 பவுண்டுகள் எடையைக் கொண்டவையாகும். தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். நீண்ட காலமாகவே கருப்புப் பெட்டி தண்ணீரில் விழுந்தால் மிதக்கும் தன்மையுடனும், எளிதில் திறக்கக் கூடிய வகையிலும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது[1].

விமானத்தின் கருப்புப் பெட்டி இரு பகுதிகளைக் கொண்டது, அதில் ஒரு பகுதி விமானியறை குரல் பதிவி (Cockpit voice recorder) மற்றொரு பகுதி விமான தரவு பதிவி ஆகும். கருப்புப் பெட்டி விமானத்தின் வால் பகுதியில் இது பொறுத்தப்பட்டிருக்கும். விமானம் விபத்துக்குள்ளானால் அதிலிருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சமிக்ஞைகள் வரும், இந்த சமிக்ஞைகளை வைத்து இதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளமுடியம்.

விமானியறை குரல் பதிவி விமானிகளின் உரையாடலை பதிவு செய்வும் ஒரு கருவியாகும். இது கடைசி 2 மணி நேரத்திற்கு விமானிகளுக்கும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்களையும் பதிவு செய்து வைத்திருக்கும். இது செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். இக்கருவி தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும்.

கறுப்புப் பெட்டியின் தன்மை

தொகு
  • செம்மஞ்சள் நிறத்தில் (orange) காணப்படும்.
  • தீயினில்/உயர் வெப்பநிலை என்பவற்றால் எரிந்து சேதமுறாது.
  • உவர் நீரில் ஊறினாலும் பாதிப்படையாது.
  • கடலுக்குள் மூழ்கினாலும் மூன்று மாதங்களுக்குப் பழுதடையாது.
  • ஆகாயத்தில் இருந்து வீழ்ந்தாலும் உடையாது.
  • எங்கு வீழ்ந்தாலும் அவ்விடத்தில் இருந்து தகவல் அனுப்பிக் கொண்டிருக்கும்.
  • வெளிப்புற, உட்புற தாக்கத்தினாலும் சேதமடையாதவாறு பெட்டியும் தகவல் சேமிப்பு நாடாவும் பாதுகாக்கப்படுகின்றன.

கறுப்புப் பெட்டியில் சேமிக்கப்படும் தகவல்கள்

தொகு

கறுப்புப் பெட்டியின் ஒரு பகுதியான விமானியறை குரல் பதிவி(Cockpit Voice Rocorder), விமான ஒட்டியின் அறையில் நிகழும் உரையாடல்களை பதிவு செய்யும். கறுப்புப் பெட்டியின் மற்றைய பகுதியான விமான தரவு பதிவி (Flight Data Recorder), விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை தகவல் முதலிய விமானத்தின் தொழில்நுட்பத் தகவல்களை பதிவு செய்யும்.

மேற்கோள்கள்

தொகு
  1. http://thatstamil.oneindia.in/news/2009/06/05/world-recovered-debris-not-from-447-crash.html[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Flight data recorders
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விமான_கருப்புப்_பெட்டி&oldid=3781303" இலிருந்து மீள்விக்கப்பட்டது