கறையான் கவசம்

பொருட்களை கட்டுப்படுத்தும் முறை

கறையான் கவசம் (Termite shield) என்பது மண்ணிலுள்ள கறையான்கள் தரை விட்டங்கள் உள்ளிட்ட மரத்தினால் செய்யப்பட்ட பொருட்கள் பாதிக்காமல் இருக்கக் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் ஓர் உலோகத் தடுப்பாகும்.[1] இப்போது பல வகையான இரசாயனமற்ற கறையான் தடுப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஊடுருவல்கள், மடிப்புகள் மற்றும் அடிப்பகுதியில் கறையான் தடுப்பு அடைப்பானுடன் கூடிய கறையான் கவசத்தைப் பயன்படுத்தி லூசியானா கட்டுமானம்.

பொருள்கள்

தொகு

கறையான் கவசங்கள் பல்வேறு பொருட்களால் உருவாக்கப்படலாம். துத்தநாகம் பூசிய இரும்பு, ஈய வெள்ளீயக் கலப்புலோகம், செம்பு அல்லது அலுமினியம் உள்ளிட்ட பல்வேறு உலோகங்களைப் பயன்படுத்தி கறையான் கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. அடித்தளச் சுவரின் மேற்பகுதிக்கும் மரத்தின் சந்து தகட்டின் அடிப்பகுதிக்கும் இடையில் பொருந்தும் வகையில் இந்த உலோகத் தாள் பயன்படுத்தப்படுகிறது. கறையான் கவசத்தின் விளிம்புகள் பொதுவாக வளைக்கப்பட்டு, சுவரின் முகத்திற்குச் சற்று அப்பால் நீட்டிக்கப்பட்டு, கீழே திருப்பப்படுகின்றன. இது சுவரின் முகத்திலிருந்து கீழே ஓடும் தண்ணீரைத் திசைதிருப்புகிறது. மண்ணிலிருந்து நிலத்தடி கறையான்களின் இயக்கத்தைக் குறைக்கிறது. கறையான் கவசங்கள் ஒரு கட்டிடத்தை கறையான்களின் செயல்பாட்டிலிருந்து பாதுகாக்காது. ஆனால் கறையான்களின் செயல்களைக் காணக்கூடியதாக மாற்ற உதவும்.[2]

சமீபத்தில், கருங்கல் மற்றும் பாலிவினைல் குளோரைடு செங்கலுக்கிடையில் இடப்பட்டு கறையான்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. இதில் கறையான்கள் முழுச் சுற்றளவையும் சுற்றியுள்ள கட்டிடத்திற்குள் நுழைய முடியும். கறையான்கள் மென்று அந்தப் பொருளை ஊடுருவுவதற்குக் கறையான்கள் கவசம் மிகவும் தடிமனாக இருப்பதால், கறையான்கள் எளிதில் அழிக்கக்கூடிய திறந்தவெளிக்கு இடம்பெயரக் கட்டாயப்படுத்துகின்றன. இந்த வகைப் பொருட்களைப் பயன்படுத்துவதன் நன்மைகள் என்னவென்றால், இவை சுற்றுச்சூழல் சங்கத்தின் பரிந்துரையின் கீழ் வழங்கப்படுகின்றன.[3] இவை உலோகங்களை விட மலிவானது. மேலும் பிற கவசப் பாதுகாப்பு அமைப்புகளுடன் எளிதில் இணைத்துப் பயன்படுத்தலாம்.

பிரச்சனைகள்

தொகு

கறையான் கவசங்களில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால், உலோகக் கவசத்திற்குள் எஃகு வலுவூட்டும் கம்பிகள் ஊடுருவும் மடிப்புகள் மற்றும் திறப்புகளில் உள்ள இடைவெளிகள் ஆகும். பல வகையான நிலத்தடி கறையான்கள் இத்திறப்பு வழியாக நுழைய முடியும் என்பதால், இந்த இடைவெளிகளைக் கறையான்களைத் தடுக்கும் அடைப்பான் மூலம் மூட வேண்டும். கூடுதலாக, கவசத்தின் கீழ் கறையான்களைக் கட்டுப்படுத்த அடைப்பான்களைப் பயன்படுத்தப்பட வேண்டும். எனவே கறையான்கள் கட்டமைப்புகளின் வெளிப்புறத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இதர பொருட்கள்

தொகு

பன்னாட்டுக் குறியீடு குழுமத்தினால் மதிப்பீடு செய்யப்பட்ட "கறையான் கவசங்கள்" என்பதை விட "கறையான்கள் தடைகள்" என்று அழைக்கப்படும் இரண்டு பொருட்கள் உள்ளன.[4][5] ஒன்று ரசாயனம் அல்லாத கறையான்கள் தடுப்பு முத்திரை கொண்ட நீர்புகா சவ்வு, மற்றொன்று கம்பி வலை.

மேற்கோள்கள்

தொகு
  1. Ramsey, Charles (1956). Architectural Graphic Standards, Fifth Edition. John Wiley & Sons. p. 47.
  2. "An Extra Barrier of Protection". Rapid Pest Control Brisbane. பார்க்கப்பட்ட நாள் 20 February 2015.
  3. "Termite Management System". Flick Pest Control. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.
  4. "TERM® Barrier System" (PDF). ICC Evaluation Service. August 2017. பார்க்கப்பட்ட நாள் 2018-03-01.
  5. "TERMIMESH™ Termite Control System" (PDF). ICC Evaluation Service. December 2017. பார்க்கப்பட்ட நாள் 2018-03-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறையான்_கவசம்&oldid=4144415" இலிருந்து மீள்விக்கப்பட்டது