கற்பித்தல் முறை

ஆசிரியர் செயல்படுத்தும் முறை

ஒரு கற்பித்தல் முறையானது மாணவர்களின் கற்றலை செயல்படுத்துவதற்கு ஆசிரியர்கள் பயன்படுத்தும் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை உள்ளடக்கியது. இவை கற்பிக்கப்படவேண்டிய பாடப்பொருள் மற்றும் கற்கும் மாணவர்களின் இயல்பு ஆகியவற்றைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட கற்பித்தல் முறை பொருத்தமானதாகவும் திறமையாகவும் இருப்பதற்கு, அது கற்பவர், பாடத்தின் தன்மை மற்றும் அது கொண்டு வர வேண்டிய கற்றல் வகை ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. [1]

கற்பித்தலுக்கான அணுகுமுறைகளை ஆசிரியர்-மைய மற்றும் மாணவர் மைய அனுகுமுறை எனப் பரவலாக வகைப்படுத்தலாம். ஆசிரியரை மையமாகக் கொண்ட (அதிகாரப்பூர்வ) அணுகுமுறையில், ஆசிரியர்கள் முக்கிய நபராக உள்ளனர். மாணவர்கள் "வெற்றுப் பாத்திரங்களாகப்" பார்க்கப்படுகிறார்கள், அவர்களின் முதன்மைப் பணியானது சோதனை மற்றும் மதிப்பீட்டின் இறுதிக் குறிக்கோளுடன் (விரிவுரைகள் மற்றும் நேரடி அறிவுறுத்தல்கள் மூலம்) செயலற்ற முறையில் தகவல்களைப் பெறுவதாகும். மாணவர்களுக்கு அறிவையும் தகவல்களையும் வழங்குவது ஆசிரியர்களின் முதன்மைப் பணியாகும். இந்த முறையில், கற்பித்தல் மற்றும் மதிப்பீடு இரண்டு தனித்தனியாகப் பார்க்கப்படுகின்றன. மாணவர்களின் கற்றலானது மதிப்பீடுகள் மூலம் அளவிடப்படுகிறது. [2] கற்றலுக்கான மாணவர்-மைய அணுகுமுறையில், ஆசிரியர்களும் மாணவர்களும் சம அளவில் பங்கு வகிக்கின்றனர். இந்த அணுகுமுறை அதிகாரமயமாக்கப்படல் என்றும் அழைக்கப்படுகிறது. [3] ஆசிரியரின் முதன்மைப் பணி மாணவர்களின் கற்றல் மற்றும் திறன்கள் பற்றிய ஒட்டுமொத்த புரிதலுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் எளிதாக்குதல் ஆகும். குழுத் திட்டங்கள், மாணவர் கூட்டுத் திரட்டு மற்றும் வகுப்புப் பங்கேற்பு உள்ளிட்ட முறையான மற்றும் முறைசாரா மதிப்பீடுகளின் மூலம் மாணவர் கற்றல் அளவிடப்படுகிறது. கற்பித்தலும் மதிப்பீடும் ஒண்றினைக்கப்பட்டுள்ளது; ஆசிரியர் அறிவுறுத்தலின் போது மாணவர் கற்றல் தொடர்ந்து அளவிடப்படுகிறது. [2]

சான்றுகள்

தொகு
  1. Westwood, P. (2008). What teachers need to know about Teaching methods. Camberwell, Vic, ACER Press
  2. 2.0 2.1 "Teaching Methods". Teach.com. பார்க்கப்பட்ட நாள் 1 December 2017.
  3. "How teachers respond to school bullying: An examination of self-reported intervention strategy use, moderator effects, and concurrent use of multiple strategies". Teaching and Teacher Education 51: 191–202. 2015. doi:10.1016/j.tate.2015.07.004. பன்னாட்டுத் தர தொடர் எண்:0742-051X. http://dx.doi.org/10.1016/j.tate.2015.07.004. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பித்தல்_முறை&oldid=3761169" இலிருந்து மீள்விக்கப்பட்டது