கலங்கரைவிளக்க மலை

கலங்கரை விளக்க மலை (Light House Hill) என்பது தென்னிந்தியாவில் உள்ள மங்களூர் நகரின் மையப்பகுதியான அம்பன்கட்டாவில் அமைந்துள்ளது. இது ஐதர் அலியால் கட்டப்பட்டது மற்றும் மைசூர் கடற்படை சுல்தானகத்தின் கண்காணிப்பு கோபுரமாகப் பயன்படுத்தப்பட்டது.

தாகூர் பூங்காவில் உள்ள கலங்கரைவிளக்கு

கல்வி நிறுவனங்கள்

தொகு

மங்களூரில் உள்ள புனித அலோசியசு கல்லூரி மற்றும் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டு பிரபலமான கல்வி நிறுவனங்களின் இருப்பிடம் இந்த கலங்கரை விளக்க மலை ஆகும்.

மத இடங்கள்

தொகு

புனித அலோசியசு தேவாலயம் மற்றும் இத்கா மசூதி ஆகியவை இங்குள்ள புகழ்பெற்ற மத இடங்களாகும்.[1]

பொது பயன்பாடுகள்

தொகு

நகர மைய நூலகம் புனித அலோசியசு கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த நூலகம் மங்களூர் மாநகராட்சியால் நடத்தப்படுகிறது. மங்களூரில் நகர மைய நூலகத்திற்குப் பல கிளைகள் உள்ளன.

கலங்கரை விளக்கம்

தொகு

மங்களூரின் முதல் கலங்கரை விளக்கம் மங்களூரு நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த "கலங்கரை விளக்கு இல்லம்" மைசூரின் உண்மையான ஆட்சியாளரான ஐதர் அலி என்பவரால் கட்டப்பட்டது. இவரது அரசாட்சியின் கீழ் மைசூர் கடற்படை சுல்தானகத்தின் கண்காணிப்பு கோபுரமாக இருந்தது. இவரது மூத்த மகன் திப்பு சுல்தான். மலையில் உள்ள பெரிய காவற்கோபுரம் ஆங்கிலேயர்களுக்கு ஒரு தளமாகச் செயல்பட்டது. அங்கிருந்து பிரித்தானியக் கடற்படையின் பல குடியுரிமை தளபதிகள் பயணக் கப்பல்களின் இயக்கத்தைக் கண்காணிப்பார்கள்.[2] கலங்கரை விளக்கத்தின் அடிவாரத்தில் ஒரு நூலகம் உள்ளது. இதில் புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் கர்னாட் சதாசிவ் ராவ் பெயரில் வாசிப்பு அறை உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Tippu Sultan's Footprints in Tulunad". Daijiworld Media. 8 December 2005. Archived from the original on 21 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 January 2012.
  2. "Feeling on top of the world". The Hindu. 18 June 2005. http://www.hindu.com/mp/2005/06/18/stories/2005061800910200.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலங்கரைவிளக்க_மலை&oldid=3774552" இலிருந்து மீள்விக்கப்பட்டது