கலாமண்டலம் லீலாம்மா
கலாமண்டலம் லீலாம்மா (Kalamandalam Leelamma) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஒரு முன்னணி மோகினியாட்ட நடனக் கலைஞர் ஆவார்.[1]
கலாமண்டலம் லீலாம்மா Kalamandalam Leelamma | |
---|---|
பிறப்பு | லீலாம்மா 1952 |
இறப்பு | 15 சூன் 2017 |
தேசியம் | இந்தியர் |
பணி | மோகினியாட்டம் |
சங்கீத நாடக அகாதமி விருது |
மோகினியாட்டத்திற்கான இவரது பங்களிப்பிற்காக சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது.[1][2]
1952 ஆம் ஆண்டில் கோட்டயத்தில் உள்ள மட்டக்கரையில் பிறந்த இவர், கலாமண்டலத்தில் நடனம் பயின்றார். பின்னர், அதே நிறுவனத்தில் ஆசிரியரானார். மோகினியாட்டம், பரதநாட்டியம், குச்சிப்புடி போன்றவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த லீலாம்மா கலாமண்டலம் சத்யபாமா, கலாமண்டலம் சந்திரிகா ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். இந்திய அரசின் கலாச்சாரத் துறையின் மூத்த உறுப்பினராகவும் இருந்தார். பல தேசிய மற்றும் பன்னாட்டு நடனவிழாக்களில் கேரளாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அடூர் கோபாலகிருட்டிணன் இயக்கிய ஓர் ஆவணப்படத்திலும் லீலாம்மா நடித்தார். 2017 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் நாள் திருச்சூர் அத்தானியில் உள்ள அவரது இல்லத்தில் தன்னுடைய 65 ஆவது வயதில் காலமானார்.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவருக்கு கணவர் மதுசூதனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு கிருட்டிணபிரசாத்து, கிருட்டிணப்பிரியா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 G. S. Paul (2007-11-16). "Enchanted by Mohiniyattom". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606131131/http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2007111650320200.htm&date=2007/11/16/&prd=fr&. பார்த்த நாள்: 2010-04-22.
- ↑ Parbina Rashid (12 July 2002). "Mohiniyattam — music of movement". The Tribune. http://www.tribuneindia.com/2002/20020712/art-trib.htm#1. பார்த்த நாள்: 2010-04-22.
- ↑ "Mohiniyattom exponent Kalamandalam Leelamma passes away" (in en). Mathrubhumi. 15 June 2017. https://english.mathrubhumi.com/news/kerala/mohiniyattom-exponent-kalamandalam-leelamma-passes-away-india-classical-dance-1.2016539. பார்த்த நாள்: 27 October 2018.