கலா (இசைத்தொகுப்பு)

கலா (Kala) ஆகத்து 2007 இல் பிரித்தானிய இசைக்கலைஞர் மாதங்கி அருள்பிரகாசம் என்ற மாயாவினால் (M.I.A) வெளியிடப்பட்ட இரண்டாவது இசைத்தொகுப்பு ஆகும். இது நடன இசையில் இருந்து ஹிப் ஹாப் வரையிலான இசை பாணிகளை வழங்குகிறது. மேலும் இப்பாடல்களில் உறுமி இசையும் தெற்காசியாவின் இசையும் விரிவாக பயன்படுத்தப்படுகிறது. இது முக்கியமாக மாதங்கி அருள்பிரகாசம் மற்றும் சுவிட்ச் ஆகியோரால் எழுதப்பட்டு தயாரிக்கப்பட்டது, மேலும் டிம்பாலாண்ட், டிப்ளோ, ஆஃப்ரிகன் பாய் ற்றும் வில்கான்னியா மாப் ஆகியோர் இதன் முக்கிய பங்களிப்பாளர்கள் ஆவார்கள். மாயா 2006 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்த ஆல்பத்தின் பதிவை தொடங்கினார். அவர் இந்தியா, ஜமெய்க்கா, ஆத்திரேலியா, லைபீரியா மற்றும் டிரினிடாட் உட்பட உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த பாடல்களை பதிவாக்கினார் .[1][2][3]

கலா
Kala
ஸ்டூடியோ
வெளியீடு8 ஆகத்து 2007 (2007-08-08)
ஒலிப்பதிவு2006–2007
நீளம்47:32
இசைத்தட்டு நிறுவனம்எக்சு.எல், இண்டர்ஸ்கோப்
இசைத் தயாரிப்பாளர்மாயா, சுவிட்சு, பிளாக்ஸ்டார், டிம்பாலாண்ட், மோர்கானிக்சு, டிப்லோ
மாயா காலவரிசை
'அருளர்
(2005)
கலா
Kala
'மாயா
(2010)
புரூக்லின், சைரென் இசைவிழாவில் மாயா (2007)

மாயாவின் முதல் இசைத்தொகுப்புக்கு அவரது தந்தை அருளரின் பெயர் இடப்பட்டிருந்தது. அதே போல கலா என்ற அவரது தாயின் பெயர் இந்த இசைத்தொகுப்புக்கு இடப்பட்டது. மேலும் மாதங்கியின் பாடல்கள் விடுதலைப் புலிகளை அங்கீகரிப்பதாக இருப்பதாக அவர் அமெரிக்காவிற்குச் செல்வதற்கான நீண்ட கால விசா தடுக்கப்பட்டது. கலா ​​பல வெளியீடுகள் மூலம் ஆண்டின் சிறந்த ஆல்பங்களில் ஒன்றாக இடம் பெற்றது. இது மாயாவின் முந்தைய வெளியீடான அருளரை விட 172 இடங்கள் முன்னேறி பில்போர்டு 200 பட்டியலில் பதினெட்டாவது இடத்தை பிடித்தது, ஆனால் பத்திரிகை மற்றும் சிறந்த எலக்ட்ரானிக் ஆல்பங்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்து விட்டது. ஐக்கிய இராச்சிய இசைப்பட்டியல் வரிசையில் அருளர் என்ற அவருடைய முதல் இசைத்தொகுப்பை விட 59 இடங்கள் முன்னேறி 39ஆம் பிடித்தது. கலாவில் "பாய்ஸ்", "ஜிம்மி" மற்றும் "பேப்பர் பிளேன்ஸ்" உட்பட 16 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Pitchfork Staff (2 October 2009). "The 200 Best Albums of the 2000s". Pitchfork (website). பார்க்கப்பட்ட நாள் 29 April 2023. But for every fantasy pop triumph on Kala, there's a hidden door or three.
  2. Leah Miller (Presenter), M.I.A. (Interviewee).MuchMusic Much on Demand: M.I.A. Transcript.Toronto:MuchMusic.
  3. "M.I.A. doesn't need a visa, just inspiration". Today (U.S. TV program). 21 August 2007. பார்க்கப்பட்ட நாள் 4 February 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலா_(இசைத்தொகுப்பு)&oldid=4165062" இலிருந்து மீள்விக்கப்பட்டது