கலிங்கச் சிற்பங்கள், செங்கமேடு
கலிங்கச் சிற்பங்கள், செங்கமேடு இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் அருகில் உள்ள செங்கல்மேடு என்னுமிடத்தில் உள்ள சிற்பங்களாகும்.
அமைவிடம்
தொகுகங்கைகொண்டசோழபுரத்தை அடுத்துள்ள குறுக்குரோட்டிலிருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ள செங்கல்மேடு என்ற ஊர் மேலச்செங்கல்மேடு, கீழச்செங்கல்மேடு என இரு பகுதிகளாக அமைந்துள்ளது. கீழச்செங்கல்மேட்டில் உள்ள கோயிலில் இச்சிற்பங்கள் காணப்படுகின்றன.
வீரமாகாளியம்மன் கோயில்
தொகுஇச்சிற்பங்கள் செங்கமேட்டில் உள்ள ஒரே வளாகத்தில் அமைந்துள்ள இரு கோயில்களில் காணப்படுகின்றன. அங்குள்ள வீரமாகாளியம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள இரு தனித்தனி கட்டட அமைப்புகளில் இச்சிற்பங்கள் உள்ளன. சற்று உயர்ந்த கொட்டகையினைக் கொண்டமைந்துள்ள வளாகத்தில் ஒரு சிற்பமும், மற்றொரு வளாகத்தில் ஐந்து சிற்பங்களும் உள்ளன. இவற்றில் துர்க்கை, காளி, பைரவர், பைரவி சிற்பங்கள் உள்ளன.
வெற்றிச்சின்னங்கள்
தொகுதாம் வென்ற நாடுகளிலிருந்து சிற்பங்கள் தூண்கள் உள்ளிட்ட பல கலைப்பொருள்களை வெற்றிச்சின்னங்களாக சோழ மன்னர்கள் கொண்டு வந்துள்ளனர். [1] அவற்றில் முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனின் வெற்றியின் அடையாளமாக இந்த சிற்பங்கள் கலிங்க நாட்டிலிருந்து (தற்போதைய ஒடிசா மாநிலத்தின் வட பகுதி) கொண்டுவரப்பட்டதாகும். அவை செந்நிற மணற்கல்லால் ஆனவை என்றும், கலிங்க நாட்டு கலைப்பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகவும் தொல்லியல் துறையின் அறிவிப்புப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.